ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பலரும் இயற்கை வைத்தியத்தை தான் நாடுகிறோம். இதற்கு இக்கால நவீன மருத்துவ முறைகளால் எவ்வித பலனும் கிடைக்காமல் இருப்பதே முக்கிய காரணம். பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. இப்படி செய்வதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று தானே கேட்கிறீர்கள்? அப்படியெனில் அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொறந்த மேனியா தூங்குறதுனால என்னென்ன நன்மையெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா!!!

வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம். இந்த ஆசிட் இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, வேறு சில நன்மைகளையும் வழங்குகிறது.

தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

சரி, இப்போது இரவில் படுக்கும் போது பாதங்களில் வெங்காயத்தை வைத்து கொண்டு தூங்கினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தம் சுத்தமாகும்

இரத்தம் சுத்தமாகும்

இரவில் படுக்கும் போது பாதத்தில் வெங்காயத்தை வைத்தால், வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம்.

பாக்டீரியாக்களை அழிக்கும்

பாக்டீரியாக்களை அழிக்கும்

வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவற்றை பாதங்களில் வைத்துக் கொண்டு படுத்தால், இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.

கழுத்து வலி, காது வலி நீங்கும்

கழுத்து வலி, காது வலி நீங்கும்

பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம்.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்று பிரச்சனைகள்

முக்கியமாக வெங்காயத்தை பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம்.

குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள்

குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள்

உங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தால், வெங்காயத்தை பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம்.

துர்நாற்றமிக்க பாதம்

துர்நாற்றமிக்க பாதம்

உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம்.

சளி, காய்ச்சல்

சளி, காய்ச்சல்

சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Put Onions In Socks Before Sleeping?

Onions are healthy, not only via consumption, but also healthy when placed in your socks while sleeping at night. Here are reasons of putting onions in socks before sleeping.
Subscribe Newsletter