For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ந்து ஒரு வாரம் பரங்கிக்காய் ஜூஸ் குடித்தால் உடலினுள் ஏற்படும் அதிசயிக்கத்தக்க மாற்றங்கள்!!!

By Maha
|

மஞ்சள் பூசணி என்று அழைக்கப்படும் பரங்கிக்காயில் இருந்து எடுக்கப்படும் சாற்றில் ஏராளமான உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளன. சொல்லப்போனால் பரங்கிக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, ஜூஸ் போட்டு குடித்தால், அதில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெறலாம்.

பரங்கிக்காயில் வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இச்சத்துக்களால் தற்போதைய காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதற்கு இந்த பரங்கிக்காய் ஜூஸை தினமும் 1/2 டம்ளர் குடித்து வந்தாலேயே, பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

சரி, இப்போது பரங்கிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

பரங்கிக்காய் ஜூஸில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டினை சீராக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

பரங்கிக்காய் ஜூஸ் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இந்த ஜூஸை குடித்து வந்தால், அதில் உள்ள பெக்டின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நீங்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், ஒரு வாரம் பரங்கிக்காய் ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் கனிமச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தினை வலிமைப்படுத்தும்.

உடல் சூட்டைத் தணிக்கும்

உடல் சூட்டைத் தணிக்கும்

உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டு வந்தால், பரங்கிக்காய் ஜூஸைக் குடித்து வர, உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறையும்.

இதய பிரச்சனைகள்

இதய பிரச்சனைகள்

பரங்கிக்காய் ஜூஸ் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் தங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பினைக் குறைக்கும்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம்

கல்லீரல் மற்றும் சிறுநீரகம்

சிறுநீரகம் மற்றும் பித்தப்பைகளில் கற்கள் இருந்தால், அதை பரங்கிக்காய் ஜூஸ் சரிசெய்யும். அதற்கு தினமும் 1/2 டம்ளர் பரங்கிக்காய் ஜூஸை மூன்று வேளைக் குடித்து வர வேண்டும்.

தூக்கமின்மையைத் தடுக்கும்

தூக்கமின்மையைத் தடுக்கும்

பரங்கிக்காய் ஜூஸ் தூக்கமின்மையைத் தடுக்கும். அதற்கு பரங்கிக்காய் ஜூஸில் தேன் கலந்து ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways Pumpkin Juice Benefits Your Health

In this article, we will tell you the health benefits of pumpkin juice. Read on to know more...
Desktop Bottom Promotion