தாங்க முடியாத முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட சில டிப்ஸ்...!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கையை விட, நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறே வேலை செய்வோர் தான் அதிகம். இதனால் உலகில் மில்லியன் கணக்கான மக்கள் அன்றாடம் கடுமையான முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்ற பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர்.

இந்த தினசரி பழக்கங்கள் தான் முதுகு வலி ஏற்பட முக்கியக் காரணங்கள்!!!

இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்றும் பலர் ஏங்குகின்றனர். சரி, இப்படி வலி ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? எல்லாம் நீங்கள் உட்காரும் நிலை, நடக்கும் நிலை போன்றவை தான். இவைகளில் சிறிது மாற்றங்களைக் கொண்டு வருவதோடு, நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் தினமும் ஒருசில உடற்பயிற்சிகளை செய்து வந்தால், முதுகு, கழுத்து, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ்: 1

டிப்ஸ்: 1

தினமும் காலை 20 முறை மற்றும் மாலை 20 முறை குனிந்து காலின் பெரு விரலைத் தொடுங்கள். இப்பயிற்சியை செய்வதால், முதுகு தண்டுவடம் ஆரோக்கியமாக இருக்கும்.

டிப்ஸ்: 2

டிப்ஸ்: 2

உட்கார்ந்து வேலை செய்யும் போது நேராக அமர்ந்து வேலை செய்யுங்கள். முதுகு வலிக்கிறது என்று வளைந்து அல்லது குனிந்து உட்கார்வதைத் தவிர்த்திடுங்கள்.

டிப்ஸ்: 3

டிப்ஸ்: 3

நிற்கும் போது குனிந்து நிற்பதைத் தவிர்த்து, நேராக நில்லுங்கள்.

டிப்ஸ்: 4

டிப்ஸ்: 4

படுக்கும் போது வளைந்து, சுருண்டு படுப்பதை தவிர்த்திடுங்கள். மேலும் குப்புற படுப்பதைத் தவிர்த்து, நேராக அல்லது பக்கவாட்டில் படுங்கள்.

டிப்ஸ்: 5

டிப்ஸ்: 5

தூங்க பயன்படுத்தும் தலையணை கனமாக இருந்தால், அவற்றைத் தூங்கி எறிந்துவிடுங்கள். கனமான தலையணையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கினால் கழுத்து வலி மேலும் அதிகமாகும்.

டிப்ஸ்: 6

டிப்ஸ்: 6

தினமும் 20 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சியைக் கொள்ளுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, முதுகின் ஆரோக்கியமும் மேம்படும்.

டிப்ஸ்: 7

டிப்ஸ்: 7

30 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காராதீர்கள். அதாவது, 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறு நடையை மேற்கொள்ளுங்கள்.

டிப்ஸ்: 8

டிப்ஸ்: 8

பைக் ஓட்டும் போது குனிந்து கொண்டே ஓட்ட வேண்டாம். இதனால் முதுகு வலி இன்னும் அதிகமாகும்.

டிப்ஸ்: 9

டிப்ஸ்: 9

கனமான பொருட்களை தூக்கும் போது குனிந்து கொண்டே தூக்க வேண்டாம். இதனால் வலி இன்னும் மோசமாகும். எனவே நேராக நின்று தூக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Keep Your Spine Healthy

There are a number of simple things you can try to help keep your spine as healthy as possible and minimize complications from your back condition. Here are some of the tips to keep your spine healthy. Take a look...
Story first published: Tuesday, August 25, 2015, 12:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter