For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆரோக்கியம் சம்பந்தமான பொய்கள்!!!

By Ashok CR
|

இன்றைய நாகரீக உலகத்தில் அன்றாட பணியில் பலரும் அல்லல் படுவதால், அவர்களது வாழ்க்கையில் மன அழுத்தம் என்ற பேராபத்து உருவாகிறது என வல்லுனர்கள் கூறுகிறார்கள். அப்படி அன்றாட வாழ்க்கையில் நல்லது என எண்ணி நாம் ஈடுபடும் சில கெட்ட பழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

நம்மில் 90 சதவீதமானவர்களுக்கு காலையில் அலாரத்தை ஆஃப் செய்து விட்டு, மீண்டும் தூங்கும் பழக்கம் இருக்கும். காலையில் இப்படியான இடையூறான தூக்கம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லதல்ல. காலையில் ஒரு நேரத்திற்கு அலாரம் வைத்திருந்தீர்கள் என்றால், அந்த நேரத்தில் எழுத்து கிளம்பும் பழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

அலாரத்தை இடைவெளி விட்டு அடிக்க செய்து, மீண்டும் தூங்க சென்றால், அது உங்கள் உடலை அதிக மந்தமாகவே மாற்றும். அதே போல், வார இறுதியில் மது அருந்துவது என்பது நாம் பின்பற்றும் மற்றொரு ஆரோக்கியமற்ற பழக்கமும், ஆரோக்கியம் சம்பந்தமான பொய்யும் ஆகும். மது பானத்தோடு அதிக கலோரிகளை அடங்கிய உணவுகளை வார இறுதியில் உள்ளே தள்ளுவதால், உங்கள் உடல் எடை அதிகரிக்கவே போகிறது. நீங்கள் பின்பற்றக் கூடிய ஆரோக்கியமற்ற பழக்கத்தில் இதுவும் ஒன்றே.

கண்டிப்பான உணவு பழக்கமும் சமநிலையான உணவுகளும் தான் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும். நீங்க எதற்காக இப்போ காத்திருக்கீங்க? ஒவ்வொரு நாளும், நாம் சொல்லக்கூடிய ஆரோக்கியம் சம்பந்தான பொய்களைப் பற்றி பார்க்கலாமா? இத்தகைய பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான நேரம் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்கும் நேரம்

தூங்கும் நேரம்

வெறும் 6 மணிநேரம் போதும் என இல்லாமல், ஒவ்வொரு நாள் இரவும் 7-8 மணிநேர தூக்கம் தேவை. உங்கள் உடலுக்கு அதிக நேரத்திற்கு ஓய்வு தேவை. அப்போது தான் உங்களால் ஆற்றல் திறனுடனும், ஆரோக்கியத்துடனும் காலையில் கண் விழிக்க முடியும்.

வார இறுதி குடிப்பழக்கம்

வார இறுதி குடிப்பழக்கம்

வார இறுதியில் மட்டும் தானே என எண்ணி, மதுபானம் குடிப்பது ஆரோக்கியமற்றது. வார இறுதியில் வயிறு முட்ட குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இது உங்களின் ஒட்டுமொத்த நரம்பியல் அமைப்பையும் பாதித்துவிடும். நீங்கள் ஒன்றோ அல்லது இரண்டு பெக் மட்டும் குடிக்க விரும்புபவர் என்றால், குறைந்த அளவில் குடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதேப்போல் அவற்றுடன் சோடா பானங்களை கலக்கும் பழக்கத்தையும் கைவிடுங்கள். அது உறுப்புகளுக்கு நல்லதல்ல.

உணவுகளைத் தவிர்ப்பது

உணவுகளைத் தவிர்ப்பது

உணவுகளைத் தவிர்ப்பதால் கண்டிப்பாக உங்கள் உடல எடை குறைய போவதில்லை. அது உடல் எடையை அதிகரிக்க தான் போகிறது. இதனால் நீங்கள் சோம்பேறியாகவும், வலுவிழந்தும் போவீர்கள். இதன் காரணமாக உங்கள் உடல் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக எதிர்ப்பார்க்கும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

எப்போதாவாது புகைப்பிடிப்பதோ அல்லது புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பதோ உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடாது என எண்ணி விடாதீர்கள். இரண்டு வழிகளிலும், நீங்கள் கார்பனை நுரையீரலுக்குள் சுவாசிக்கிறீர்கள். இதனால் நீங்கள் நீண்ட நாள் வாழ முடியாமல் போகும். அதனால் புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்தால் வாயை மூடிக்கொள்ளவும். அப்பழக்கம் இருந்தால் அதனை கைவிடவும்.

காபி vs கோக்

காபி vs கோக்

காபியை கோக் பானத்திற்கு மாற்றாக எண்ணக்கூடாது என கூறுகிறார்கள். ஏனென்றால் இவை இரண்டிலுமே காப்ஃபைன் போன்ற சமமான அளவிலான எதிர்மறை குணங்கள் அடங்கியுள்ளது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொஞ்சமாக காபி குடிக்கலாம். அதேப்போல் தான் கோக் பானமும். ஆனால் பெரும்பாலும் அவைகளை பருக அறிவுறுத்தப்படுவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Lies We Tell Ourselves

Here are some health lies we often tell ourselves. It is time we learn to let go of these lies and follow a healthy lifestyle.
Story first published: Saturday, January 9, 2016, 16:39 [IST]
Desktop Bottom Promotion