மலச்சிக்கலைப் போக்க இஞ்சியை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவரும் மலச்சிக்கல் பிரச்சனையை கட்டாயம் சந்தித்திருப்போம். சிலருக்கு இப்பிரச்சனை முற்றிய நிலையில் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதை சரிசெய்ய பலவற்றை முயற்சித்திருப்பார்கள்.

அதில் மலச்சிக்கலைப் போக்க இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இஞ்சியில் இயற்கையாக மலமிளக்கும் மன்மை உள்ளது. எனவே இவற்றை மலச்சிக்கலின் போது எடுத்தால், குடலியக்கம் சீராக செயல்படும்.

இங்கு மலச்சிக்கலைப் போக்க இஞ்சியை எப்படியெல்லாம் எடுக்கலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இஞ்சியின் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு, மெதுவாக மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இதன் மூலம் செரிமானம் மேம்படுத்தப்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுதலை கிடைக்கும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு

இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, அத்துடன் சுடுநீரை ஊற்றி தேன் கலந்து தினமும் 2-3 டம்ளர் குடித்து வர, மலச்சிக்கல் குணமாகும்.

கரும்பு ஜூஸ் மற்றும் இஞ்சி

கரும்பு ஜூஸ் மற்றும் இஞ்சி

கரும்பு ஜூஸில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கலாம்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி தேன் கலந்து குடிக்க, குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் நீங்கும்.

சூப்

சூப்

வெஜிடேபிள் சூப் செய்து, அத்துடன் இஞ்சியை துருவிப் போட்டு குடித்து வர, மலச்சிக்கல் குணமாகும்.

வேறு சில நன்மைகள்

வேறு சில நன்மைகள்

இஞ்சியை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் அதில் உள்ள ஜிஞ்செரால் என்னும் பொருள், குமட்டல், சளி, இருமல், மூட்டு பிரச்சனைகள், இதய நோய்கள், புற்றுநோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ginger for constipation: Five quick serving ideas!

Here are five ways to use ginger for constipation and other health disorders. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter