உடல் எப்படி தன்னை தானே பழுது பார்த்துக் கொள்கிறது என்று தெரியுமா?

By: Ashok CR
Subscribe to Boldsky

இந்த அண்டத்தில் உள்ள அசாதாரணமான அதிசயம் தான் மனித உயிரினம். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஒத்துப்போகும் குணாதிசயத்தை கொண்ட மனித உயிரினம், சில குறிப்பிட்ட நிலைகளில் தன்னை தானே ஆற்றிக் கொள்ளும். ஆம், உங்கள் உடலிலேயே சில உறுப்புக்கள் தன்னை தானே ஆற்றிக் கொள்ளும் இயல்பை கொண்டுள்ளது. அதிகமாக மது குடிக்காமல் இருந்தால், உங்கள் கல்லீரல் தன்னை தானே ஆற்றிக் கொள்ளும்.

உங்கள் வாழ்க்கை முறையில் விறுவிறுப்பான உடற்பயிற்சிகளுடன் கூடிய ஆதரவை உறுப்புகள் பெற்றால், அவற்றில் ஒன்றான தமனிகள் தங்களை தாங்களே மீண்டும் உருவாக்கி கொள்ளும். இது மூளை, குடல்கள், சருமம் மற்றும் நுரையீரலுக்கும் கூட பொருந்தும். தங்களை தாங்களே புதுப்பித்து கொள்ளும் உறுப்புகள் இவைகள்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான சூழ்நிலைகளை உருவாக்குதல், மொத்த செயல்முறைக்கும் ஆதரவளித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல். அதனால் உங்கள் உறுப்புகளுக்கு மேலும் பாதிப்புகள் வந்து சேர கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமனிகள்

தமனிகள்

குறுகிய இரத்த நாளங்கள் உங்கள் தமனிகளை வேதனைக்கு உள்ளாக்கும். அவைகளில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், தமனிகளை விரிவடைய செய்ய உங்கள் உடல் முயற்சிக்கும். சில நேரங்களில் புதிய தமனிகள் உருவாக்கப்படும். இவையெல்லாம் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நடக்கும். உங்கள் தமனிகள் முழுவதும் கொலஸ்ட்ரால் நிறைந்திருந்தால், இந்த செயல்முறை தோல்வியடையும். எனவே உங்கள் இதயம் அதிகமாக இரத்தத்தை அழுத்தும் படியான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். ஓடுவதும் நீச்சல் அடிப்பதும் சிறந்த உதாரணங்களாகும்.

நுரையீரல்கள்

நுரையீரல்கள்

புகைப்பிடிப்பதும், மாசுவும் உங்கள் நுரையீரல்களை பெருவாரியாக பாதிக்கும். புகைப்பிடிக்காமலும், உடற்பயிற்சியில் ஈடுபட்டும் வந்தால் உங்கள் நுரையீரலில் உள்ள சளி நீங்கி, அவர் குணமடைய தொடங்கும். வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகள் மற்றும் ரெட்டிநோயிக் அமிலமும், உங்கள் நுரையீரல் குணமடைய உதவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கேரட் சாப்பிடுவதும் கூட உதவி புரியும்.

கல்லீரல்

கல்லீரல்

அளவுக்கு அதிகமாக மது குடித்தால் அவை கல்லீரலில் தாக்குதலை ஏற்படுத்தும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், ஈரலில் சிறிய பகுதி ஏற்கனவே கிட்டத்தட்ட செத்து போயிருந்தாலும் கூட, அவை மீண்டு வரலாம். ஆனால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மூலம் கல்லீரலை நீங்கள் கொல்லாமல் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். மதுவை துறந்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி அடங்கிய நச்சுத்தன்மையை நீக்கும் உணவுகளை உண்ணுவது மிகவும் முக்கியமாகும்.

எலும்புகள்

எலும்புகள்

எலும்பின் ஒரு பகுதி உடைந்து விட்டால், அது குணமடைய மீதமுள்ள பகுதியின் அணுக்கள் கடினமாக வேலை செய்யும். இந்த குணமாக்குதலை துரிதப்படுத்த, வைட்டமின் கே அடங்கிய பச்சை காய்கறிகளை உண்ண வேண்டும். மேலும், சிறிது காலம் படுக்கை ஓய்விற்கு பிறகு, எலும்பு வளர்ச்சியில் அழுத்தம் போட மிதமான நடவடிக்கைகளில் ஈடுபட பரிந்துரைக்கப்படுகிறது.

மூளை

மூளை

சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், உங்கள் மூளை நற்பதமான நியூரான்களை பெறும் என ஆய்வுகள் கூறியுள்ளது. ஒரு உறுப்பாக, மீளுருவாக்கம் செயல்முறையில் உங்கள் மூளைக்கு உதவிட இது சிறந்த வழியாகும்.

குடல்கள்

குடல்கள்

நீங்கள் மதுவும், அசிடிக் உணவுகளும் உட்கொண்டு வந்தால், உங்கள் குடல்கள் நாசமாகிவிடும். அவ்வகையான பழக்கங்களை நிறுத்தி விட்டு, நார்ச்சத்து நிறைந்த இயற்கை உணவுகளை உட்கொண்டு, அணுக்கள் குணமடைய உதவுங்கள். முழு தானியங்களையும் உண்ணுங்கள்.

முக்கிய தகவல் #1

முக்கிய தகவல் #1

மேற்கூறிய உறுப்புகள் தீவிர பாதிப்பிற்கு உள்ளானால், அவற்றை மீட்பது முடியாத காரியமாகி விடும்.

முக்கிய தகவல் #2

முக்கிய தகவல் #2

நீங்கள் புகைப்பிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்தால், நோய் மீட்டெழுதலின் போது அவற்றை கைவிடுவது நல்லது.

முக்கிய தகவல் #3

முக்கிய தகவல் #3

உங்கள் உடல் அமைதியான நிலையில் இருந்தால் தான் குணமடைதல் நடைபெறும். அதனால் ஓய்வு மிகவும் முக்கியம்.

முக்கிய தகவல் #4

முக்கிய தகவல் #4

* எதையேனும் ஒன்றை ஆய்வு செய்வதற்கோ அல்லது முயற்சி செய்வதற்கோ முன்பு, உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும். அதற்கு காரணம் நீங்கள் படித்தது எதுவுமே உங்கள் உண்மையான உடல்நிலைப் பற்றிய முழு விவரத்தையும் அளிக்காது.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றினால், உங்கள் உடலில் உள்ள சில மனித உறுப்புகள் தங்களை தாங்களே பழுது பார்த்துக் கொள்ளும் என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா? அதனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Your Body Can Repair Itself

Can your body really heal itself? Under ideal conditions, your body can do a good job in repairing itself. There are organs that heal themselves. Your lungs and intestines are examples. Read on to know about organs that repair themselves.
Story first published: Sunday, September 13, 2015, 9:32 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter