சூடேற்றிய நீரை ஏன் மீண்டும் கொதிக்க வைக்கக் கூடாது? எச்சரிக்கை தகவல்!

By: Ashok CR
Subscribe to Boldsky

தேநீர் செய்ய ஒரு கெண்டி நீரை அடுப்பில் கொதிக்க வைக்கிறீர்கள். பின் அதனை அணைத்து விடுகிறீர்கள். மேலும் வேறு ஒரு விஷயத்தால் உங்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது. தேநீர் வேண்டும் என்று நீங்கள் மீண்டும் நினைக்கும் போது அந்த நீர் ஆறிப் போயிருக்கும். எனவே நீங்கள் மீண்டும் அந்த நீரை கொதிக்க வைப்பீர்கள். மீண்டும் இது நடக்கும். நிறுத்துங்கள்! அதே நீரை மீண்டும் கொதிக்க வைக்க வேண்டாம்.

நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இதை நீங்கள் ஏற்கனவே செய்திருந்தால், அதனை மாற்ற கால தாமதம் ஆகிவிட்டது. ஆனால் எதிர்காலத்தில் இதை எப்போதும் செய்யாதீர்கள். மீண்டும் கொதிக்க வைக்கும் நீர் மிகவும் ஆபத்தானதாகும். ஏன்? ஏனெனில் நீரின் இரசாயன கூட்டமைப்பு கொதிக்க வைக்கும் போது மாறிவிடும்.

குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா?

நீரைக் கொதிக்க வைக்கும் போது அதிலிருந்து வரும் நீராவியை நீங்கள் எப்படி உங்கள் கண்களால் பார்க்க முடிகிறது என்று தெரியுமா? நீரில் உள்ள ஆவியாகும் சேர்மங்கள் நீரை கொதிக்க வைக்கும் போது ஆவியாக மாறி நீராவியாக அதனை விட்டு வெளியேறுகின்றன. நீங்கள் நீரை ஆற வைக்கும் போது அதிலுள்ள கலைக்கப்பட்ட ஆவியான வாயுக்கள் மற்றும் கனிமங்கள் மீண்டும் அதிலேயே படிகின்றன.

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!!

நீங்கள் நீரை மறுபடியும் கொதிக்க வைக்கும் போது அதிலுள்ள இரசாயன சேர்மங்கள் மீண்டும் மாற்றம் அடையும். அது தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். நீரை மீண்டும் கொதிக்க வைக்கும் போது, நீரில் உள்ள ஆபத்தான கூறுகள் அதனை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக நீரிலேயே சேமிக்கப்பட்டு விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீங்கு விளைவிக்கும் பொருட்கள்

தீங்கு விளைவிக்கும் பொருட்கள்

மீண்டும் கொதிக்க வைக்கப்படும் தண்ணீர் எந்த மாதிரியான தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டிருக்கும் என கேட்கலாம். மீண்டும் கொதிக்க வைக்கும் நீரில் ஆர்சனிக், நைட்ரேட், ஃபுளோரைடு போன்ற பொருட்கள் இருக்கும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

ஒரு பாட்டில் தண்ணீர் ஆர்சனிக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்தால் நீங்கள் அதனை வாங்க மாட்டீர்கள் தானே? நிச்சயமாக முடியாது! மீண்டும் கொதிக்க வைக்கும் தண்ணீரில் ஆர்சனிக் இருக்க வாய்ப்பிருக்கும் போது பின் எதற்காக நீரை மீண்டும் குளிர்விக்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக, நீரில் சேகரிக்கப்படும் கால்சியம் உப்புக்கள், பித்தப்பைக் கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.

நச்சு நைட்ரேட்கள்

நச்சு நைட்ரேட்கள்

பொதுவாக அதிக வெப்பநிலையில் நீரை கொதிக்க வைக்கும் போது நைட்ரேட்கள் வெளிப்படும். அதிலும் கொதிக்க வைத்த நீரை மீண்டும் சூடேற்றும் போது, நைட்ரேட்டுகள் நஞ்சாகிவிடுகின்றன. அதாவது உயர் வெப்பநிலை, நைட்ரேட்டின் தன்மைகளை முற்றிலுமாக மாற்றி நைட்ரேட்டுகளை, நைட்ரோசமைன்களாக மாற்றி விடுகிறது. மேலும் இந்த நைட்ரோசமைன்கள் கார்சினோஜெனிக் ஆகும்.

ஆர்சனிக் நஞ்சாதல்

ஆர்சனிக் நஞ்சாதல்

நீங்கள் கொதிக்க வைக்கும் தண்ணீரை எடுத்துக் கொள்ளும் போது காலப்போக்கில் ஆர்சனிக் நஞ்சூட்டத்தால் பாதிக்கப்படுவீர்கள். இது புற்றுநோய், இதய நோய், நரம்பு பிரச்சனைகள் மற்றும் மலட்டுத்தன்மை என மிகவும் கடுமையான சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதிகப்படியான ஃபுளோரைடு

அதிகப்படியான ஃபுளோரைடு

நீங்கள் அதிகப்படியான ஃபுளோரைடு எடுத்துக் கொள்ளும் போது நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை உணர முடியும். அதிக அளவு ஃபுளோரைடால், நிறைய குழந்தைகள் நினைவாற்றல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Warning: Why You Should NEVER Re-Boil Water!

Re-boiling water can be extremely dangerous. Why? – Because the composition of water is altered when it is boiled. Read more to know...
Subscribe Newsletter