Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பால்வினை நோயை கண்டறியும் புதிய நிறம் மாறும் ஆணுறை - மாணவர்கள் கண்டுபிடிப்பு!!!
ஸ்மார்ட் மொபைல், ஸ்மார்ட் டி.வி, ஸ்மார்ட் ஃபிரிட்ஜ், ஸ்மார்ட் வாட்ச் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், ஸ்மார்ட் காண்டம்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம். லண்டனில் இருக்கும் இல்போர்ட் (Ilford) எனும் பகுதியை சேர்ந்த மாணர்வர்கள் தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அய்யய்யயோ... ஆனந்தமே!!! ஆஸ்திரேலியா அறிஞர்கள் கண்டுப்பிடித்துள்ள புது வகை ஆணுறை!!!
ஆணுறையில் என்ன ஸ்மார்ட் என்று கேட்கிறீர்களா? ஆணுறை அணியாமல் தகாத உடலுறவுக் கொண்டால் பால்வினை நோய் பாதிப்பு ஏற்படும் என நாம் யாவரும் அறிவோம். ஆனால், உங்களுக்கு பால்வினை நோயின் தாக்கம் இருக்கிறது என்பதை அணிந்த உடனே எச்சரிக்கை மணி அடித்து வெளிக்காட்டும் தன்மையுடையது தான் இந்த ஸ்மார்ட் ஆணுறை....
காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் - ஷாக் ரிப்போர்ட்!!!

நிறம் மாறும் தன்மை
இந்த ஸ்மார்ட் ஆணுறையின் சிறப்பு என்னவெனில், ஒருவேளை உங்களுக்கு பால்வினை நோய் தாக்கம் இருந்தால், இதன் நிறம் பச்சை, மஞ்சள், நீலம், போன்ற வண்ணங்களில் மாறும், இதை வைத்து உங்களுக்கு பால்வினை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என அறிந்துக்கொள்ளலாம்.

பால்வினை நோய்கள் கண்டறிவது
பிறப்புறுப்பில் ஆணுறையை அணிந்தவுடன் அது பச்சை நிறத்தில் ஜொலித்தது எனில் கிளமீடியா "Chlamydia" பால்வினை நோய் ஏற்பட்டுள்ளது எனவும், மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது எனில் ஹெர்ப்ஸ் "Herpes" பால்வினை நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், ஊதா நிறம் என்றால் "Palpillomavirus", நீலநிறம் என்றால் "Syphilis" பால்வினை நோயின் தாக்கம் எனவும் கண்டறிந்துவிடலாம்.

விருது பெற்ற மாணவர்கள்
டீன்-டெக் (TeenTech) என்ற மாணவர் பங்கு பெரும் நிகழ்ச்சியில், ஸ்மார்ட் ஆணுறையை கண்டுபிடித்த மாணவர்களுக்கு சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறு கண்டறிகிறது ஸ்மார்ட் ஆணுறை
பிறப்புறுப்பில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியாவின் தாக்கத்தை வைத்து அதற்கு ஏற்ப நிறம் மாறி ஜொலிக்கும் தன்மை உடையதாய் இந்த ஸ்மார்ட் ஆணுறையை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இதனால் தான் இந்த ஆணுறையை அணிந்தவுடன் எந்த நோய் தாக்கம் உள்ளது என கண்டறிய முடிகிறது.

ஸ்மார்ட் ஆணுறையின் பெயர்
இந்த ஆணுறைக்கு "S.T.EYE" என்று பெயர் வைத்துள்ளனர் மாணவர்கள். அதாவது S.T (Sexual Transmitted) Eye. பொதுவாக ஆங்கிலத்தில் பால்வினை நோய்களை STD / STI என குறிப்பிடப்படுவது வழக்கம்.

ஐசாக் நியூட்டன் அகாடமி மாணவர்கள்
S.T.EYE ஸ்மார்ட் ஆணுறையை கண்டுபிடித்த மாணவர்களில் இருவரான தான்யால் அலி இதைப் பற்றி கூறுகையில், " மக்கள் பால்வினை நோய் குறித்து அறிந்துக்கொள்ளவும், அதற்கு ஏற்ப உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள எளிய வழியாக இது இருக்கும், இதுவே தாங்கள் இதை கண்டுபிடிக்க காரணமாக இருந்தது" என்றும் கூறினார்.

ஆராய்ச்சியாளர்கள் வியப்பு
இந்த ஆணுறை வருங்கால தலைமுறையை கலக்கும் என அந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பாராட்டி சென்றனர். வெறும் 14 வயது நிரம்பிய மாணவர்கள் இதைக் கண்டுப்பிடித்துள்ளனர் என்பது பல ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.

முடியின் நிறத்தை மாற்றும் கிளிப்
நீங்கள் உடுத்தும் உடையின் நிறத்திற்கு ஏற்ப, தலைமுடியின் நிறத்தை மாற்றும் கிளிப் ஒன்றை மற்றொரு குழு மாணவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இது, Wi-Fi உதவியோடு இயங்கும் திறனுடையது.

ஆபத்தில் எச்சரிக்கை அலாரம்
மற்றொரு குழு மாணவர்கள் கையில் அணியும் வகையிலான எச்சரிக்கை அலாரம்ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர். அது, மக்கள் ஏதேனும் அபாயத்தில் இருக்கும் போது அவர்களது அலைபேசியுடன் இனைந்து அழைப்பை தானாக ஏற்படுத்தும் திறன் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications