For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெற்றியடையுமா மார்க் ஜுக்கர்பெர்க்கின் புதிய சவால்!!!

|

தனக்கு இணை யாருமில்லை, தான் மிகவும் முன்னிலையில் இருக்கிறேன் என்றில்லாமல், யார் ஒருவன் தனக்குத்தானே சவாலை முன்னிறுத்திக் கொண்டு மீண்டும், மீண்டும் முன்னேறி செல்கிறானோ அவன் தான் வரலாற்றில் நூற்றாண்டுகள் கழிந்தாலும் நிலைபெற்று இருப்பான்.

இது முன்னாளில் அலெக்சாண்டருக்கு பொருந்தியது, இப்போது சமூக வலைதளத்தை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு உலாவரும் மார்க் ஜுக்கர்பெர்க்கும் பொருந்தும். தனது இணையம் முன்னிலையில் இருக்கின்ற போதும் கூட, மற்ற இணையங்கள் மற்றும் மக்களுக்கு இலவச இன்டர்நெட் என்று உலக தலைவர்களுடனும் உறவை வளர்த்துக் கொண்டு வளர்ந்து வருகிறார் மார்க்.

இந்த வருடம் இவர் தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்ட சவால் வர்த்தகம் சார்ந்தது அல்ல, ஆரோக்கியம் சார்ந்தது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்திறன் சவால்

உடற்திறன் சவால்

இந்த வருடம் தனது உடற்திறன் மீது அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார். தனது இணையத்தின் மூலம் அனைவரையும் ஒரே இடத்தில் முடக்கி வைத்துள்ள மார்க் ஜுக்கர்பெர்க், இந்த வருடம் ஓட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

365 மைல்கள்

365 மைல்கள்

ஒன்றல்ல, இரண்டல்ல நாள் ஒன்றுக்கு ஒரு மைல் என்ற கணக்கில் இந்த வருடம் முழுக்க 365 மைல்கள் ஓட போகிறேன் என்று தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார் மார்க் ஜுக்கர்பெர்க்.

மக்களுக்கு அழைப்பு

மக்களுக்கு அழைப்பு

தன்னுடன் சேர்ந்து பலரும் ஓடலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க். நீங்கள் என்னுடன் இணைவதை நாம் மிகவும் விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார் அவர்.

சென்ற வருடம்

சென்ற வருடம்

சென்ற வருடம் தனக்குத்தானே A year of books, என்ற சவாலை எடுத்துக் கொண்டு நிறைய புத்தகங்களை வாசித்து வந்தார் மார்க் ஜுக்கர்பெர்க். ஆனால், இந்த முறை தனது உடல்நலன் மீது அக்கறை கொண்டு இவர் எடுத்திருக்கும் இந்த சவால், இவருடன் இவர் விரும்பியது போலவே பலரையும் இணைத்துள்ளது.

தனி குரூப்

தனி குரூப்

இந்த வருடம் இவர் கையில் எடுத்திருக்கும் A year of running என்ற சவாலுக்கு அதன் பெயரிலேயே ஓர் குரூப்-யும் ஆரம்பித்துள்ளார். அதில் விருப்பமுள்ளவர்கள் இணைந்துக் கொள்ளலாம்.

கலந்துரையாடல்

கலந்துரையாடல்

தான் ஆரம்பித்துள்ள இந்த குரூப் மூலம் நாம் அனைவரும் கலந்துரையாட முடியும். மென்மேலும் இதுகுறித்து பல விஷயங்களை அறிந்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆரோக்கியமான 2016

ஆரோக்கியமான 2016

மேலும் தன்னை பின்தொடரும் அனைவருக்கும் ஆரோக்கியமான 2016 வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் மார்க் ஜுக்கர்பெர்க். தினமும் ஓடி பயிற்சி செய்வது உடலுக்கான ஓர் சிறந்த பயிற்சி ஆகும். இது தலை முதல் கால் வரை அணைத்து உடல் பாகங்களுக்கும் வலு சேர்க்கும். உடல் வலிமையை அதிகரிக்கும்.

ஓட்டப் பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள்

ஓட்டப் பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதால், எலும்பு மற்றும் தசை வலிமை அதிகரிக்கும், இதயத்தின் நலன் அதிகரிக்கும், உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை சீரான முறையில் பாதுகாக்க முடியும். உடல் எடையால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் தவிர்க்க ஓட்டப்பயிற்சி பயனளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mark Zuckerberg New Challenge

Founder of Facebook Mark Zuckerberg himself taken a challenge in 2016 to run for 365 miles.
Desktop Bottom Promotion