Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
தொப்புள் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான 10 உண்மைகள்!
மனித உடலில் மிகவும் உன்னதமான உடல் உறுப்பாக கருதப்படுவது தொப்புள்கொடி தான். இது தான் தாயையும், சேயையும் பிணைந்து வைத்திருக்கும் உறுப்பு.
இதனால் தான் தமிழக கலாச்சாரத்தில் தொப்புள்கொடியை மிக புனிதமாக கருதுகின்றனர். மேலும், தொப்புள் தெரியும் படியிலான உடை மற்றும் கலாச்சாரத்தை வெறுக்கின்றனர்.
மற்ற உடல் உறுப்புகளுடன் ஒப்பிடுகையில் தொப்புள்கொடியை பற்றி பெரிதாக நாம் என்றும் யோசித்திருக்க மாட்டோம். அதன் அமைப்பு, அங்கு பாக்டீரியா தொற்றுக்கள் இருக்கிறதா இல்லையா என நம்மை எவ்வளவு பேர் கவனம் செலுத்தியிருப்போம் என்பது கேள்விக்குறி தான்.
ஒவ்வொருவரும் தொப்புள்கொடி பற்றிய இந்த பத்து உண்மைகளை தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

உண்மை #1
நமது உடலிலேயே தொப்புள் தான் மிகவும் அழுக்கான பகுதி. சராசரியாக ஒரு நபரின் தொப்புளில் 67 வகையிலான பாக்டீரியாக்கள் குடியிருக்கின்றன.

உண்மை #2
டி.என்.எ, கைரேகை, கண், நாக்கு, போன்றவற்றை போல உலகில் எல்லாருடைய தொப்புளும் தனி வடிவம் கொண்டுள்ளதாகும்.

உண்மை #3
தொப்புள்கொடி சரியாக உடலின் நாடு பகுதியில் இருக்கும் பெண்கள், ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள்.

உண்மை #4
நூறில் ஒருவருக்கு தான் தொப்புள் வெளியே எம்பியப்படி (Outie Belly Button Type) இருக்கும். அதாவது, உலகில் 4% பேரை தவிர மற்றவர்களுக்கு எல்லாம் தொப்புள் உள்ளிருக்கும் படி குழி போன்று தான் இருக்கிறது.

உண்மை #5
தொப்புள் வெளியே எம்பியது போன்று இருப்பதை தவறான முறை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. குழந்தை பிறக்கும் போது மருத்துவர்கள் சரியாக தொப்புள்கொடியை அறுக்காததால் இப்படி ஆகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உண்மை #6
சில காலை பொழுது நீங்கள் எழும் போது தொப்புளில் பஞ்சு போன்று ஒன்று உருவாகியிருப்பதை காண முடியும். பெண்களை விட ஆண்களுக்கு தான் இது அதிகமாக உருவாகிறது. இதற்கு காரணம் தொப்புளை சுற்றி இருக்கும் முடி தான். ஆண்களுக்கு இருப்பது போன்று அதிகமாக வயிறு பகுதியில் பெண்களுக்கு முடி இருப்பதில்லை என்பது தான் இதற்கான காரணம்.

உண்மை #7
தொப்புள்கொடி பாலூட்டி வகை உயிரினங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.

உண்மை #8
தொப்புள் பகுதியில் துளையிட்டு ரிங் மாட்டிக் கொள்வது இப்போது உலகின் பல பகுதியில் வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு தொப்புள் பகுதியில் குத்திக் கொள்வதால் உண்டாகும் காயம் ஆற ஒன்பது மாதங்கள் ஆகும்.

உண்மை #9
T வடிவிலான தொப்புள் தான் உலகிலேயே மிகவும் செக்ஸியான தொப்புள் என கருதப்படுகிறது.

உண்மை #10
உலகின் செக்ஸியான பெண் என பெயர் பெற்ற பெண்ணுக்கு தொப்புள் பகுதியே இல்லை.
உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!



Click it and Unblock the Notifications
