Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
எச்சரிக்கை: தும்மலை எப்போதுமே அடக்கக்கூடாது! ஏன் தெரியுமா?
தும்மல் என்பது நம் உடலுக்குள் உட்புக முயலும் தொற்றுக்களுக்கு எதிரான இயற்கையின் தற்பாதுகாப்பாகும். நாம் தும்மும் போது நம் உடலுக்குள் நுழைய முயலும் பாக்டீரியா அல்லது ஏதேனும் தீமையான துகள்கள், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வெளியேற்றப்படும். இந்த வழியில், ஆபத்தான தொற்றுக்கள் நம்மை அண்டாமல் தும்மல் நம்மை பாதுகாக்கும்.
பொது இடத்தில் தும்மும் போது, தும்முபவர் மற்றும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் அசௌகரியம் ஏற்படலாம். அதனால் நாம் தும்மும் போது, நம் அருகில் உள்ளவர்களிடம் "எக்ஸ்க்யூஸ் மீ" என கூறுவது வழக்கம். இருப்பினும், நாம் தும்மும் போது அருகில் உள்ளவர்கள் "கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" அல்லது "நீண்ட ஆயுளை பெறுங்கள்" என நம்மை ஏன் வாழ்த்துகிறார்கள் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? அதற்கு காரணம், தும்மலை தடுக்க முயற்சி செய்தால், அது நம் உயிருக்கே ஆபாத்தாய் போய் முடியலாம். ஆம், இது உண்மை தான்.
தும்மலை ஒரு போதும் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். அது உங்கள் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை உண்டாக்கி விடலாம். தும்மலால் எழும் காற்று அழுத்தம் காதுகள், மூளை, கழுத்து போன்ற ஏதேனும் உறுப்பிடம் திசை திரும்பி விடலாம். இதனால் அவைகளுக்கு பாதிப்பு உண்டாகும். தும்மலை நிறுத்த முயற்சி செய்வதால் ஏற்படும் ஆபத்தான உடல்நல தாக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அடுத்த முறை தும்மல் வரும் போது, அதை ஒருபோதும் தடுக்க முயற்சி செய்யாதீர்கள்.

தும்மலை நிறுத்துவது ஏன் ஆபத்தில் முடிகிறது?
தும்மல் வரும் போது மூக்கின் துளைகள் வழியாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று உள்ளேயும், வெளியேயும் செல்லும். நீங்கள் தும்மலை நிறுத்தினால், இந்த காற்று அழுத்தம் முழுவதும் காதுகள் போன்ற உடலின் வேறு ஒரு அங்கத்திற்கு திசை திருப்பப்படும். ஒரு வேளை காதுகள் என்றால், செவிப்பறைகளில் வெடிப்பு ஏற்பட்டு, காது கேட்காமலும் போகலாம். தும்மலை நிறுத்துவதால் உடல்நலத்தின் மீந்தும் கூட தீமையான தாக்கங்கள் ஏற்படலாம். தும்முவதால் நம் உடலுக்குள் நுழைய முயலும் தீமையான பாக்டீரியாக்கள் பலவற்றை வெளியேற்றும். தும்மலை நிறுத்துவதால், இத்தகைய ஆபத்தான கிருமிகள் நம் உடலிலேயே தங்கி, நோய்களை உண்டாக்கும்.

தும்மலை நிறுத்துவதால் ஏற்படும் பிற தீமையான தாக்கங்கள்
தும்மலை நிறுத்தினால் காற்றின் அழுத்தம் உள்ளே அடைபட்டு விடும். அதிகரித்த காற்று அழுத்தத்தினால், உங்கள் கண்களின் இரத்த தந்துகிகள் பாதிப்படைவதால் கண்கள் பாதிப்படையலாம் மற்றும் காதுகள் கேட்காமலும் போகலாம்.

வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது
கழுத்து காயங்கள் மற்றும் இடைத்தடுப்பில் பாதிப்பு போன்றவைகளும் உண்டாகலாம். சில அரிய நேரங்களில், மூளையில் உள்ள நரம்புகளில் ஏற்படும் முறிவுகளால் வாதமும் ஏற்படலாம்.

நாம் ஏன் தும்மலை நிறுத்துகிறோம்?
பொது இடத்தில் இருக்கும் போதோ அல்லது தும்மல் என்பது தர்மசங்கடமாக கருதப்படும் சில இடங்களில் இருக்கும் போதோ, நாம் தும்மலை நிறுத்த முயற்சி செய்வோம். பிறருக்கு தொந்தரவை அளிக்கலாம் என்ற காரணத்தினால், தும்மலை நிறுத்துவது நல்லதாகவும் ஒழுக்கமான ஒன்றாகவும் கருதப்படும். இருப்பினும், கண்டிப்பாக இது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதல்ல. உயிருக்கே ஆபத்தானதாக இருப்பதால், எப்போதும் தும்மலை நிறுத்த முயற்சி செய்ய வேண்டாம். தும்மல் வருவது வெட்கமாக இருந்தால், உங்கள் மூக்கில் கைக்குட்டையை வைத்து தும்மவும். இதனால் குறைந்த சத்தத்துடன் தும்முவது என தும்மும் முறைகளை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் மூக்கையும் வாயையும் கைகளால் மூடிக்கொண்டும் தும்மலாம். அப்படி செய்யும் போது, தும்முவது முறையற்றது என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள்.



Click it and Unblock the Notifications