Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
ஆண்களை அதிகம் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான சில எச்சரிக்கை அறிகுறிகள்!!!
ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள ஓர் முக்கிய உறுப்பு தான் புரோஸ்டேட் சுரப்பி. இந்த சுரப்பியின் முக்கிய செயல் விந்தணுக்களுக்கு பாதுகாப்பு தரும்படியான ஓர் திரவத்தை சுரப்பது தான். உலகில் புரோஸ்டேட் புற்றுநோயால் நிறைய ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால், அதன் அறிகுறி அவ்வளவு எளிதில் தெரியாது. இது அமைதியாக இருந்து ஆண்களைக் கொல்லும்.
ஆண்களே! புரோஸ்டேட் வீக்கம் வராம இருக்கணும்ன்னா... இதெல்லாம் மனசுல வெச்சு நடந்துக்கோங்க..
எனவே ஆண்கள் எப்போதுமே உஷாராக இருக்க வேண்டும். அதிலும் 35 வயதிற்கு மேல் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் 35 வயதிற்கு மேல் தான் புரோஸ்டேட் புற்றுநோய் அதிகம் தாக்கும். 35 வயதை எட்டிய ஆண்கள், தங்களுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்தாலோ, கடுமையான அடி முதுகு வலியால் கஷ்டப்பட்டாலோ மற்றும் சாதாரண நிலையிலும் ஆணுறுப்பில் ஒருவித எரிச்சலை உணர்ந்தாலோ உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்களே! 'அந்த இடத்தில்' அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா?
இவற்றை சாதாரணமாக நினைத்துவிட்டால், பிற்காலத்தில் தீவிரமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகள் தென்பட்டாலும், உடனே மருத்துவரை சந்தித்து உங்களை சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை அனைத்தும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

சிறுநீரில் ரத்தம்
புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி இருந்தால், இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, அதனால் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளிவருவதோடு, விந்தணு வெளியேற்றத்தின் போது இரத்தக்கசிவு காணப்படும். இப்படி தென்பட்டால், புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கம் உள்ளது என்று அர்த்தம்.

முதுகு வலி
விந்துத்தள்ளலின் போது ஆண்கள் அளவுக்கு அதிகமாக அடி முதுகுப் பகுதியில் வலியை உணர்ந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இதுவும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்று.

விறைப்புத்தன்மை குறைபாடு
விறைப்புத்தன்மை குறைபாட்டுடன், வலியுடன் கூடிய விந்துத்தள்ளல் இருந்தால், அதுவும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறியே.

அடிக்கடி சிறுநீர்
ஒரு நாளில் சொல்ல முடியாத அளவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், குறிப்பாக தண்ணீர் மற்றும் இதர நீர்ம பானங்கள் எதுவும் அருந்தாமல் இந்நிலை இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும். இது சாதாரணமாக உங்களுக்கு தோன்றினாலும், ஆண்களுக்கு இது மிகவும் ஆபத்தானது.

எரிச்சல்
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலியை உணர்ந்தால், அதை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஆண்குறியில் வீக்கம்
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருப்பதுடன், ஆண்குறியில் காயங்கள் அல்லது வீக்கங்கள் இருந்தால், இதுவும் புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

சிறுநீர் கழிக்க முடியாமல் தவிப்பது
சிறுநீர் கழிக்க முடியாமல் தவிக்கிறீர்களா? அப்படியெனில் உடனே புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் கட்டிகள் வளர்ந்தால் தான், அவை சிறுநீர் கழிப்பதில் தடையை ஏற்படுத்தும். எனவே சங்கடப்படாமல் சோதனை செய்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
