For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியர்வை குறித்து பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள்!!!

By Maha
|

பலருக்கும் வியர்வை வெளியேறினால் எரிச்சலாக இருக்கும். எதற்கு தான் இப்படி வியர்கிறதோ தெரியவில்லை என்று புலம்புவோம். ஆனால் வியர்வை வெளியேறாவிட்டால், நம் உடல் வெப்பத்தினால் வாடி வதைந்துவிடும். எனவே வியர்வை வெளியேற வேண்டியது அவசியமே.

உடல் துர்நாற்றத்தைத் தடுக்கும் இயற்கை வழிகள்!!!

ஆனால் இந்த வியர்வைக் குறித்து மக்களிடையே பல கட்டுக்கதைகள் உலாவி வருகின்றன. உதாரணமாக, வியர்வையின் மூலம் தான் உடுத்தும் உடைகளில் மஞ்சள் கறைகள் படிகின்றன என்பது. இதுப்போன்று பல கட்டுக்கதைகள் உள்ளன. இங்கு அந்த கட்டுக்கதைகளையும், அதன் பின்னணியில் உள்ள உண்மையும் கொடுக்கப்பட்டுள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை #1

கட்டுக்கதை #1

வியர்வையின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் உண்மையில், வியர்வையின் மூலம் உடலில் இருந்து நீர் தான் வெளியேறும். மீண்டும் தண்ணீர் குடிப்பதன் மூலம், அந்த நீரை மீண்டும் பெறுவோம். என்ன கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

கட்டுக்கதை #2

கட்டுக்கதை #2

நீங்கள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் தான் வியர்வை வெளியேறுகிறது என்று பலர் கூறுவார்கள். ஆனால் நீங்கள் உடுத்தியிருக்கும் உடை, அறையின் வெப்பநிலை மற்றும் உங்களின் மெட்டபாலிக் அளவைப் பொறுத்தும் வியர்வை வெளியேறும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கட்டுக்கதை #3

கட்டுக்கதை #3

வியர்வை துர்நாற்றமா? பலரும் வியர்வை தான் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், நம் சருமத்தின் மேல் உள்ள பாக்டீரியாக்கள் தான் அந்த துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

கட்டுக்கதை #4

கட்டுக்கதை #4

பலரும் வியர்வையின் மூலமாக டாக்ஸின்கள் வெளியேறுகிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில், டாக்ஸின்களானது சிறுநீர் வழியாக தான் வெளியேறும். வியர்வையில் யூரியா, புரோட்டீன், உப்பு மற்றும் தண்ணீரே தவிர, டாக்ஸின்கள் அல்ல.

கட்டுக்கதை #5

கட்டுக்கதை #5

சில மக்கள் வெப்பம் அதிகமாக உள்ள நாட்களில் மட்டும் தான் வியர்வை வெளியேறும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வியர்வையானது உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க வெளியேற்றுகிறது. அதனால் தான் உங்கள் உடலில் அதிக அளவில் வெப்பம் இருந்தால், உடலைக் குளிர்ச்சியடையச் செய்ய வியர்வை வெளியேறுகிறது.

கட்டுக்கதை #6

கட்டுக்கதை #6

வியர்வை குறித்த மற்றொரு தவறான கருத்து என்னவெனில், சன் ஸ்க்ரீன் லோசன் சருமத்துளைகளை அடைத்து, வியர்வை வெளியேறுவதைக் குறைக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் சன் ஸ்க்ரீன் லோசனுக்கும், வியர்வைக்கு சம்பந்தமே இல்லை.

கட்டுக்கதை #7

கட்டுக்கதை #7

முக்கியமான கட்டுக்கதையெனில், அது இது தான். வியர்வை தான் உடுத்தும் உடைகளில் மஞ்சள் கறைகளை உண்டாக்குகிறது என்பது. உண்மையில், சருமத்தில் இருந்து சுரக்கப்படும் எண்ணெயானது, சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சேர்ந்து தான் உடைகளில் மஞ்சள் கறைகளை உண்டாக்குகிறதே தவிர, வியர்வையால் அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths About Sweat

Why do we sweat? Well, the temperature around, your bodys condition and even your clothes may cause sweat. Now, here are some myths about sweat.
Story first published: Wednesday, September 23, 2015, 17:26 [IST]
Desktop Bottom Promotion