For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய்க்கும் நிமோனியாவிற்கும் என்ன தொடர்பு ?

வாய்க்கும் நிமோனியாவிற்கும் என்ன தொடர்பு ?

By Super Admin
|

கேட்கவே ஆச்சரியமாக இருக்கா? ஆனால் ஒரு அண்மைய ஆய்வு சீரான இடைவெளியில் நீங்கள் செய்துகொள்ளும் பற்கள் பரிசோதனை பற்களை மட்டுமல்லாது உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் உதவும் என தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கைகளின்படி பல் மருத்துவரை அவ்வப்போது சந்திப்பதும் பற்களை சுத்தம் செய்துகொள்வதும் சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலை பாதிக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைக் குறைத்து நிமோனியாவை வராமல் தடுக்கும் எனது தெரிவிக்கின்றன.

Did You Know That A Good Oral Health Can Also Help You Avoid Pneumonia?

பல் டாக்டர்கிட்ட போகணும்னா வெறுப்பு. வாயத் தொறந்துக்கிட்டு எவ்வளவு நேரம் உட்கார்ந்து வழிய பொறுத்துக்குறதுனு நீங்க நெனச்சா, உயிருக்கு ஆபத்தான நிமோனியாவை குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு குழந்தைகளுக்கும் நுரையீரல் பாதிப்படைந்தவர்களுக்கும் இது ஒரு முக்கியமான கவனிக்கவேண்டிய விஷயம்.

இந்த ஆய்வின்படி பல் மருத்துவரைப் பார்க்கத்தேவையில்லை என்று கருதியவர்கள் பல் மருத்துவர்களை ஒரு வருடத்தில் இருமுறையாவது பார்ப்பவர்களை ஒப்பிடுகையில் நிமோனியாத் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு 86 சதவிகிதம் அதிகம் வாய்ப்புள்ளது.

இந்த ஆராய்ச்சியை நடத்திய வல்லுநர்கள் வாயின் ஆரோக்கியத்திற்கும் நிமோனியாவிற்கும் தொடர்புள்ளது என கூறியிருக்கிறார்கள். வாயை பாக்டீரியாக்கள் முற்றிலும் இன்றி வைத்துக்கொள்ள இயலாது என்றாலும் காண்டவற்றை நாம் வாயில் போடுவதால் அதில் பாக்டீரியா பரவலை தடுக்க சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதன் சாராம்சம் என்னவென்றால் வாயினை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பதுதான்.

வாய்ச சுத்தமும் நிமோனியாவும் - மேலும் பல தகவல்கள்

வாயில் உள்ள கிருமிகள் சுவாசத்தின்போது உள்சென்று மார்புப் பகுதியில் நோய்த் தோற்று ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைவதால் இது நுரையீரலை பாதிக்கும் அபாயம் உள்ளது பல் ஈறுகளில் பிரச்சனை உள்ளவர்கள்கூட நிமோனியா பாதிப்பிற்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

ஸ்ட்ரெப்டோகோக்கஸ் நிமோனியா enra நிமோனியா தொற்றுக்கான முக்கிய காரணி மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிமூலம் ஆரோக்கியமாக உள்ளவருக்கும் கூட பரவக் கூடியது. மூச்சை உள்ளிழுக்கும்போது நுரையீரலை இது பாதிக்கும்.

கவனமாக இருப்பது எப்படி?

உங்கள் வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை கவனமாகக் கண்காணிப்பதன் மூலம் ஆபத்தான நுரையீரல் தொற்றைத் தவிர்க்கலாம்.

ப்ளூரைடு டூத்பேஸ்ட்டைக் கொண்டு நாளைக்கு இருமுறை பல் துலக்குவதும், நன்கு கொப்பளித்து பல் அடுக்குகளையும் பல் முனைகளையும் நன்கு சுத்தம் செய்வதும், சாப்பிட்டபின் குறிப்பக இனிப்புகளை சாப்பிட்டபின் நன்கு வாய் கொப்பளிப்பதும், மற்றும் அவ்வப்போது பல் மருத்துவரிடம் சென்று ஆய்வுசெய்துகொள்ளுவதும் நிமோனியா வராமல் தடுக்கும்.

உங்கள் கைகளை சாப்பிட்டபின் நன்கு சுத்தம் செய்வது உங்கள் கை மூலம் வாய்க்குள் கிருமிகள் செல்லாமல் முதலிலேயே தடுக்கும் என்பது மிகவும் முக்கியமாக நீங்கள் கவனிக்கவேண்டிய ஒன்று.

English summary

Did You Know That A Good Oral Health Can Also Help You Avoid Pneumonia?

Did You Know That A Good Oral Health Can Also Help You Avoid Pneumonia?
Story first published: Sunday, November 6, 2016, 12:00 [IST]
Desktop Bottom Promotion