பெண்கள் திடீரென்று குண்டாவதற்கான காரணம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். உடல் பருமனால் ஆண்களுக்கு மட்டும் தான் வேறுபல பிரச்சனைகள் வரும் என்பதில்லை, பெண்களுக்கும் தான். அதில் இதய நோய்கள் முதல் மூட்டு வலி வரை அனைத்தும் குறிப்பிடத்தக்கவை.

சொல்லப்போனால் ஆண்களை விட பெண்கள் தான் அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகின்றனர். இந்த உடல் பருமனைக் குறைக்க, முதலில் எதற்காக குண்டாகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு பெண்கள் திடீரென்று குண்டாவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்

பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும் போது, உடல் பருமனடைகிறது. மேலும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது, பெண்களின் மனநிலையிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, கண்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து, அதனால் கண்டதை உட்கொண்டு உடல் எடை அதிகரிக்கிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஆண்களை விட பெண்கள் தான் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மன அழுத்தம் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் ஒன்று. இது உடலில் அட்ரீனல் சுரப்பியில் இருந்து கார்டிசோல் அளவை அதிகமாக உற்பத்தி செய்து, அதன் காரணமாக உடல் பருமனடையச் செய்கிறது.

மோசமான உணவுப் பழக்கம்

மோசமான உணவுப் பழக்கம்

மோசமான உணவுப் பழக்கத்தினாலும் பெண்கள் வேகமாக உடல் பருமனடைகின்றனர். சில நேரங்களில் உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் பல கிலோ எடைகளை சுமக்க நேரிடுகிறது. மேலும் கலோரிகள் அதிகமான உணவுகளை அதிகமாக உட்கொள்வதனாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

மருந்துகள்

மருந்துகள்

பெண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கு மருந்து மாத்திரைகளும் ஓர் காரணம். ஒருசில மருந்து மாத்திரைகளின் பக்க விளைவால் உடல் வேகமாக பருமடையும். எனவே எந்த ஒரு மாத்திரையை எடுக்கும் முன்பும், மருத்துவரிடம் கேட்டு அனுமதி பெற்று பின் எடுத்து வாருங்கள்.

இன்சுலின்

இன்சுலின்

35 வயதைக் கடந்த பின், பெண்கள் வெள்ளை நிற உணவை உட்கொண்டதன் விளைவை சந்திப்பார்கள். வெள்ளை நிற உணவுப் பொருட்களில் கலோரிகள், சர்க்கரை போன்றவை அதிகம் உள்ளது. இவற்றை அதிகம் எடுத்து வந்தால், உடல் செல்கள் இன்சுலினை எதிர்க்கும். இதன விளைவாக உடல் பருமனடையும்.

சோம்பேறியாக இருப்பது

சோம்பேறியாக இருப்பது

ஆண்களை விட பெண்களிடம் உடல் உழைப்பு குறைவாக இருக்கும். இதன் காரணமாக உண்ட உணவுகள் செரிமானமாகாமல் அவை கொழுப்புக்களான படிந்து, உடல் பருமனை அதிகரித்துவிடும்.

பசியின்மை

பசியின்மை

பசியின்மை அதிகமாக இருப்பது என்பது ஆபத்தானது. இப்படி பசியின்மை முற்றிய நிலையில் இருந்தால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். எனவே பசியின்மை உங்களுக்கு இருப்பின், அதனை சாதாரணமாக எண்ணாமல் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

முதுமை

முதுமை

வயதாக ஆக உடல் பலவீனமாகும். மேலும் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய முடியாமல் போய், உடலியக்கம் குறைந்து, உடலின் மெட்டபாலிசமும் குறைந்து, திடீரென்று உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Reasons Why Women Suddenly Gain Weight

Here are some of the realistic reasons why women gain weight. If you take a look at these reasons it will stun you. So ladies, go ahead and take a peek.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter