தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் உடலை இளகிய நிலைக்கு கொண்டுவர ஓர் சிறந்த இயற்கை முறை தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது. உடலை மட்டுமின்றி மனதையும் லேசாக உணர வைக்க உதவுகிறது தலைக்கு செய்யப்படும் எண்ணெய் மசாஜ்.

பஜ்ஜி, போண்டா, கெ.எப்.சி, சிக்கன் 65 அதிகமா சாப்பிட பிடிக்குமா? அப்ப நீங்க இதப் படிச்சே ஆகணும்!

நமது தாத்தா காலத்தில் வாரத்தில் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் வைத்திருந்தார்கள். ஆனால், நாம் இப்போது தலைக்கு தினமும் தேங்காய் எண்ணெய் கூட வைப்பதில்லை.....

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மனிதர்களுக்கு கிறுக்கு பிடிப்பது ஏன் என்று தெரியுமா?

தலைக்கு மசாஜ் செய்யுமுறை:

  • நான்கில் இருந்து ஐந்து டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை எடுத்து சூடு செய்யவும்
  • மந்தமான அளவு சூட்டில் இருக்கும் எண்ணெய்யை விரல்களால் ஓரிரு துளிகள் எடுத்து உச்சந்தலையில் விடவும்.
  • பிறகு சுழற்சி முறையில் உங்கள் தலையை மெல்ல தேய்த்து கொடுக்கவும்
  • ஐந்தில் இருந்து ஆறு நிமிடங்கள் இவ்வாறு மசாஜ் செய்யவும், பிறகு இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டும் இதே முறையில் மசாஜ்ஜை பின் தொடரலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒற்றை தலைவலி ஏற்படாமல் காக்கும்

ஒற்றை தலைவலி ஏற்படாமல் காக்கும்

இன்று பெரும்பாலான ஐ.டி வாசிகளை கட்டியனைத்து தொல்லை செய்கிறது எனில் அது இந்த ஒற்றை தலைவலி தான். தலைக்கு நீங்கள் மசாஜ் செய்வதால் இந்த ஒற்றை தலைவலியை குறைக்க முடியும். நெற்றியின் இருபுறங்களிலும், இரு விரல்களை பயன்படுத்தி மெதுவாக தேய்த்து கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். சிறிதளவு எண்ணெய் பயன்படுத்தினால் போதுமானது.

தலைவலியை போக்கும்

தலைவலியை போக்கும்

ஓயாமல் தினமும் தலைவலி ஏற்படுகிறது என மருந்து மாத்திரைகளை உட்கொள்வதை விட்டுவிட்டு, ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து பாருங்கள், அதன் பிறகு உங்களுக்கு தலைவலியே வராது.

முதுகுவலியை போக்கும்

முதுகுவலியை போக்கும்

தலைக்கு மசாஜ் செய்வதால், கழுத்து மற்றும் முதுகு வலியை கூட போக்க முடியும்.

தூக்கமின்மையை போக்கும்

தூக்கமின்மையை போக்கும்

மிகுந்த மன அழுத்தம் காரணமாகவும், உடல் சோர்வின் காரணமாகவும் இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா? கண்டிப்பாக உங்களுக்கு இந்த தலை மசாஜ் நல்ல தீர்வை தரும். தலைக்கு மசாஜ் செய்வதால், உடல் மற்றும் மனதின் இறுக்கம் குறைகிறது. இதன் பயனால் உங்களுக்கு இரவில் நல்ல தூக்கம் வரும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. இரத்த ஓட்டம் சீராவதால் ஸ்ட்ரோக் போன்ற பல உடல்நல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவனத்தை அதிகரிக்கும்

கவனத்தை அதிகரிக்கும்

உங்கள் குழந்தைகள் படிப்பில் கவனக் குறைவாக இருந்தால் வாரம் ஒரு முறையாவது அவர்களுக்கு தலை மசாஜ் செய்துவிடுங்கள். இது, கவனத்தை அதிகரிக்க உதவும்.

மன அழுத்தம் மற்றும் மன சோர்வு

மன அழுத்தம் மற்றும் மன சோர்வு

உச்சந்தலையில் எண்ணெய் வைத்து விரல்களால் தேய்த்து மசாஜ் செய்வதால் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு குறைகிறது.

உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது

உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது

உடல் மற்றும் மனதை லேசாக உணர வைக்கும் இந்த தலை மசாஜ் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இதனால், நீங்கள் மறுநாளில் இருந்து சிறந்த முறையில் உங்கள் வேலைகளில் ஈடுபட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Health Benefits Of A Head Massage

Head massage has a lot of health benefits. You must take a look at how this simple massage can do wonders for your being. Here are 8 reasons.
Story first published: Wednesday, August 19, 2015, 14:36 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter