Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி - அப்பா ஆகப் போகிறார்!!!
இன்றைய மருத்துவ உலகு வெற்றி படிகள் ஏறுவதற்கு பதிலாக, எஸ்கலேட்டர் வழியாக மிக வேகமாய் மேலேறி சென்றுக் கொண்டிருக்கிறது. சிறுநீரகம், கண், இதயம் என தொடந்து இப்போது ஆணுறுப்பையும் மாற்று அறுவை சிகிச்சை செய்து வெற்றிக் கண்டுள்ளது.
சிறிய ஆண்குறிப் பிரச்சனையில் இருந்து நிரந்தர தீர்வுக் காண, புதியக் கண்டுபிடிப்பு!!!
சென்ற வாரம், உலகிலேயே முதல் முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர், தான் அப்பா ஆகப் போவதாகவும், தனது பெண் தோழி தன் மூலம் கருவுற்றிருப்பதாகவும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.....
இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!

தென் ஆப்பிரிக்காவின் 21 வயது வாலிபன்
உலகிலேயே முதன் முறையாக கடந்த ஓர் மாத காலத்திற்கு முன்பு, தென் ஆப்பிரிக்காவினை சேர்ந்த 21 வயது வாலிபனுக்கு வெற்றிகரமாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பெண் தோழி கருவுற்றார்
இப்போது அந்த நபர் தன் மூலமாக தனது பெண் தோழி கருவுற்றதை, தனது ஆசை நிறைவேற காரணமாய் இருந்த தனது மருத்துவர் அன்ரூவ் வான் டேரிடம் கூறியுள்ளார்.

டாக்டர். ஆன்ரூவ் வான் டேர்
கேப் டவுன் பகுதியில் அமைந்துள்ள டைகர்பர்க் மருத்துவமனையை சேந்தவர் தான் டாக்டர். ஆன்ரூவ் வான் டேர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தனது மாணவர்களிடம், இதுப் போன்று சரித்திரத்தில் இடம் பெற போகும் ஓர் விஷயம் செய்யவிருப்பதாக கூறியிருந்தார்.

ஒண்பது மணி நேரம்
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாய் செய்து முடிக்க ஒன்பது மணி நேரம் ஆனதாம். ஆனால், இதற்கு பின்னணியில் மூன்று மாத கால கடின உழைப்பும் இருப்பதாக மருத்துவர் ஆன்ரூவ் கூறியுள்ளார்.

உலகம் முழுதான பாதிப்பு
உலகம் முழுதிலும் பல ஆண்கள் குறி சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதேப் போல விபத்தின் காரணமாக, ஆணுகுறி இழந்தவர்களும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் இது நல்ல தீர்வு தரும் என ஆன்ரூவ் கூறினார்.

இறந்தவர்களின் ஆணுறுப்பு
ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏதுவாக இருக்கும், இறந்தவர்களின் ஆண்குறி பரிசோதனை செய்து பயன்படுத்தப்படுகிறது.

ஆண்குறி சார்ந்த நோய்களுக்கு தீர்வு
ஆண்குறி இழந்தவர்கள் மட்டும் இல்லாது, ஆண்குறி சார்ந்த நோய் உள்ளவர்களுக்கும் கூட இந்த சிகிச்சையின் மூலம் தீர்வுக் காண இயலும்.

எச்.ஐ.வி'யைக் கட்டுப்படுத்தலாம்
இந்த புதிய ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம், எச்.ஐ.வி'யின் தாக்கத்தைக் கூட கட்டுப்படுத்த முடியும் என ஆன்ரூவ் வான் டேர் கூறியுள்ளார்.

மருத்துவ உலகின் மைல்கல்
ஆன்ரூவ் வான் டேரின் இந்த சாதனை, மருத்துவ உலகின் அசைக்க முடியாத மைல்கல் என மற்ற அனைத்து மருத்துவர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications