மனிதர்களின் டி.என்.ஏ'வை சேகரிக்க போட்டிப்போட்டு இயங்கி வரும் அமேசான், கூகுள்!!

Posted By: John
Subscribe to Boldsky

கிளவுட் சேமிப்பு முறை வந்ததற்கு பிறகு சேமிப்பின் அளவிலும், கட்டுப்பாட்டிலும் பெரிய மாற்றங்கள் வந்துவிட்டன. பல தொலைதொடர்பு நிறுவனங்கள் கிளவுட் சேமிப்பு சேவை தந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், சமீபத்தில் அமேசான், கூகுள் ஆகிய இரு நிறுவனத்திற்கு இடையே மனிதர்களின் டி.என்.ஏ'வை யார் சேமிப்பது என்ற போட்டி நிலவி வருவதாக நியூயார்க் மாநகர செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ஓ குடிநீர் குடிப்பது பொது மக்களின் உடல்நலத்துக்கு தீங்கானதா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!!!

எதற்காக மக்களிடையே பொருட்களை விற்றுகொண்டிருந்தவர்கள் டி.என்.ஏ'க்களை சேமிக்க போட்டியிட்டு வருகின்றனர் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஜீனோமிக்ஸ் எனப்படும் அடுத்த தலைமுறை மருத்துவத்தைக் குறிவைத்து தான் இவர்கள் ஓடிக்கொண்டிருகின்றனர். அப்படி என்ன அந்த ஜீனோமிக்ஸில் இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா?

இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் - ஆராய்ச்சியில் கண்டுப்பிடிப்பு!!!

தற்போது நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வரும் மருத்துவ முறை முற்றிலும் தவறானது ஆகும். உண்மையில் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட டி.என்.ஏ போல, தனிப்பட்ட மருந்துகள் தான் ஒத்துப்போகும். அதைப் பற்றிய ஆராய்ச்சிக்காக தான் இப்போது இந்த இரண்டு பெரு நிறுவனங்களும் போட்டியிட்டு வருகின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிப்பட்ட டி.என்.எ

தனிப்பட்ட டி.என்.எ

உலகில் உள்ள எந்த ஒரு தனி நபரின் டி.என்.எ'வும் மற்ற யாருடனும் ஒத்துப்போகாது. அதேப் போல, ஒவ்வொருவரின் டி.என்.எ'வும் ஒவ்வொரு தன்மையுடையது. அனைவரின் டி.என்.எ'வும் எல்லா மருந்துகளுக்கும், மருத்துவ முறைகளுக்கும் ஒத்துப்போகாது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

தற்போதுள்ள பெரும்பாலுமான மருந்துகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதன் மூலமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள உடநலக் குறைபாட்டினை தீர்க்க வழிவகுக்கின்றதே தவிர. உறுப்புகளில் ஏற்பட்ட சேதங்களை நேரடியாக சரி செய்வது இல்லை.

உறுப்புகளின் செயலாற்றல்

உறுப்புகளின் செயலாற்றல்

நமது உறுப்புகளின் செயலாற்றலில் குறைபாடு அல்லது சேதம் / கோளாறுகள் ஏற்படும் போது, அதை சரி செய்ய ஏற்ற தகுந்த மருந்துகள் தர வேண்டியது அவசியம். அதற்கான ஓர் புதிய அணுகுமுறையாக கருதப்படுவது தான் ஜீனோமிக்ஸ்

ஜீனோமிக்ஸ் (Genomics)

ஜீனோமிக்ஸ் (Genomics)

எதிர்கால / அடுத்த தலைமுறை மருத்துவம் என்று கூறப்படும் ஜீனோமிக்ஸ், ஒவ்வொரு தனி நபரின் டி.என்.எ'விற்கு ஏற்ற தனி மருந்து கண்டறிந்து அவரவரின் குறைபாடுகளையும், நோய்களையும் குணமடைய செய்யும் முறையாகும்

அறிவியல்

அறிவியல்

ஜீனோமிக்ஸ் என்பது கணினியின் உதவியோடு உங்கள் டி.என்.எ'வை ஆராய்ந்து, அதில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவம் செய்வது ஆகும்.

டி.என்.எ சேகரிப்பு

டி.என்.எ சேகரிப்பு

அரைநூற்றாண்டு காலமாக பல ஆராய்ச்சியாளர்கள் இந்த ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஓர் மனிதனின் டி.என்.எ'வை கணினியில் பதிவேற்றம் செய்து அதன் குறியீடுகளை சரியாக கண்டறிந்துவிட்டால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுக் காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்காக தான் அமேசான், கூகுள் நிறுவனங்கள் மனிதர்களின் டி.என்.எ'க்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

 பில்லியன் டாலர் வர்த்தகம்

பில்லியன் டாலர் வர்த்தகம்

இந்த முறையில் வெற்றிகண்டால், வருடம் தோறும் பில்லியன் டாலர்களில் வர்த்தகத்தில் லாபம் ஈட்டமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கல்லில் இரண்டு மாங்கா!!

ஒரே கல்லில் இரண்டு மாங்கா!!

அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மக்களின் டி.என்.எ'க்களை இலவசமாக சேமித்து வைக்க திட்டமிட்டு வருகிறது. இதன் மூலமாக, ஆராய்ச்சிக்கு அவர்களுக்கு டி.என்.எ மாதிரிகளும் கிடைக்கும், வருங்காலத்தில் இதற்கு அவர்கள் உரிமமும் பெற்றுக்கொள்ளலாம்.

பெரிய அளவில் அமேசான்

பெரிய அளவில் அமேசான்

கூகுளைவிட மிகவும் மும்மரமாக இதில் ஈடுபட்டு வருகிறது அமேசான் நிறுவனம்.

பெரிய புரட்சியாக மாறலாம்

பெரிய புரட்சியாக மாறலாம்

இந்த மருத்துவ முறை வருங்கால மருத்துவ உலகில் பெரும் புரட்சியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், இப்போது மருந்துகள் இல்லை என்று கூறப்படும் நோய்களை கூட மிக எளிதாக குணப்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazon, Google Race To Get Your DNA Into The Cloud

Amazon.com Inc is in a race against Google Inc to store data on human DNA, seeking both bragging rights in helping scientists make new medical discoveries and market share in a business