Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
குறைந்த கொழுப்பு டயட் உடல் எடையை குறைக்காது, உடல்நலனை தான் குறைக்கும்!
உடல் எடை குறைக்க வேண்டுமானால், உடனே கொழுப்பு குறைந்த உணவை அனைவரும் உட்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் விரைவாக உடல் எடை குறையும் என்ற எண்ணம் மக்கள் இடையே இருக்கிறது. இதனால் உங்களுக்கு விரைவாக உடல் எடை குறைகிறதோ இல்லையோ, உடல்நலன் குறைந்துவிடும்.
உடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள்!
ஆம், அதிகமாக கொழுப்பு குறைவான உணவை மட்டும் உட்கொள்வதால், உடல் நலனை பாதுகாக்கும், நல்ல கொழுப்புச்சத்தான எல்.டி.எல் கொழுப்பும் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. மேலும் இது, உடல்பருமன், இரத்த சர்க்கரை, நீரிழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படவும் காரணமாக இருக்கிறது.....
டயட் மேற்கொள்வதற்கு முன் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியவை!!!

குறைந்த கொழுப்பு, அதிக சர்க்கரை அளவும்
குறைந்த கொழுப்பு உணவில் இருக்கும் ஓர் பிரச்சனை என்னவெனில், அதில் சுவை குறைவாக தான் இருக்கும். இதனால் தயாரிப்பாளர்கள் இதில் சுவைக்காக செயற்கை சர்க்கரையை சேர்க்கிறார்கள். இதனால், குறைந்த கொழுப்பு உணவில் சர்க்கரை அளவு அதிகமாக காணப்படுகிறது. மேலும் சர்க்கரை பசியை தூண்டும் குணமுடையது.

ட்ரைகிளிசரைடுகள்
குறைந்த கொழுப்பு உணவுகள் ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்க செய்கிறது. ட்ரைகிளிசரைடுகள் அதிகமானால் உடல்பருமன் அதிகரிக்கும். மேலும், இதய பாதிப்புகள், டைப் 2 நீரிழிவு ஏற்படவும் இது முக்கிய காரணியாக இருக்கிறது.

நல்ல கொழுப்பு
குறைந்த கொழுப்பு உணவுகள், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புச்சத்துக்களையும் உடலில் இருந்து குறைத்து விடுகிறது. இதுவும் உடல்நலத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்டோஸ்டிரோன் அளவும் குறையும்
குறைந்த கொழுப்பு உணவைவுகள், ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவையும் குறைத்துவிடுகிறது. இதனால், ஆண்மை குறைப்படும் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் இதனால் உடல்பருமன் அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இதய நலன் பாதிப்பு
எச்.டி.எல் கொழுப்பு எப்படி இதய நலனை கெடுக்கிறதோ, அதே போல எல்.டி.எல் கொழுப்பு இதய நலனை காக்கும் திறன் கொண்டது. கொழுப்பு குறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து குறைந்து, இதய நலனை கெடுக்கிறது.



Click it and Unblock the Notifications