ஏன் காலையில் கேரட் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து குடிக்க வேண்டும் என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளின் மேல் உள்ள மோகத்தினால், தற்போது பலரும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவதில்லை. என்ன தான் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், அவற்றைக் கண்டதும் வாங்கி சாப்பிட்டுவிடுகிறோம். அப்படி கண்டதையெல்லாம் வாங்கி சாப்பிடுவதால், உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட நேரிடுகிறது.

இவற்றை தவிர்க்க வேண்டுமானால், அன்றாடம் ஒருசில ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில் ஒரு ஆரோக்கியமான பழக்கம் தான், காலையில் கேரட் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பது. இப்படி தினமும் செய்வதால், உடலில் தேங்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கலாம்.

இங்கு காலையில் கேரட் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

கேரட் இஞ்சி ஜூஸானது இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரித்து, இதய நோயால் அவஸ்தைப்படுவதைத் தடுக்கும். அதிலும் இதில் உள்ள வைட்டமின் சி, பக்கவாதம் மற்றும் இதர இதய நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

புற்றுநோய்

புற்றுநோய்

கேரட் இஞ்சி ஜூஸில் உள்ள வைட்டமின் சி, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். அதிலும் மார்பகம் மற்றும் வயிறு, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புத் தரும். குறிப்பாக பெண்கள் இதனை குடித்து வந்தால், கருப்பை புற்றுநோயினால் மரணிப்பதைத் தடுக்கலாம்.

ஆரோக்கியமான சருமம்

ஆரோக்கியமான சருமம்

தற்போது கண்ட உணவுகளை உண்பதால் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, சருமத்தின் ஆரோக்கியம் பாழாகிறது. இதனால் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. இதனைத் தடுக்க வேண்டுமானால், தினமும் காலையில் ஒரு டம்ளர் கேரட் இஞ்சி ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் அவற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ, சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்புத் தரும்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

கேரட் இஞ்சி சாற்றில் வைட்டமின் ஏ, சி போன்றவை ஏரளமாக நிறைந்துள்ளது. பொதுவாக வைட்டமின் ஏ, கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரிக்கும். இதனால் உடலில் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

கண்ட உணவுகளை உண்பதால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் பல வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்க கேரட் இஞ்சி ஜூஸ் உதவும். எனவே இந்த ஜூஸை தவறாமல் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Should Drink Fresh Ginger-Carrot Juice Every Morning

Do you know why you should drink fresh ginger-carrot juice every morning? Take a look...
Story first published: Thursday, September 17, 2015, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter