Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
தற்போதைய காலக்கட்டத்தில் உடல் சோர்வு, மன அழுத்தம் போன்ற காரணத்தைக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வது என்பது திருமணமான புது மாப்பிள்ளை ஆடி மாதத்தில் சாக்குப்போக்கு சொல்லி மனைவியை பார்க்க செல்வதோடு அதிகமாக இருக்கிறது. ஏனெனில், டார்கெட் என்ற ஒற்றை சொல் மனிதர்களை பாடாய் படுத்திவிடுகிறது.
உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான 10 நன்மைகள்!!!
மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைக்கு மருந்து மாத்திரை சாப்பிடும் அவலத்தை விட பெரியதை வேறு எங்கு காண முடியும். "இதுக்கு ஏன் மருந்து மாத்திரை? பச்ச தண்ணியில கொஞ்ச நேரம் குளிச்சா போதுமே வெடுக்குன்னு இருக்கும்" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!
ஆம், உடல் சுறுசுறுப்படைய, தசை வலி, மன அழுத்தம் போன்றவற்றுக்கு பச்சை தண்ணி குளியல் நல்ல பயனளிக்கிறது...

சுறுசுறுப்பான மனநிலை
பச்சை தண்ணீரில் குளிப்பதால் இரத்தத்தில் பீட்டா - என்டோர்ஃபின் மற்றும் நோராட்றேனலைன் (Beta-Endorphin and Noradrenaline) போன்றவற்றின் அளவு அதிகரிக்கிறது. இவை மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. மெடிக்கல் ஹைப்போதிசஸ் என்ற மருத்துவ நாளிதழில் வெளிவந்த ஆய்வறிக்கையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் பச்சை தண்ணீரில் நீராடினாலே போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.

தசை இலகுவாக உணர
தசை பகுதியை நீங்கள் கடுமையாக உணரும் பட்சத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவதால் அதை சரி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகோ அல்லது நீண்ட நேரம் வேலை செய்ததால் ஏற்படும் சோர்வு போன்றவற்றில் இருந்து தீர்வுக் காண ஐந்து நிமிடங்கள் பச்சை தண்ணீரில் நீராடினாலே போதுமானது. இது இரத்த ஓட்டத்தை உடல் முழுக்க சீராக்க உதவி, தசையை இலகுவாக உணர வைக்கிறது.

சருமம் வலுபெற
சருமத்தின் வலுவை அதிகரிக்கவும் இது வெகுவாக பயனளிக்கிறது. முதலில் இதமான நீரில் குளித்த பிறகு, பச்சை தண்ணீரில் சில நிமிடங்கள் நீராடுவதால் சருமம் இறுக்கமாகவும், சரும நுண்துளைகள் குறைக்கவும் இது உதவுகிறதாம்.

தலைமுடி நலன்
தலை முடி வறட்சி காரணமாக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள் குளிர்ந்த நீரில் நீராடுவதால் நல்ல தீர்வுக் காண முடியும் என்று கூறப்படுகிறது. இது, தலை முடி வறட்சியை போக்கி, மிருதுவான, மினுமினுப்பான கூந்தல் பெற உதவுகிறது.

மன அழுத்தத்தை போக்க
பச்சை தண்ணீர் முகத்தில் படும்படி நீராடுவதால் இதயத் துடிப்பு சீராகி மன அழுத்தத்தை குறைக்க வைக்க முடியுமாம். அதிகப்படியாக நீங்கள் மன அழுத்தத்தை உணரும் போது ஐந்து நிமிடம் குளிர்ந்த நீரில் நீராடினாலே போதும் நல்ல தீர்வினைக் காண முடியும்.



Click it and Unblock the Notifications
