Latest Updates
-
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை?
Sonia Gandhi: மூத்த காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ராஜஸ்தானைச் சேர்ந்த 79 வயதான மாநிலங்களவை உறுப்பினரான சோனியா காந்தி, சமீப ஆண்டுகளில் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து, டெல்லி மற்றும் பிற இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் பலமுறை சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் மே 13 ஆம் தேதி புதன்கிழமை காலை வயிற்று பிரச்சனை காரணமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் உள்ளனர். இருப்பினும் அவருக்கு மேற்கொள்ளவிருக்கும் அறுவை சிகிச்சை முறை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சோனியா காந்திக்கு என்ன பிரச்சனை?
முன்னதாக சோனியா காந்தி கடந்த மார்ச் 24 ஆம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், உடல் முழுவதும் பரவியிருந்த நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது, அதற்காக அவருக்கு ஆன்டிபயாடிக் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கு முன்பு, அவர் வழக்கமான பரிசோதனைக்காக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்பு நோய் நிபுணரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். ஏனெனில் இவருக்கு நாள்பட்ட இருமல் பிரச்சனை மற்றும் நுரையீரல் தொற்றுகள் உள்ளன.
மேலும் சோனியா காந்தி பலமுறை உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுவும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் வயிறு தொடர்பான பிரச்சனைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் இரைப்பை குடல் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். சொல்லப்போனால் 2025 ஆம் ஆண்டில் மட்டும் குறைந்தது மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, 2011 ஆம் ஆண்டு இவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது தவிர 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் மருத்துவப் பரிசோதனைக்காக சோனியா காந்தி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
மாநிலங்களவைக்கு வருவதற்கு முன்பு ஐந்து முறை மக்களவை உறுப்பினராக இருந்த சோனியா காந்தி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். அவர் இரண்டு முறை காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கட்சியின் அமைப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் முக்கிய பங்கைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications