Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இந்திய ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் தொப்பை பிரச்சனை: சர்வே ரிப்போர்ட்!
உடல் பருமன் என்பது ஓர் மாநில, தேசிய எல்லைகளை தாண்டிய ஓர் பொதுவான உலக பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு நமது உணவு பழக்கம் மற்றும் வேலை முறை மாற்றமும் தான் பெரிய காரணம்.
இந்தியா ஓர் வளர்ந்து வரும் நாடு, கற்பழிப்பு எண்ணிக்கையில், பெண்கள் பாதுகாப்பு இன்மை, சகிப்புத்தன்மை இன்மை என தொடர்ந்து இந்தியாவின் மீதான உலக மக்களின் பார்வை எதிர்மறையாகவே மாறிக் கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது இந்திய மக்கள் மிகவும் உடல் பருமனாக மாறி வருகிறார்கள் என்று ஓர் ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்ட தகவல் ஆகும். உடல் பருமன் என்பது இதயம், நீரிழிவு போன்ற உடல்நல பிரச்சனைகள் மட்டுமின்றி ஆண்மை குறைபாடு ஏற்படவும் பெரும் காரணமாக விளங்குகிறது....

ஆய்வு
நான்கில் ஒரு நடுத்தர இந்திய ஆணுக்கு "பீர்" தொப்பை இருக்கிறதாம். பெரும்பாலும் இந்திய ஆண்களின் உடல்நலம் பாதிப்பதற்கு இந்த பீர் தொப்பை தான் காரணமாக இருக்கிறதாம். சமீபத்தில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

7000 பேர்
ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகா போன்ற ஆறு இந்திய மாநிலத்தைச் சேர்ந்த 7000-க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளனர்.

எடை, உயரம், உடல் சுற்றளவு
இந்த ஆய்வில் மிகமுக்கியமாக பங்கெடுத்துக் கொண்டவர்களின் உயரம், எடை, இடுப்பின் சுற்றளவு, இரத்த அழுத்தம் போன்றவை கணக்கெடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் வயது வந்தோரின் ஆரோக்கியம் குறித்து கண்டறியப்பட்டது. இதில் 50 வயதை கடந்த ஆண்களும் கூட பங்கெடுத்துக் கொண்டனர்.

அதிகப்படியான கலோரிகள்
இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில் மக்கள் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கிறார்கள். இதனால் தான் இந்தியர்களின் உடல் பெரிதாக உருவாவதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியோடு சேர்ந்து உடல் பருமனும்...
நமது நாடு வளர்ந்துவரும் நாடுகளில் முன்னிலையில் இருக்கிறது. பொருளாதார அளவில் மட்டுமின்றி, உடல் பருமனிலும் நாம் உலக நாடுகளோடு போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம்.

ஏழ்மை
இந்தியா வளரும் நாடென்ற போதிலும் கூட, இதன் ஏழ்மை சதவீதம் குறையவே இல்லை. ஒருபக்கம் வசதியும், உடல் பருமனும் கூடிக்கொண்டே போகையில், மறுபக்கம் ஏழ்மையும் வளர்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு
நமது நாட்டில் தான் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உடல்நல குறைபாடும், அதிக உடல்பருமன் கொண்டமையால் ஏற்படம் உடல்நல குறைபாடும் சம அளவில் இருக்கிறது. உடல் பருமன் காரணத்தால், இதய நலன், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இனிமேலாவது உங்கள் உடல் பருமன் மீது அக்கறை எடுத்து, குறைக்க முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
