For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

42 நாட்கள் தொடர்ந்து கொத்தமல்லி சாப்பிடுவதால் நீங்கள் பெறும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் உலோக தன்மை கொண்ட பொருட்களை சிறுநீர் வழியாக அகற்ற கொத்தமல்லி எப்படி உதவுகிறது என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

முன்பு காய்கறி வாங்க சென்றால் கொசுறாக கொடுக்கப்பட்டு வந்த உணவு பொருள் தான் கொத்தமல்லி. பிறகு சில்லறைக்கு பதிலாக 50 பைசா, ஒரு ரூபாய்க்கு கொடுத்து வந்தனர். இப்போது, இதுவே தனியாக ஐந்து, பத்து ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Cilantro can Remove 80% of Heavy Metals from the Body within 42 Days.

குறைந்த விலையில் உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக மேம்படுத்த உதவும் உணவுப் பொருள் கொத்தமல்லி. பெரும்பாலான உணவில் நாம் இதை சேர்த்து சாப்பிட ஏதுவான உணவு பொருள்.

42 நாட்கள் தொடர்ந்து கொத்தமல்லி சாப்பிடுவதால், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் உலோக தன்மை கொண்ட பொருட்களை சிறுநீர் வழியாக அகற்ற கொத்தமல்லி உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

ஒரு கைப்பிடி அளவி கொத்தமல்லியை உங்கள் உணவில் தினமும் சேர்த்து வந்தால் போதுமானது. இதை எந்த காய்கறி உடனும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். ஸ்மூதியாக அரைத்து பருகலாம்.

சிற்றுண்டிக்கு நீங்கள் சமைக்கும் எந்த சட்னியிலும் இதை கலந்து உண்ணலாம். ஏன் இதையே சட்னியாக கூட சமைத்து சேர்த்து சாப்பிடலாம்.

கொத்தமல்லி ரெசிபி!

கொத்தமல்லி ரெசிபி!

தேவையான பொருட்கள்:

- அரை கப் நீர்

- அரை கப் ஆப்பிள் ஜூஸ்

- நறுக்கிய கொத்தமல்லி அரை கப்

- ஒரு டீஸ்பூன் அருகம்புல் பவுடர்

இதை அனைத்தையும் நன்கு ஸ்மூதியாக ஆகும் வரை மிக்ஸியில் போட்டு அரைத்து. குடிக்கவும். இது உடல் ஆரோக்கியம் மேம்பட வெகுவாக உதவும்.

கொத்தமல்லி எண்ணெய் (Cilantro Essential Oil)

கொத்தமல்லி எண்ணெய் (Cilantro Essential Oil)

கொத்தமல்லி எண்ணெய் உங்களது உடலில் உள்ள நச்சுக்கள், உலோக தன்மை கொண்டுள்ள சேர்ப்புகளை நீக்க உதவுகிறது. மேலும், இவற்றை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது.

நீங்கள் குடிக்கும் நீரில் இதை சிறிதளவு சேர்த்து கலந்து குடித்து வந்தால் நல்ல ஆரோக்கிய மாற்றத்தை உணரலாம்.

கொத்தமல்லி ஊட்டச்சத்துக்கள்!

கொத்தமல்லி ஊட்டச்சத்துக்கள்!

அற்புத நன்மைகள் அளிக்கும் கொத்தமல்லியில்..,

* கால்சியம்,

* இரும்பு,

* பொட்டாசியம்,

* மாங்கனீசு,

* மெக்னீசியம்,

* வைட்டமின் ஏ மற்றும் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

இது சிறந்த கிருமி நாசினி, அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டதும் ஆகும்.

கொத்தமல்லி நன்மைகள்!

கொத்தமல்லி நன்மைகள்!

மூளை சீரழிவு,

இதய நோய்,

சிறுநீரக நோய்,

நுரையீரல் நோய்,

பலவீனமான எலும்புகள்,

உணர்ச்சி பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் போன்ற பல தீவிரமான பாதிப்புகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cilantro can Remove 80% of Heavy Metals from the Body within 42 Days.

Cilantro can Remove 80% of Heavy Metals from the Body within 42 Days
Desktop Bottom Promotion