ஏன் ஒருமுறை சூடு செய்த நீரை, மறுமுறை சூடு செய்து குடிக்க கூடாது என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக ஒருமுறை சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பார்கள். அதே போல தான் சிலவகை உணவுகளை மீண்டும் சூடு செய்து உண்ணக் கூடாது.

அரிசி, உருளைக்கிழங்கு, மஷ்ரூம், சிக்கன் போன்ற உணவுகளை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதால் உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு விளையும். ஆனால், நாம் குக்டிக்கும் தண்ணீரை கூட மறுமுறை சூடு செய்துக் குடிக்க கூடாது என உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழாய் நீரும், கெமிக்கலும்!

குழாய் நீரும், கெமிக்கலும்!

குழாயில் நீங்கள் பிடித்து குடிக்கும் தண்ணீர் அவ்வளவு நல்லது அல்ல. அதில் 316 வகையிலான கெமிக்கல் கலப்பு இருக்கலாம்.

ஆர்சனிக்

குளோரின்

எரிபொருள் ஓட்டு

கன உலோகங்கள்

தொழிற்துறை கரைப்பான்கள்

கதிரியக்க ஓரிடத்தான்கள்

ஃபுளோரைடு, மற்றும் பல கலப்புகள் சேர்ந்து தான் குழாய் நீரில் வருகின்றன.

சூடு செய்தல்!

சூடு செய்தல்!

நீங்கள் நீரை சூடு செய்யும் போது இந்த கெமிக்கல்கள் நீக்கப்படுவதில்லை. நுண்ணுயிர்கள் தான் அழிகின்றன.

உண்மையில் நீரை சூடு செய்யும் போது இந்த கெமிக்கல்கள் செறிவடைகின்றன. தண்ணீர் ஆவியாகிறது, இந்த கெமிக்கல்கள் அப்படியே படிந்து தங்கிவிடுகின்றன.

மோசம்!

மோசம்!

இப்படி தண்ணீரில் தங்கும் கெமிக்கல்கள், தண்ணீரை மிகவும் மோசமாக செய்கிறது. எனவே, மீண்டும், மீண்டும் தண்ணீரை சூடு செய்வதால் இது அதிக அபாயமாகிறது.

அபாயங்கள்!

அபாயங்கள்!

ஆர்சனிக் குமட்டல், வானது, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உண்டாக காரணியாக இருக்கிறது. நாள்ப்பட இது புற்றுநோய் செல்களை கூட உண்டாக்கலாம்.

குளோரின்!

குளோரின்!

அதிக சொறிவுற்ற குளோரின் புற்று நோய் கட்டிகள் உண்டாவதற்கு 93% காரணியாக இருக்கிறது.

எனவே, குழாய் நீரை மறுபடியும், மறுபடியும் சூடு செய்து குடிக்க வேண்டாம்.

மைக்ரோவேவ்!

மைக்ரோவேவ்!

சிலர் மைக்ரோவேவில் டீயை சூடு செய்து குடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது மிகப்பெரிய அபாயகரமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சூப்பர்ஹீட்!

சூப்பர்ஹீட்!

மைர்க்ரோவேவ் தண்ணீர் மூலக்கூறுகளை வேகமாக சூடு செய்யும் தன்மை கொண்டது. இதனால், மூலக்கூறுகள் ஆவியாகும் முன்னரே அதிக சூடு ஆகிறது. இந்நிலையில் தண்ணீரை "சூப்பர்ஹீட்" நிலையை அடைந்ததாக கூறுகின்றனர்.

கொதிநிலை அடையாமல், நீர் கொதிக்காமலேயே மைக்ரோவேவ் நீரை அதிக சூடாக்குகிறது. இதனால் மைக்ரோவேவில் தண்ணீரை சூடு செய்து குடிப்பது, டீ போன்றவற்றை சூடு செய்வது சரியான முறையல்ல என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did You Know? We SHould Not Reheat Water!

Never reheat water, these are the two reasons you should not do that.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter