Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முழங்கால் மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தைப் புதுப்பிக்க இத தினமும் 2 டீஸ்பூன் சாப்பிடுங்க...
முழங்கால் மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை சீராக்கவும், எலும்புகளின் அமைப்பை மேம்படுத்தவும், மூட்டுகளில் உள்ள தசைநார்களை வலிமையாக்கவும் ஓர் அற்புத மருந்து ஒன்று உள்ளது.
ஆரோக்கியமற்ற உடல் நிலைகள் தான் மூட்டுகள், கால் மற்றும் முதுகுப் பகுதிகளில் வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இது அப்படியே நீடித்தால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே மூட்டு, முதுகு, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டால், அதை உடனே சரிசெய்ய முயல வேண்டும்.

முழங்கால் மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை சீராக்கவும், எலும்புகளின் அமைப்பை மேம்படுத்தவும், மூட்டுகளில் உள்ள தசைநார்களை வலிமையாக்கவும் ஓர் அற்புத மருந்து ஒன்று உள்ளது. அந்த மருந்து என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்:
உலர் திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்
ஜெலட்டின் - 2 டேபிள் ஸ்பூன்
ஆளி விதை - 8 டீஸ்பூன்
எள் - 4 டேபிள் ஸ்பூன்
பூசணி விதை - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 200 கிராம்

தயாரிக்கும் முறை:
ஒரு பெரிய பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதனை ஒரு கண்ணாடி பௌலில் போட்டு சேகரித்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
இந்த கலவையை தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டீஸ்பூன் மற்றும் மதிய உணவிற்கு முன் ஒரு டீஸ்பூன் என சாப்பிட வேண்டும்.

நன்மைகள்
இந்த சிகிச்சையை மேற்கொண்டால், நம் எலும்புகளை இணைக்கும் மூட்டுப் பகுதியில் உள்ள தசைநார்களின் நெகிழ்வுத்தன்மை மேம்படும் மற்றும் எலும்புகளும், மூட்டுக்களும் வலிமையடையும். அதுமட்டுமின்றி, இது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடல் எடையையும் குறைக்க உதவும்.

குறிப்பு
இதுவரை மூட்டு பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், அவற்றை நிறுத்திவிட்டு, இந்த இயற்கை வழியைப் பின்பற்றும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications