மாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்களாய் பிறந்தால் ஒவ்வொரு மாதமும் 4-6 நாட்கள் மிகுந்த தொல்லை தரக்கூடியதாய் இருக்கும். இந்நாட்களில் பெண்களின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். முன்பெல்லாம் பெண்கள் இந்நாட்களில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். எந்த ஒரு செயலையும் செய்யவிடமாட்டார்கள்.

Bad Habits That You Must Break During Periods

ஆனால் இக்காலத்திலோ பெண்கள் மாதவிடாய் காலம் என்று பாராமல் அனைத்து செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

முக்கியமாக இக்காலத்தில் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும். அதோடு ஒருசில செயல்களைத் தவிர்க்க வேண்டும். கீழே அந்த செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல் #1

செயல் #1

நாள் முழுவதும் ஒரே பேடைப் பயன்படுத்தும் பழக்கத்தை முதலில் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது யோனிப் பகுதியில் நோய்த்தொற்றுகள் மற்றும் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இரத்தக்கசிவு உள்ளதோ இல்லையோ, 3-5 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடை மாற்ற வேண்டியது அவசியம்.

செயல் #2

செயல் #2

மாதவிடாய் காலத்தில் ஏற்கனவே கடுமையான வலியை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இக்காலத்தில் வேக்சிங், த்ரெட்டிங் போன்றவற்றை மேற்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

செயல் #3

செயல் #3

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்தொற்றுக்களால் மிகுந்த அவஸ்தைப்படக்கூடும். ஆகவே மாதவிடாய் சுழற்சியின் போது சற்று கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

செயல் #4

செயல் #4

மாதவிடாய் சுழற்சியின் போது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு நேரும்.

செயல் #5

செயல் #5

மாதவிடாய் காலத்தில் உணவுகளைத் தவிர்க்காதீர்கள். ஏற்கனவே இக்காலத்தில் ஆற்றல் குறைவாக இருப்பதோடு, இரத்தமும் வெளியேறி இருக்கும். ஆகவே தினமும் மூன்று வேளை தவறாமல் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி ஸ்நாக்ஸ் எதையேனும் சாப்பிட வேண்டும்.

செயல் #6

செயல் #6

மாதவிடாய் கால பிடிப்புக்களால் இரவில் தூங்குவது என்பது கடினமாக இருக்கும். ஆனால் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

செயல் #7

செயல் #7

பால் பொருட்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை மோசமாக்கும். இதற்கு பால் பொருட்களில் உள்ள அராசிடோனிக் அமிலம் தான் காரணம். ஆகவே பால் பொருட்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

செயல் #8

செயல் #8

மனதை வருத்தமடையச் செய்யும் திரைப்படங்கள் மற்றும் பாடல்களைக் கேட்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இவை மனரீதியான ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bad Habits That You Must Break During Periods

Here are some bad habits that you must break during periods. Read on to know more...
Story first published: Monday, October 24, 2016, 13:42 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter