உங்களுக்கு கண்பார்வை பற்றிய விழிப்புணர்வு எந்த அளவிற்கு உள்ளது?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

கேட்கும் திறன், நுகரும் திறன், மற்றும் பேசும் திறனை விட பார்வை இழப்பது மோசமான பாதிப்பு என புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது.

ஈரானின் ஜமா பக்லைக்கழகம் ஒரு ஆய்வை ஆன்லைனில் நடத்தியது. இதில் 2,044 பேர் கலந்துகொண்டனர். எல்லாரும் ஏறக்குறைய 46 வயதிலிருந்தவர்கள். கண்பார்வைதான் மிகமுக்கியமான தேவை. கண் பாதிப்பால் உண்டாகும் துயரங்களை உணர்வதாக கூறியிருக்கின்றனர்.

Loss of vision is worst ailment

இவர்களில் 63 சதவீதத்தினர் கண்ணாடி அணிவதாகவும், 88 சதவீதத்தினர் நல்ல கண் பார்வைத் திறன் ஆரோக்கியமான உடல் நிலைக்கு சான்று எனவும், 47 சதவீதத்தினர் கண் பார்வை இழத்தல் மோசமான பாதிப்பு எனவும் கூறியிருக்கின்றனர்.

கண்பார்வை இழப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. சர்க்கரை வியாதியால்- குளுகோஸின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும்போது, அது கண்களின் உள்ள ரெட்டினாவை பாதிக்கிறது. இதனால் அங்கு திசுக்கள் வளர்ந்து, கண்களை பாதித்து டயாபடிச் ரெட்டினோபதியை தருகிறது.

Loss of vision is worst ailment

மரபு ரீதியாகவும் கண் பார்வை குறைபாடு உண்டாகும். மாலைக் கண் நோய், நிறக் குருடு ஆகியவற்றை சொல்லலாம். சக்தி வாய்ந்த சூரியக் கதிர்கள் ரெட்டினாவை பாதிக்கும். அது போல், புகைப்பழக்கத்தாலும் கண்பார்வை இழக்க நேரிடும். வயதின் காரணமாக வருவதுதான் கேடராக்ட்.

Loss of vision is worst ailment

ஆய்வில் பங்குகொண்டவர்களுக்கு கண்பற்றி விழிப்புணர்வு எப்படியிருக்கிறது என ஆராய்ந்ததில், 66 % கேடராக்ட் பற்றி தெரிந்திருக்கிறார்கள். 37 % டயாபடிக் ரெட்டினோபதி பற்றி தெரிந்திருக்கிறார்கள்.

25 சதவீதத்தினர் எந்த வித கண் நோயைப் பற்றியுமே தெரிந்திருக்கவில்லை. 76 % சதவீதத்தினர் சூரிய வெளிச்சத்தாலும் , 58% சதவீதத்தினர் மரபினாலும் கண்பார்வை இழக்க நேரிடும் என்பதை தெரிந்து வைத்துள்ளார்கள்.

Loss of vision is worst ailment

இவர்களில் பாதிபேருக்குதான் புகைப்பழக்கத்தினாலும் கண் பார்வை இழக்க நேரிடும் என தெரிந்து வைத்துள்ளனர்.

ஆரோக்கியமன கண்பார்வை , நல்ல உடல் நலத்திற்கும் உடல் இயக்கத்திற்கும் அத்தியாவசமானது என ஆராய்ச்சியாளர் அட்ரினே ஸ்காட் என்பவர் கூறுகிறார்.

English summary

Loss of vision is worst ailment

Loss of vision is worst ailment
Story first published: Monday, August 8, 2016, 18:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter