உங்களுக்கு 'அங்க' ரொம்ப அரிக்குதா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் 99 சதவீத ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது. இப்படி பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் சரும பிரச்சனைகள் தான். அதற்கு சரியான உடை அணியாதது மற்றும் போதிய சுகாதாரம் இல்லாதது தான் காரணம்.

குறிப்பாக பெண்களை விட ஆண்கள் தான் எப்போதும் அந்த இடத்தில் கை வைத்தவாறு இருப்பார்கள். பொது இடம் என்று கூட பார்க்காமல், அரிப்பு ஏற்பட்டால், உடனே சொரிய ஆரம்பிப்பார்கள். இந்த பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதற்கு முன், பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், அதனைத் தடுக்கும் சில இயற்கை வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து அரிப்பைப் போக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தத்தினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தால், அது பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகளின் வளர்ச்சியை அதிகரித்து, இதனால் அரிப்பை மேலும் மோசமாக்கிவிடும்.

இறுதி மாதவிடாய்

இறுதி மாதவிடாய்

இறுதி மாதவிடாய் நெருங்கும் போது, ஈஸ்ட்ரோஜென் குறைய ஆரம்பித்து, இதனால் பிறப்புறுப்பின் சுவர் சுருங்கி, அவ்விடத்தில் லூப்ரிகேஷன் குறைவாக இருந்து, அதன் மூலம் அவ்விடத்தில் அரிப்புக்கள் ஏற்படும்.

உலர்ந்த சருமம்

உலர்ந்த சருமம்

அவ்விடத்தில் உள்ள சருமம் மிகவும் வறட்சியாக எண்ணெய் பசை/ஈரப்பசை இல்லாமல் இருக்கும் போது, அது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்.

ஈஸ்ட் தொற்றுகள்

ஈஸ்ட் தொற்றுகள்

பெரும்பாலும் இந்த பிரச்சனை பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். அதிலும் இது பூஞ்சையினால் ஏற்படும் ஒரு நோய்த் தொற்று ஆகும். இது பிறப்புறுப்பில் வெள்ளையாக தயிர் போன்று பரவியிருக்கும். மேலும் இது ஆன்டி-பயாடிக், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் எடுப்பது, கர்ப்பம், மாதவிடாய் காலம், காண்டம் பயன்படுத்தி இருப்பது, உடலுறவு, நீரிழிவு மற்றும் வலிமையிழந்த நோயெதிர்ப்பு மண்டம் போன்றவற்றினால் தொற்றுகள் ஏற்படுகிறது.

கெமிக்கல்

கெமிக்கல்

கெமிக்கல் கலந்த பொருட்களான உள்ளாடையைத் துவைக்க பயன்படுத்தும் சோப்பு, நறுமணமிக்க ஸ்ப்ரே, ஆயின்மெண்ட், க்ரீம், ஜெல் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் நிலைமை மோசமாகும்.

தயிர்

தயிர்

தயிரை டேம்பானில் (Tampon) நனைத்து, சில மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை பெண்கள் தங்களின் பிறப்புறுப்பினுள் விட்டு, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஈஸ்ட் தொற்று நீங்கும்.

வினிகர்

வினிகர்

தினமும் வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இப்படி ஆண்கள் செய்து வந்தால், பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை கட்டுப்படுத்தலாம்.

ஐஸ்

ஐஸ்

இரவில் படுக்கும் போது, பிறப்புறுப்பில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், அவ்விடத்தில் ஏற்படும் அரிப்புகள் நீங்கும். இது ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

உப்பு தண்ணீர் குளியல்

உப்பு தண்ணீர் குளியல்

குளிக்கும் நீரில் அல்லது குளிக்கும் பாத் டப்பில் 4 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து, அதனுள் குறைந்தது 1/2 மணிநேரம் உட்கார்ந்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், ஒரே வாரத்தில் பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள தொற்றுகளை நீக்கி, அரிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

துளசி இலைகள்

துளசி இலைகள்

பாத் டப்பில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, அதில் துளசி இலைகளைப் போட்டு, அதனுள் 1/2 மணிநேரம் உட்கார்ந்து வந்தால், துளசி இலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள பாக்டீரியா தொற்றுக்களை நீக்கி, அரிப்புக்களை கட்டுப்படுத்தும். இதுவும் ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Causes & Home Remedies For Genital Itching

This genital itching problem can be cured with the help of home remedies. Here are some of the main causes of this common problem in men and women.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter