Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
யாரும் அருகில் வர முடியாத அளவு உங்க வாய் நாற்றம் அடிக்கிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...
ஒவ்வொருவரும் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இதை பிரச்சனை என்பதை விட சங்கடம் எனலாம். வாய் துர்நாற்றம் இருந்தால், அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரிடம் எதையும் கலந்தாலோசிக்க முடியாமல், எங்கு நம் வாய் துர்நாற்றம் அவர்களின் முகத்தை சுளிக்க செய்யுமோ என்ற எண்ணத்துடனேயே, சரியாக யாருடனும் பேச முடியாமல் தவிப்போம்.
ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவுக்கான கை வைத்தியங்கள்!!!
இப்படி ஏற்படும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க ஒருசில வழிகள் உள்ளன. அவற்றை தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
இயற்கையான முறையில் பளிச்சிடும் வெண்மையான பற்களைப் பெற சில வழிகள்!!!

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்
வாய் உலர்ந்து போனால் தான் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே எப்போதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தால், வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம்.

உணவைத் தவிர்க்க வேண்டாம்
எப்படி வாய் உலர்ந்தால் துர்நாற்றம் வீசுகிறதோ, அதேப் போல் உணவைத் தவிர்த்து வந்தாலும் துர்நாற்றம் வீசும். ஆகவே எப்போதும் உணவைத் தவிர்க்கக்கூடாது. முக்கியமாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

கீரைகளை அதிகம் சாப்பிடவும்
உணவில் குளோரோபில் நிறைந்த உணவுப் பொருட்களான கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக கொத்தமல்லியை உணவில் சேர்த்து வந்தால், அது வாயை புத்துணர்ச்சியுடன் வைத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

நாக்கை சுத்தம் செய்யவும்
பற்களை துலக்கும் போது, நாக்கை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நாக்கின் மேல் உள்ள வெள்ளை படலம் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க அன்றாடம் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

மசாலாப் பொருட்கள்
ஏலக்காய், கிராம்பு, சோம்பு போன்றவற்றை வாயில் போட்டு மென்று வந்தால், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, துர்நாற்றம் தடுக்கப்படும். குறிப்பாக கிராம்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், வாய் துர்நாற்றத்தை மட்டுமின்றி, ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

காபிக்கு பின் தண்ணீர்
காபி அல்லது டீ குடித்த பின்னர், தவறாமல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் வாயில் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, துர்நாற்றம் தடுக்கப்படும்.

சூயிங் கம்
எந்நேரமும் கையில் பிரஷ் அல்லது மௌத் வாய் வைத்துக் கொண்டு சுற்ற முடியாது. எனவே தவறாமல் சுகர்-ப்ரீ கொண்ட சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். குறிப்பாக புதினா சுவை கொண்ட சூயிங் கம்மை பயன்படுத்துவது நல்லது.



Click it and Unblock the Notifications