For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பாரம்பரிய பழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!!!

By Maha
|

பல்வேறு பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த நாடு தான் இந்தியா. என்ன தான் நவீன காலமானாலும் , இன்னும் இந்திய மக்கள் தங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களைத் தவறாமல் பின்பற்றி வருகின்றனர்.

இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்!

உதாரணமாக, விழாக்கள் என்றால் வாழையில் உணவு உண்பது, வெறும் காலில் நடப்பது, எண்ணெய் குளியல் எடுப்பது போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. நம் முன்னோர்களின் கருத்துப்படி, இச்செயல்கள் அனைத்தும் வெறும் பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி, இவற்றால் உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்று சொல்கின்றனர்.

உலகில் உள்ள விநோதமான மற்றும் கொடுமையான சில கலாச்சாரங்கள்!!

மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் கடுமையான நோய்களால் தாக்கப்படாமல் இருப்பதற்கு காரணமாக இப்பழக்கவழக்கங்களைக் கூட கூறலாம். சரி, இப்போது இந்திய பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளிப் பாத்திரங்கள்

வெள்ளிப் பாத்திரங்கள்

வெள்ளி தட்டுகளில் சாப்பிடுவது, அவர்களின் நிலையை காண்பிப்பதற்காக இல்லை, வெள்ளி தட்டில் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் தான். நிபுணர்களும், வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால், அதில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மையால், உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று சொல்கின்றனர்.

காது குத்துவது

காது குத்துவது

குழந்தையாக இருக்கும் போதே, ஆண், பெண் என இருபாலருக்கும் காது குத்தும் பழக்கம் இந்திய பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்று. உண்மையில் காது குத்திக் கொள்வதால், மனதில் அமைதி உருவாகிறது. காது குத்துவதற்கும், ஆரோக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், ஆண் குழந்தைகளுக்கு காது குத்துவதால், குடலிறக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். மற்றும் பெண் குழந்தைகளுக்கு குத்துவதால், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்குமாம்.

கோலம் போடுவது

கோலம் போடுவது

விழா காலங்கள் மட்டுமின்றி, தினமும் பெண்கள் காலையில் வாசலில் நீர் தெளித்து கோலம் போடுவதால், வீடு மங்களகரமாக காண்பதோடு, மனநிலை மேம்படுமாம். அதிலும் ரங்கோலி போட்டு, அதற்கு நிறங்களைக் கொடுக்கும் போது, அந்நிறங்களானது கண்களுக்கு குளிர்ச்சியைத் தந்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துமாம்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

இந்திய பெண்களுக்கு ஆபரணங்கள் என்றால் கொள்ளை பிரியம். இந்திய பெண்கள் கட்டாயம் தினமும் தங்கம், வெள்ளி போன்றவற்றாலான காதணி, வளையல், கொலுசு, மோதிரம், செயின் போன்றவற்றை அணிந்திருப்பார்கள். அதிலும் அவர்கள் அணியும் வெள்ளிக் கொலுசு உடலின் மற்ற கனிமங்களை சீராக பராமரிக்கவும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகளின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.

கைகளால் சாப்பிடுவது

கைகளால் சாப்பிடுவது

இந்திய பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று உணவை கைகளால் உண்பது. இப்படி கைகளால் உண்பதால், கைகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்களானது வயிற்றினுள் சென்று வயிற்றை நிறைத்து, கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி வெல்லுமாம். மேலும் கைகளால் சாப்பிடும் போது உணவின் சுவை மேலும் அதிகரிக்குமாம்.

நெய்

நெய்

பெரும்பாலான இந்திய வீடுகளில் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து சமைப்பார்கள். உண்மையில் எண்ணெயை விட நெய் மிகவும் ஆரோக்கியமானது. நெய்யை தினமும் அளவாக உணவில் சேர்த்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறையும், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

விரதம்

விரதம்

இந்திய பெண்கள் எதற்கு எடுத்தாலும் விரதம் இருப்பார்கள். அதிலும் மாதத்திற்கு 1 முறையாவது விரதம் இருப்பார்கள். இப்படி விரதம் இருப்பதால், அவர்களின் செரிமான மண்டலம் சீராக செயல்படுவதோடு, எடை குறையும், மெட்டபாலிசம் அதிகரிக்கும், மூளையின் செயல்பாடு மேம்படும் மற்றும் வாழ்நாள் அதிகரிக்கும். அதனால் தான் ஆண்களை விட பெண்கள் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர் என்றும் சொல்லலாம்.

வெறும் காலில் நடப்பது

வெறும் காலில் நடப்பது

அக்காலத்தில் எல்லாம் செருப்பு அணிந்து கொண்டு சுற்றியதை விட, வெறும் காலில் சுற்றியது தான் அதிகம். அதனால் தான் நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தனர் எனலாம். ஏனெனில் வெறும் காலில் நடப்பதால், உடலின் அனைத்து உறுப்புக்களையும் இணைக்கும் இடமான பாதம் தரையில் பட்டு மசாஜ் செய்யப்பட்டு, உடலின் அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமாக இயங்குமாம். எனவே வீட்டினுள் செருப்பு அணிந்து கொண்டு சுற்றுவதைத் தவிர்த்து, இனிமேல் வீட்டினுள் வெறும் காலில் சுற்றுங்கள்.

மருதாணி

மருதாணி

இந்திய பெண்களுக்கு மருதாணி என்றால் கொள்ளைப் பிரியம். விழாக்கள் வந்தாலே தங்கள் கை மற்றும் கால்களுக்கு மருதாணியை வைத்துக் கொள்வார்கள். சரி, மருதாணியை உள்ளங்கையில் வைத்தால் உடல் வெப்பம் குறையும் என்பது தெரியுமா? எனவே உடல் வெப்பத்தினால் கஷ்டப்படுபவர்கள், மருதாணியை வைத்துக் கொள்ளுங்கள். ஆண்கள், தங்களின் பாதங்களில் மருதாணியை வைத்துக் கொண்டு, உடல் சூட்டைத் தணிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Traditions That Have Health Benefits

Going back in time and following these Indian traditions is something you should do to keep yourself healthy and away from multiple diseases.
Story first published: Tuesday, August 25, 2015, 10:20 [IST]
Desktop Bottom Promotion