காது பிரச்சனைகளும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

வாய் துர்நாற்றம் ஒருவரது சமூக வாழ்க்கையை மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் பாதிக்கும். பொதுவாக வாய் துர்நாற்றமானது சொத்தைப் பற்கள், வாய் வறட்சி, மோசமான வாய் சுகாதாரம் மற்றும் சுவாச பாதை தொற்றுகள் போன்றவற்றால் ஏற்படும்.

Causes Of Bad Breath That Can Be Treated By An ENT Doctor

அதோடு, காது மூக்கு தொண்டை போன்ற இடங்களில் உள்ள பிரச்சனைகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இங்கு வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் அந்த காது மூக்கு தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுமையான அடிநா அழற்சி

கடுமையான அடிநா அழற்சி

உள்நாக்கில் வைரஸ் அல்லது பாக்டீரியாக்களின் தாக்கம் கடுமையாக இருந்தால், அதனால் வாய் துர்நாற்றம் கடுமையாக இருக்கும். இம்மாதிரியான நோய்த்தொற்றுக்கள் வாய் சுகாதாரத்தினால் மட்டும் போகாது, மருத்துவரின் உதவியுடன் தான் இப்பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

அதிகப்படியான சளி

அதிகப்படியான சளி

நோயாளியின் மூக்கு மற்றும் தொண்டையின் பின்புறத்தில் சளியின் உற்பத்தி அதிகம் இருந்தால், அதன் காரணமாக துர்நாற்றமிக்க சுவாசத்தால் அவஸ்தைப்படக்கூடும். இந்த பிரச்சனையை ஆன்டி-பயாடிக்ஸ் மூலம் சரிசெய்யலாம். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

சைனஸ்

சைனஸ்

சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், என்ன தான் வாய் துர்நாற்றத்தைப் போக்க இயற்கை வழிகளைப் பின்பற்றினாலும், சைனஸ் சுரப்பியில் உள்ள நோய்த்தொற்றுகள், சளியின் தேக்கத்தை அதிகரிப்பதோடு, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

நாள்பட்ட நாசி அழற்சி

நாள்பட்ட நாசி அழற்சி

நாள்பட்ட நாசி அழற்சியினால், நாசி குழி தடித்து, பாக்டீரியாக்களின் தாக்கத்தால், கடுமையான வாய் துர்நாற்றத்தை உருவாக்கும். இந்த பிரச்சனைக்கு ஆன்டி-பயாடிக்ஸ் நல்ல சிகிச்சை அளிக்கும்.

பிளவுபட்ட உதடுகள்

பிளவுபட்ட உதடுகள்

பிளவுபட்ட உதடுகள் இருந்தாலும், அது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Causes Of Bad Breath That Can Be Treated By An ENT Doctor

Here are some causes of bad breath that can be treated by an ENT doctor. Read on to know more...
Story first published: Monday, October 24, 2016, 17:44 [IST]
Subscribe Newsletter