மனிதனின் உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் மரபணு கண்டுபிடிப்பு - ஆய்வாளர்கள் சாதனை!

By: Hemi Krish
Subscribe to Boldsky

வெளியில் சந்தோஷம் எங்கே இருக்கிறது என நாம் தேடிக்கொண்டிருக்க அது உனக்குள்ளதான் இருக்கிறது என நம் நாட்டு யோகிகள் கூறியது இன்று உண்மையாகியிருக்கிறது.

நெதர்லாந்தில் இருக்கும் ஆம்ஸ்டர்டாம் பல்கலைகழக பேராசிரியர்கள் மெய்க் பார்டெல்ஸ், ஃபிலிப் கோலிங்கர்ஆகிய இருவரும் சுமார் 298,000 பேரிடம் ஆராய்ச்சி நடத்தினர். ஆய்வின் முடிவில் மகிழ்ச்சி மற்றும் துக்கத்திற்கான மரபணுக்களை நமது உடலின் எந்த பாகத்தில் உள்ளது என கண்டுபிடித்துள்ளனர்.

Location of happiness gene in the body

மூன்று ஜீன்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும்.இரண்டு ஜீன்கள் மன அழுத்தத்திற்கான காரணிகளாகவும் உள்ளது.

எங்கே நிம்மதி?

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மரபணுக்கள் முக்கியமாக மைய நரம்பு மண்டலத்திலும்,கணையத்திலும், அட்ரினல் சுரப்பியிலும் வெளிப்படுகிறது. அதனால், இந்த உறுப்புகளுக்கு பலம் தரும் உணவுகளை உண்டால் மகிழ்ச்சியை உண்டாக்கலாம்.

Location of happiness gene in the body

முதலில் நெதர்லாந்தில் இரட்டையர்களிடமும், குடும்பத்தில் உள்ளவர்களிடமும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சந்தோஷத்தின் அளவு ஏன் மாறுபடுகிறது எனஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன் முடிவில் மரபணு மாறுப்பாட்டில் ஏற்படும் வேறுபாடே காரணம் என கண்டறிந்துள்ளனர்.

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடிய மனித உடலின் செயல்பாடுகளை ஆராய்ந்தும், நல்ல மனநல மற்றும் உடல்நிலைக்கான காரணிகளையும் கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.

இதனைப் பற்றி விரிவாக மரபியல் இதழிலும் (journal Nature Genetics) வெளியாகியுள்ளது.

English summary

Location of happiness gene in the body

Researchers found happiness genetic variants
Story first published: Tuesday, April 26, 2016, 15:45 [IST]
Subscribe Newsletter