Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஃபளூடாவில் சேர்க்கும் சப்ஜா விதையின் நன்மை என்னவென்று தெரியுமா...?
சப்ஜா விதைகளைப் பார்த்துள்ளீர்களா? சரி, நீங்கள் ஃபளூடா சாப்பிட்டதுண்டா? அதில் உள்ள பாசிப்போன்று கருப்பு நிற விதைகளை பலரும் சுவைத்து சாப்பிட்டிருப்பீர்கள். அது தான் சப்ஜா விதைகள். பலருக்கும் 'சப்ஜா விதைகள்' என்று சொன்னால் தெரியாது. இந்த விதைகளை சிலர் 'துளசி விதைகள்' அல்லது 'கருப்பு கசகசா' என்றும் அழைப்பார்கள்.
இந்த விதைகளால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், பல வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். இந்த விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த விதைகள் உடல் சூட்டினால் அவஸ்தைப்படுவோருக்கு நல்லது. சரி, இப்போது அந்த சப்ஜா விதைகளினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

எடை குறைவு
சப்ஜா விதைகள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த விதைகளை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காது. இதற்கு அதில் உள்ள நார்ச்சத்து காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருந்தால், உடல் எடை அதிகரிப்பதை நிச்சயம் தடுக்கலாம். எனவே எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, இந்த விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடல் சூடு
பொதுவாக சப்ஜா விதைகளை கோடையில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இது உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். எனவே நீங்கள் மிகுந்த உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், சப்ஜா விதைகளில் இரவில் படுக்கும் போது இளநீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் குடியுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

நீரிழிவு
சப்ஜா விதைகள் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. நீரிழிவு நோயாளிகள் இதனை நீரில் ஊற வைத்து, குளிர்ந்த பாலுடன் சேர்த்து, அத்துடன் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் கலந்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கலாம்.

மலச்சிக்கல்
மலச்சிக்கலால் நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், சப்ஜா விதைகள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு தினமும் சப்ஜா விதைகளை நீரில் 1-2 மணிநேரம் ஊற வைத்து, படுக்கும் முன் அதனை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதை உணரலாம்.

அசிடிட்டி
சப்ஜா விதைககள் வயிற்றில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். ஒருவேளை நீங்கள் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டியால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தால், இரவில் நீரில் ஊற வைத்த சம்ஜா விதைகளை மறுநாள் காலையில் டீ/காபி குடிக்காமல், பாலுடன் சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்து, பின் அதனை உங்களுக்கு பிடித்த மில்க் ஷேக், ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், பால் போன்றவற்றுடன் கலந்து குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications
