படுக்கையில் மிகவும் சிறப்பாக செயலாற்ற 9 வழிகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

இரவு முழுவதும் படுக்கையில் குதூகலம் காண வேண்டுமா? அப்படியானால் நீங்கள் தனியாள் இல்லை. சரி, உங்கள் படுக்கையில் உங்களால் திறம்பட செயல்பட முடியவில்லை என்றால் என்னவாகும்? கண்டிப்பாக நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் மிகவும் மோசமான செக்ஸ் அனுபவத்தை தான் பெறுவீர்கள். பொதுவாக படுக்கையில் தங்களின் ஆற்றுகையை மேம்படுத்த வேண்டும் என்று தான் ஆண்கள் நினைப்பார்கள். ஒன்று, அது தங்களின் தற்போதைய பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக இருக்கலாம். இல்லையென்றால் ஏற்கனவே செயலாற்றும் வகையை விட புதிய முறையை கையாளுவதற்காக செய்யலாம்.

பாலுணர்வை ஊட்டுகிற பல பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. அவைகள் உங்கள் ஆண்மையை ஊக்குவித்து, படுக்கையில் உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும். ஆனாலும் கூட சில எளிய முறைகளை பின்பற்றினால் படுக்கையில் நீங்கள் ஒரு குதிரையை போல் செயல்படலாம். இனியும் மருந்து கடைகளை நாடி நீங்கள் செல்லத் தேவையில்லை. படுக்கையில் சிறப்பாக செயலாற்ற அந்த 9 வழிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? ஆவலாக உள்ளதா? தொடந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியமும்.. படுக்கையில் செயலாற்றுதலும்..

இதய ஆரோக்கியமும்.. படுக்கையில் செயலாற்றுதலும்..

இரத்த கொதிப்பில் தான் உங்கள் ஆணுறுப்பு இயங்குகிறது. உங்கள் ஆணுறுப்புக்கு செய்கை அனுப்புவது மூளை. இதனால் குழாய்கள் இரத்தத்தால் விரிவடையும். உங்கள் இதயம் தான் அந்த இரத்தத்தை பம்ப் செய்யும். இந்த செயல்முறையின் போது பிரச்சனை ஏற்பட்டால், உங்கள் ஆணுறுப்பு சீக்கிரமே நொண்டி அடிக்க ஆரம்பித்து விடும். அதற்கு காரணம், நீங்கள் விரும்பிய நேரம் வரை, குழாய்களால் அழுத்தத்தை தக்க வைத்து கொள்ள முடிவதில்லை. ஆணுறுப்பின் முழுமையான விறைப்பு இயலாமை உட்பட மேலும் சிக்கல்கள் உண்டாகலாம். அதனால் உங்கள் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அடிப்படையில், உங்கள் இதயத்திற்கு நல்லதாக உள்ளது செக்ஸ் வாழ்க்கைக்கும் நல்லதாகவே அமையும்.

சுறுசுறுப்புடன் இருங்கள்

சுறுசுறுப்புடன் இருங்கள்

உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பான வழிகளில் ஒன்றாக மேம்படுத்த இதய குழலிய உடற்பயிற்சி விளங்குகிறது. உடலுறவில் ஈடுபடும் போது இதயத் துடிப்பு அதிகரித்தாலும், சீரான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உங்கள் இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இதனால் படுக்கையில் உங்கள் செயலாற்றுகை மேம்படும். நீச்சல், ஓடுவது போன்ற வியர்க்க வைக்கும் உடற்பயிற்சிகளில் 30 நிமிடங்கள் ஈடுபட்டால், உங்கள் ஆண்மை ஊக்குவிக்கப்பட்டு, உங்கள் படுக்கையில் மாயங்கள் நிகழும். உடற்பயிற்சியில் நீங்கள் இழக்கும் எடை கண்டிப்பாக வீண் போகாது.

உணவுகளும்.. விறைப்புகளும்..

உணவுகளும்.. விறைப்புகளும்..

ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க வேண்டுமானால், உடற்பயிற்சிகளோடு சேர்த்து சில உணவுகளையும் உண்ணுங்கள். அதில் சில:

* வெங்காயமும் பூண்டும் - உங்கள் சுவாச காற்றுக்கு இது சிறந்தது அல்ல என்றாலும் கூட, இந்த இரண்டு உணவுகளும் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

* வாழைப்பழம் - வளமையான பொட்டாசியத்தை கொண்டுள்ள இந்த பழம் உங்கள் இரத்த கொதிப்பை குறைக்கும். இது முக்கியமான பாலியல் பாகங்களுக்கு பயனை அளித்து, படுக்கையில் உங்கள் செயலாற்றுகையை மேம்படுத்தும்.

* மிளகாயும் மிளகும் - இயற்கையான அனைத்து மசாலா பொருட்களும், உங்கள் இரத்த கொதிப்பு மற்றும் அழற்சியை குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

உணவுகளும்.. விறைப்புகளும்..

உணவுகளும்.. விறைப்புகளும்..

திடமான விறைப்பை அடைவதற்கு இன்னும் சில உணவுகளும் உதவும். அவையாவன:

* ஒமேகா-3 அமிலங்கள் - கிழங்கான் மற்றும் சூரை மீனில் உள்ள இது, வெண்ணெய்ப்பழம் மற்றும் ஆலிவ் எண்ணெயிலும் கூட உள்ளது. இந்த வகையான கொழுப்பு உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

* வைட்டமின் பி1 - இந்த வைட்டமின் நரம்பியல் அமைப்பில் செய்கைகளை வேகமாக நகர வைக்கும். மூளையில் இருந்து ஆணுறுப்புக்கு செல்லும் செய்கையும் இதில் அடக்கம். பன்றிறைச்சி, கடலை பருப்பு மற்றும் கிட்னி பீன்சிலும் கூட இது உள்ளது.

* முட்டைகள் - மற்ற பி வைட்டமின்கள் அதிகமாக உள்ள முட்டை ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த உதவும். விறைப்பின் போது ஏற்படும் அழுத்தத்தை இது குறைக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கவும்

மன அழுத்தத்தை குறைக்கவும்

மன அழுத்தம் ஏற்பட்டால் உங்கள் ஆண்மை உட்பட, உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். மன அழுத்தம் உங்கள் இதயத் துடிப்பை அதிகரித்து (மோசமான வழியில்), இரத்த கொதிப்பை உயர்த்தும். இதனால் பாலியல் ரீதியான விருப்பம் மற்றும் செயலாற்றுகையை பாதிக்கும். மன அழுத்தத்தை போக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி மிகச் சிறந்த வழியாகும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உங்கள் மன அழுத்தத்தைப் பற்றி பேசினாலும் கூட நீங்கள் சற்று சாந்தமடையலாம். இதனால் உங்கள் உறவும் கூட வலுவடையும். மன அழுத்தம் ஏற்படும் போது புகைப்பிடிப்பது, மது குடிப்பது போன்ற சில கெட்ட பழக்கங்களையும் தூண்டிவிடும். இதனாலும் கூட படுக்கையில் சிறப்பாக செயலாற்ற முடியாமல் போகலாம்.

தீய பழக்கங்களை கைவிடுங்கள்

தீய பழக்கங்களை கைவிடுங்கள்

புகைப்பிடிப்பது மற்றும் மது குடிப்பது போன்ற தீய பழக்கங்களால் கூட உங்கள் ஆணுறுப்பு சரியாக செயலாற்றாமல் போகும் என ஒரு ஆய்வு கூறியுள்ளது. சிறிதளவு ரெட் ஒயின் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் என் ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் போது மோசமான விளைவுகள் ஏற்படும்.

புகைப்பிடிக்கிறீர்களா அல்லது போதைப் பொருள் பயன்படுத்துகிறீர்களா? இந்த இரண்டை செய்வதற்கு சரியான காரணத்தை கண்டிப்பாக கூற முடியாது. இந்த ஊக்கிகள் உங்கள் இரத்த குழாய்களை ஒடுக்கி விடும். இதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. கெட்ட பழக்கங்களை கை விட்டு, உடற்பயிற்சி செய்தல், நல்ல உணவுகளை உண்ணுதல் போன்ற சில ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றினால், உங்கள் படுக்கையறை செயலாற்றுகை மேம்படும்.

 சூரிய ஒளி வேண்டும்

சூரிய ஒளி வேண்டும்

கோடைக்காலத்தில் உங்களின் செக்ஸ் இயந்திரம் சிறப்பாக செயல்படுவதன் பின்னணியில் என்ன உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? சூரிய ஒளி உங்கள் உடலில் படும் போது, மெலடோனின் இயற்கையான உற்பத்தி தடைபடும். இது தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனாகும். ஆனால் செக்ஸ் தூண்டுதலை அமைதியாக்கும். குறைவான மெலடோனின் என்றால் உடலுறவின் போது தீவிர ஆசையை உண்டாக்கும்.

வெளியே சென்று சூரிய ஒளியில் சற்று நேரம் இருந்தால் உங்கள் செக்ஸ் உணர்வு தூண்டி விடப்படும்; குறிப்பாக குளிர் காலத்தில், உங்கள் உடல் அதிகமாக மெலடோனினை உற்பத்தி செய்யும்.

சுய இன்பம் காணுதல் மற்றும் நீட்டித்தல்

சுய இன்பம் காணுதல் மற்றும் நீட்டித்தல்

படுக்கையில் நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அளவிற்கு உங்களால் நீடிக்க முடியவில்லையா? அப்படியானால் உங்களுக்கு சில பயிற்சி தேவை. உடலுறவுக்கு சிறந்த பயிற்சியே உடலுறவு தான். ஆம், சுய இன்பம் காணும் போது நீடித்து செயலாற்ற கற்றுக் கொள்ளலாம்.

இருப்பினும், நீங்கள் எப்படி சுய இன்பம் காண்கிறீர்கள் என்பதை பொறுத்து சில ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். நீங்கள் அதில் அவசரப்பட்டால், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் படுக்கையில் செலவழிக்கும் நேரமும் குறையும். அதன் ரகசியமே அதனை நீட்டிப்பது தான்.

வாழ்க்கைத் துணையிடம் கவனம் செலுத்துக...

வாழ்க்கைத் துணையிடம் கவனம் செலுத்துக...

உடலுறவு என்பது ஒரு வழி பாதை கிடையாது. உங்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களில் கவனம் செலுத்துவதும் முக்கியமாகும். இது உடலுறவை மகிழ்ச்சிகரமானதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், நீடித்து நிலைக்கவும் உதவும். சூடான தருணத்தில் உங்கள் வேகத்தை குறைப்பது அவருக்கு ஒரு மாதிரியாக தோன்றாமல் இருக்க, இதனைப் பற்றி அவரிடம் முன்பாகவே கூறி விடுங்கள்.

நீங்கள் இடைவேளை எடுத்துக் கொள்ளும் போது, வேகத்தை மாற்றினாலோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கவனத்தை செலுத்தினாலோ, அது அதனை மேலும் சந்தோஷமான அனுபவமாக மாற்றும்.

அதிக உதவியை பெற்றுக் கொள்வது

அதிக உதவியை பெற்றுக் கொள்வது

சில பேருக்கு விறைப்பு செயல் பிறழ்ச்சி அல்லது பெய்ரோனி நோய் போன்ற சில மிக முக்கியமான செக்ஸ் பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் இதனைப் பற்றி பேச தயங்காதீர்கள். உங்கள் படுக்கை செயலாற்றுகையை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பற்றியும் அவரிடம் பேசுங்கள்.

இன்னமும் கூட உடற்பயிற்சி செய்து, சரியாக உட்கொண்டு, ஆனந்தமான செக்ஸ் வாழ்க்கையை வாழ்வது ஒன்றும் மோசமான முடிவல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

9 Ways To Improve Sexual Performance

there are plenty of male enhancement pills on the market, there are simple ways to stay firmer and last longer without having to visit the pharmacy. Read more to find easy ways to improve your sexual performance.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter