For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலரும் அறிந்திராத உடல் ஆரோக்கியம் குறித்த சில உண்மைகள்!!!

By Maha
|

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல எளிய வழிகள் உள்ளன. அந்த எளிமையான வழிகள் பற்றி பலருக்கும் தெரியாமல் இருப்பதால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை பின்பற்றி வருகின்றனர். ஆனால் அந்த வழிகளை தெரிந்து கொண்டால், நிச்சயம் உடலை ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வைத்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக, தூக்கத்தைப் போக்க ஆரோக்கியமற்ற காப்ஃபைன் நிறைந்த காபியைக் குடிப்போம். ஆனால் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் தூக்கம் கலைந்துவிடும் என்பது தெரியாது. இதுப்போன்று நிறைய விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை: 1

உண்மை: 1

ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 20-25 நிமிடம் ஓடினால் கட்டாயம், ஆரோக்கியமான வழியில் 1 கிலோ உடல் எடையைக் குறைக்கலாம்.

உண்மை: 2

உண்மை: 2

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து அன்றைய தினத்தை ஆரம்பித்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடனும், ஸ்மார்ட்டாகவும் செயல்பட முடியும்.

உண்மை: 3

உண்மை: 3

புகைப்பிடிப்பவர்கள் தினமும் பால் டீக்கு பதிலாக, ப்ளாக் டீ குடித்து வந்தால், நுரையீரல் பாதிக்கப்படுவதை ஓரளவு தடுக்கலாம்.

உண்மை: 4

உண்மை: 4

தூங்கும் முன் உடற்பயிற்சியை செய்தால், உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கலாம்.

உண்மை: 5

உண்மை: 5

ஆய்வு ஒன்றில், வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்கள், ஹோட்டலில் அதிகம் சாப்பிடுபவர்களை விட சில வருடங்கள் அதிகமாக வாழ்வதாக தெரிய வந்துள்ளது. எனவே ஹோட்டலில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.

உண்மை: 6

உண்மை: 6

காலையில் எழுந்ததும் சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு காப்ஃபைன் நிறைந்த காபி அல்லது டீ குடிப்பதை விட, குளிர்ச்சியான தண்ணீரைக் குடிப்பது மிகவும் சிறந்தது என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

உண்மை: 7

உண்மை: 7

ஒருவர் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மேல் தூங்கினால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தினமும் 7-8 மணிநேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

குறிப்பு

குறிப்பு

எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ளதை மனதில் கொண்டு பின்பற்றி வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts Nobody Told You About Health

A healthy lifestyle can add years to your life. Here are some surprising facts about health.
Desktop Bottom Promotion