உங்களுக்கு முதுகு ரொம்ப வலிக்குதா? இதோ அதை சரிசெய்ய சில டிப்ஸ்....

Posted By:
Subscribe to Boldsky

பரபரப்பான மற்றும் மன அழுத்தம் நிறைய வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும்.

பலரும் தங்களுக்ளுள்ள முதுகு வலிக்கு மருத்துவரை சந்தித்து, அலுத்துப் போயிருப்பார்கள். முதலில் முதுகு வலி வருவதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். முது வலிக்கு காரணம் பல்வேறு தண்டுவட பிரச்சனைகள் தான். ஆனால் அவற்றை ஒருசில சிகிச்சைகளின் மூலம் சரிசெய்ய முடியும்.

சரி, இப்போது முதுகு வலியை சரிசெய்வற்கான சில எளிய சிகிச்சைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து பின்பற்றி உங்கள் முதுகு வலிக்கு பை-பை சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குப்புறப்படுத்தல்

குப்புறப்படுத்தல்

உங்களுக்கு முதுகு வலி கடுமையாக இருக்கும் போது, குப்புறப்படுத்து, கைகளை உடலை ஒட்டி வைத்துக் கொண்டு, தவையை ஒரு பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளுங்கள். இந்நிலையால் முதுகு வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

சரியான தோரணை

சரியான தோரணை

வசதியாகவும், முதுகிற்கு ஆதரவாகவும் இருக்கும் நாற்காலியைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில் சரியான நிலையில் இருந்தால், முதுகு வலி வருவதைத் தடுக்கலாம். மேலும் உட்காரும் போது நாற்காலியில் சாய்ந்து உட்காராமல், தோள்பட்டை நேராக இருக்கும் வண்ணம் நிமிர்ந்து பார்க்கும் படியான நிலையில் அமர வேண்டும்.

ப்ளான்க் பயிற்சி

ப்ளான்க் பயிற்சி

தினமும் ப்ளான்க் பயிற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம் முதுகு வலியைத் தடுக்கலாம். அதற்கு தரையில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்து, முழங்கை மற்றும் பெருவிரலை தரையில் ஊற்றி, உடலை வளைக்காமல் நேராக மேலே தூக்க வேண்டும். இப்பயிற்சியை செய்து வந்தால், முதுகு வலி நீங்குவதோடு, அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

நீண்ட நேரம் அமர வேண்டாம்

நீண்ட நேரம் அமர வேண்டாம்

எவ்வளவு வேலை இருந்தாலும், கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்திடுங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறு வாக்கிங் மேற்கொள்ளுங்கள். இதனால் முதுகு வலியைத் தவிர்க்கலாம்.

கால்களின் நிலை

கால்களின் நிலை

நாற்காலியில் அமரும் போது, கால் மேல் கால் போட்டு உட்கார்வதைத் தவிர்த்து, கால்கள் 90 டிகிரியில் இருக்கும் வண்ணம் அமருங்கள். மேலும் இப்படி உட்காரும் போது, முதுகுத்தண்டுவடம் நேராகும். இதனால் முதுகு வலி வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lower Back Pain? Try These Tips For Quick Relief

Here are a few physical therapies that you can easily adopt and say bye-bye to back pain.
Story first published: Saturday, December 19, 2015, 15:12 [IST]