For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுற்றுச்சூழல் மாசுபாட்டில், சில குறிப்பிட்ட வாயுக்களின் வெளிப்பாடினால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்!!!

By John
|

சிகரட், வாகனம், தொழிற்சாலை, வீட்டு சாதன பொருட்கள் என பல வகைகளில் தினமும் புகைகளை நாம் வாழும் பூமியில் வெளியிடுகிறோம். இதனால் ஓசோன் மண்டலம் மட்டுமின்றி நமது உடல்நலமும் பாதிக்கின்றது என்று நாம் யாவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், எந்தெந்த வாயுக்கள் நமது உடல் நலத்தை வலுவாக பாதிக்கின்றது என நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

நீங்க குடிக்கிற கூல்டிரிங்ஸ்'ல பூச்சிக்கொல்லி எவ்வளோ % கலக்கப்படுதுன்னு உங்களுக்கு தெரியுமா???

இலை, தழைகளை எரித்தாலும் சரி, பிளாஸ்டிக், காகிதங்களை எரித்தாலும் சரி, அனைத்து புகைகளும் கருநிறத்தில் தான் இருக்கின்றன. ஆனால், அவைகளினால் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறு வகைகளாக இருக்கின்றது. அதைப் பற்றி தான் நாம் இனி, இங்கு காணவிருக்கிறோம்...

கொசுக்களின் உயிரைப் பறிப்பதற்கு பதிலாக மனிதர்களின் உயிரைப் பறிக்கும் கொசுவர்த்தி- அதிர்ச்சி தகவல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எஸ்.பி.எம் - SPM (suspended particulate matter)

எஸ்.பி.எம் - SPM (suspended particulate matter)

காற்றில் இருக்கும் தூசி, தீப்பொறிகள், மூடுபனி, புகை போன்றவற்றில் இருந்து வெளிப்படுவதை தான் எஸ்.பி.எம் என்று கூறப்படுகிறது. இதில் இருக்கும் முக்கியமான மூலப்பொருள் லேட் ஆகும். மற்றும் டீசலில் இருக்கும் நிக்கல், ஆர்சனிக் போன்றவையும் இதில் கலந்திருக்கும். பெரும்பாலும் நாம் போக்குவரத்து நெரிசலில் சுவாசிப்பது இதை தான். இதனால், நுரையீரல் திசு பாதிப்படையும், சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile organic compounds)

ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile organic compounds)

அதிகமாக ஆவியாகும் கரிம சேர்மங்களின் புகைகளின் வெளிப்பாட்டில் இருப்பவர்களுக்கு கல்லீரல் வலுவாக பாதிப்படையும் அபாயம் இருக்கிறது. மற்றும் இது, தலைவலி, குமட்டல், கண், மூக்கு, தொண்டை எரிச்சல்களை ஏற்படுத்தும்.

ஃபார்மால்டிஹைடு (Formaldehyde)

ஃபார்மால்டிஹைடு (Formaldehyde)

ஃபார்மால்டிஹைடு வாயுவின் வெளிப்பாட்டில் இருந்தால், கண் மற்றும் மூக்கு எரிச்சல்கள் ஏற்படுமாம், சிலருக்கு இதன் ஒவ்வாமையால் உடல் சார்ந்த அழற்சிகளும் ஏற்படலாம்.

லேட் (Lead)

லேட் (Lead)

அதிகப்படியாக இந்த வாயுவின் வெளிப்பாட்டில் இருந்தால், உடலின் நரம்பு மண்டலம் வலுவாக பாதிப்படையும். மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படும். குழந்தைகளுக்கு இது அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கதிரியக்கத் தனிமம் (Radon)

கதிரியக்கத் தனிமம் (Radon)

கதிரியக்கத் தனிமம், பொதுவாக பாறைகள் மற்றும் பூமியின் மணல்களில் இருந்து ஏற்படும் வாயு ஆகும். இந்த வாயுவின் வெளிப்பாட்டில் அதிகமாக இருந்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

நைட்ரஜன் ஆக்ஸைடுகள், சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குழந்தைகள் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழைக் காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கார்பன் மோனாக்சைடு

கார்பன் மோனாக்சைடு

ஹீமோகுளோபினுடன் கார்பன் மோனாக்சைடு கலக்கும் போது உடலில் ஆக்ஸிஜன் அளவை குறைத்துவிடும். இதனால், உடல் பாகங்களின் செயல்பாட்டில் பாதிப்புகள் ஏற்படும். மற்றும் மூளை, இதயம் போன்ற பாகங்கள் வலுமையாக பாதிப்படையும். இதனால் உங்கள் உறக்கமும் சீர்கேடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்பர் டைஆக்சைடு

சல்பர் டைஆக்சைடு

நிறையீரல் சம்மந்தப்பட்ட நோய்களை உருவாக்கக்கூடியது இந்த சல்பர் டைஆக்சைடு வாயு. இதனால் மூச்சுத் திணறல், ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

சிகரட் புகை

சிகரட் புகை

சிகரட்டில் இருந்து வரும் புகைகளுள் பல இரசாயனங்களும், புகையிலையும் இருக்கின்றது. இந்த புககையினால் தான் அபாயமான உடல்நலப் பாதிப்புகள் எல்லாம் ஏற்படுகிறது. புற்றுநோய் ஏற்படும் என்பது நாம் யாரும் அறிந்தது தான். ஆனால், கண்ணெரிச்சல், தொண்டை எரிச்சல், ஆஸ்துமா, நுரையீரல் செயல்திறன் குறைபாடு மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவையும் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது ஆகும்.

இயற்கை பொருள்களால் வெளிப்படும் புகை

இயற்கை பொருள்களால் வெளிப்படும் புகை

இலை, மரம், போன்ற இயற்கையான பொருள்களை எரிக்கும் போது வெளிப்படும் புகையினால் பெரும்பாலும் அழற்சி ஏற்படும், சளிக்காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health impact of specific air pollutants

Some of these gases can seriously and adversely affect the health of the population and should be given due attention by the concerned authority. The gases mentioned in this article are mainly outdoor air pollutants but some of them can and do occur indoor depending on the source and the circumstances
Desktop Bottom Promotion