For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கசகசாவில் இருக்கும் வியக்கத்தக்க டாப் 5 மருத்துவ குணங்கள்!!!

|

பாப்பி எனும் மருத்துவ குணம் நிறைந்த செடியில் இருந்து பெறப்படுகிறது கசகசா. பாப்பி மலர்களை பெரும்பாலும் வெளிநாடுகளில் அலங்கார வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்துகிறார்கள். இந்த பாப்பி மலர்களின் விதைப்பை முழுவதுமாக காய்ந்த பிறகு அதன் உள்ளே இருக்கும் விதை தான் கசகசா.

அசைவ உணவுகளில் ருசியை அதிகரிக்க கசகசா சேர்க்கப்படுவதுண்டு. சில இனிப்பு மற்றும் கேக் உணவு வகைகளில் கூட கசகசா சேர்க்கப்படுகிறது. கசகசா உணவில் சுவையை மட்டுமின்றி, உடலில் நலனையும் அதிகரிக்க உதவுகிறது.

கசகசா வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, இதுவொரு சிறந்த மூலகை பொருளும் கூட, இனி இதில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுக்கு குளிர்ச்சி

உடலுக்கு குளிர்ச்சி

கசகசா தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டள்ளது. இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும் என எச்சரிக்கப்படுகிறது.

குழந்தைகளின் அழுகை குறையும்

குழந்தைகளின் அழுகை குறையும்

ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும். இது சூட்டை குறைக்கும் தன்மை உடையது ஆதலால், சூட்டின் தன்மையால் அழும் குழந்தைகள் இவ்வாறு செய்வதால், உடனே அழுகையை நிறுத்தும்.

அம்மை தழும்புகள் மறையும்

அம்மை தழும்புகள் மறையும்

பத்து கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை தழும்பு ஏற்பட இடம் மெல்ல, மெல்ல மறையும்.

வயிற்றுப் போக்கை நிறுத்தும்

வயிற்றுப் போக்கை நிறுத்தும்

வயிற்றுப்போக்கு ஏற்படும் போது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும் என்று கூறுகிறார்கள், இது பாட்டிக் காலத்து வைத்திய முறையாகும்.

பொடுகு தொல்லைக்கு தீர்வு

பொடுகு தொல்லைக்கு தீர்வு

பொடுகு தொல்லை இருப்பவர்கள், தலைக்கு குளிக்கும் முன்னர், சிறிதளவு கசகசாவை ஊறவைத்து அறைஹ்து தலையில் தடவி, சிறிது நேரம் நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால், நாள்ப்பட பொடுகு மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Health Benefits Of Kasakasa

Do you know about the amazing health benefits of kasakasa? read here.
Desktop Bottom Promotion