மரணமற்ற வாழ்விற்கு அடித்தளம், ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடிப்பு!!!

By: John
Subscribe to Boldsky

நாளுக்கு நாள் மருத்துவ உலகம் பல படிகள் மேலேறிச் சென்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய ஆராய்ச்சியாளர்களின் பெரும் கனவாக இருப்பது, மரணத்தை வெல்வது தான். அதற்காக பல கோடிகளை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றனர். உலகும் முழுதும் இதற்கான ஆராய்சிகள் பெருமளவில் பல இடங்களில் நடந்துவருகிறது.

சிறிய ஆண்குறிப் பிரச்சனையில் இருந்து நிரந்தர தீர்வுக் காண, புதியக் கண்டுபிடிப்பு!!!

அந்த வகையில் பாஸ்டனில் இருக்கும் மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் உலகின் முதல் கை, கால் மாற்று சிகிச்சை தொழிநுட்பம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இனி, ஊனமற்ற சமூதாயத்தை உருவாக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல், மருத்துவ உலகையே பரபரப்பாக்கியுள்ளது.

விந்தணு உற்பத்தி அதிகரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதியக் கண்டுப்பிடிப்பு!!

மற்றும் இந்த சாதனையில் பங்கெடுத்துள்ள மருத்துவர். ஹரால்ட் ஒட் என்பவர் "இது, ஊனமுற்றவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர முதல் படியாக இருக்கும்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலியை வைத்து பரிசோதனை

எலியை வைத்து பரிசோதனை

மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனை மருத்துவர்கள், கைகள் அற்று இருந்த ஓர் எலிக்கு, இறந்த ஓர் எலியின் கையினை எடுத்து ஆய்வுக்கூடத்தில் வைத்து வளர வைத்து, பின் அறுவை சிகிச்சை மூலமாக ஊனமுற்ற எலிக்கு பொருத்தியுள்ளனர். பொருத்திய சில நொடிகளிலேயே விரைவாக இரத்த ஓட்டம் ஏற்பட்டதாகவும், புதிய சிகிச்சை முறையில் வெற்றிக் கண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

புதிய சிகிச்சையின் செயல் முறை

புதிய சிகிச்சையின் செயல் முறை

இறந்தவரின் உடல் பாகத்தை (கை, கால்) இறந்த சில நிமிடங்களில் அகற்றி, அதை ஆய்வுக் கூடத்தில் வைத்து பாதுகாத்து. பயோமெடிக்கல் பொறியியல் முறையான "ஈ.சி.எம்" எனும் முறைப்படி அந்த உறுப்பை தனிமைபடுத்தி, அதில் உள்ள செல்களின் உயிர் இறக்காமல் பாதுகாத்து வளர்க்கின்றனர். பிறகு அதை ஊனமுற்றவரின் பாகத்தில் சரியான நேரத்தில் இணைக்கப்படுகிறது.

முக்கியமான கட்டம்

முக்கியமான கட்டம்

ஆய்வுக் கூடத்தில் வைத்து இறந்தவரின் பாகங்களை வளர்க்கும் போது, நாளங்கள், தசை நாண்கள், தசைகள், எலும்புகள் போன்றவற்றின் வளர்ச்சியை சரியாக கண்காணிக்க வேண்டியது அவசியம். இது, நல்ல முறையில் நடந்தால் தான், அந்த உறுப்பை சரியாக பொறுத்த முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

கால அவகாசம்

கால அவகாசம்

ஆய்வுக்கூடத்தில் வைத்து, வளர்க்கப்பட்ட அந்த உறுப்புகள் நன்கு ஆரோக்கியமாக வளர்ந்த பிறகு, பொருத்தப்படும் நபருக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் பொருத்திவிடலாம் என்றும். அந்த உறுப்பை, பொருத்தப்படும் நபருக்கு ஏற்ப வளர்க்க இந்த கால அவகாசமே போதுமானது என்றும் கூறியுள்ளனர்.

சமீபத்திய ஆராய்சிகள்

சமீபத்திய ஆராய்சிகள்

சமீப காலங்களாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்து பல ஆராய்சிகள் நடந்து வருகின்றன. அதில், முகத்தில் இருந்து ஆணுறுப்பு / பிறப்புறுப்பு வரை உறுப்பு மாற்று சிகிச்சையில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது, உடல் ஊனம் மற்றும் நோய் அற்ற உலகை உருவாக்கிட பெரும் பயன் தரும் என்று நம்பப்படுகிறது.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

இது போன்று வேறொருவரின் உடல் உறுப்பை, இன்னொருவருக்கு பொருத்துவதனால், அந்த நபரின் குணாதிசயங்களில் எந்த மாற்றமும் இருக்காது, பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

இதுவரை...

இதுவரை...

இந்த ஆராய்ச்சியில் இதுவரை, கையை மட்டும் தான் மாற்றி ஆராய்ச்சி செய்துள்ளதாகவும். இனி வரும் நாட்களில், தோள்பட்டை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஆராய்ச்சி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பல ஆராய்ச்சிகள்..

பல ஆராய்ச்சிகள்..

ஊனமுற்றவர்கள் அல்லது கை, கால் இழந்தவர்களுக்கு தீர்வளிக்க, இந்த முறை மட்டுமே இன்றி இன்னும் பல முறைகள் இருப்பதாகவும். இனி வரும் ஆராய்சிகளில் இன்னும் திறன் அதிகமான முறைகள் கண்டறியப்படும் என்றும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dead Biolimbs Come Back To Life When Reattached

Dead 'Biolimbs' Come Back To Life When Reattached, Challenging Current Amputee Technology, Doctors from Massachusetts General Hospital in Boston have created the world’s first-ever “biolimb” — a functional body part grown from the recipient's living cells.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter