தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நிறைய பேர் குறிப்பிட்ட ஹார்மோன் குறைபாடுகளால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் ஒன்று தான் ஆரோக்கியமற்ற தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டால் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு. உடலில் பல்வேறு செயல்பாடுகளில் தைராய்டு ஹார்மோன் முக்கிய பங்கை வகிக்கிறது.

அத்தகைய ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால், உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். பொதுவாக தைராய்டு சுரப்பியில் இரு வகையான பிரச்சனைகள் ஏற்படும். அதில் ஹைப்போ என்னும் குறைவான தைராய்டு ஹார்மோன் மற்றும் ஹைப்பர் என்னும் அளவுக்கு அதிகமான தைராய்டு ஹார்மோனின் சுரப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஒருவருக்கு தைராய்டு ஹார்மோன் பழக்கவழக்கங்களால் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. எனவே பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம், தைராய்டு சுரப்பியை ஆராக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இங்கு தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்ப வரலாறு

குடும்ப வரலாறு

உங்களுக்கு தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உள்ளதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பரம்பரையில் யாருக்கேனும் இருந்தால், தைராய்டு பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியான இரத்த பரிசோதனை

தொடர்ச்சியான இரத்த பரிசோதனை

நீங்கள் இதுவரை இரத்த பரிசோதனை செய்து பார்க்காமல் இருந்தால், உடனே அப்பழக்கத்தை கைவிடுங்கள். இரத்த பரிசோதனையை ஒருவர் அடிக்கடி செய்து வந்தால், பல நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். முக்கியமாக தைராய்டு முற்றுவதைத் தவிர்க்கலாம்.

போதிய அயோடின்

போதிய அயோடின்

தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருக்க, தினமும் சரியான அளவில் அயோடினை எடுத்து வாருங்கள். அதுவும் உப்பு வழியாக மட்டுமின்றி, காய்கறிகள், இறைச்சி வழியாகவும் எடுங்கள்.

காய்கறிகள்

காய்கறிகள்

காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருக்கும்.

மருந்துகள்

மருந்துகள்

தைராய்டு பிரச்சனை இருந்து, அதற்கு மருத்துவர் மருந்துகளை பரிந்துரைத்திருந்தால், அந்த மருந்துகளை தவறாமல் தினமும் எடுத்து வாருங்கள். இதன் மூலம் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.

யோகா

யோகா

தைராய்டு சுரப்பியை தினமும் யோகா செய்வதன் மூலமும், தியானம் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வு ஒன்றிலும் யோகா ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சீராக்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஆரோக்கியமான தைராய்டு சுரப்பிக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான நெய், அவகேடோ, நட்ஸ் போன்றவற்றை அன்றாட உணவில் சிறிது சேர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Habits You Must Follow For A Healthy Thyroid Gland

Wondering how you can have a healthy thyroid gland? Follow these tips for a healthy thyroid gland..
Story first published: Saturday, September 3, 2016, 16:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter