Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்...
மகிழ்ச்சி என்பது மனத்தில் தான் உள்ளது. மனதை சந்தோஷமாக வைத்திருப்பது அவ்ளோ கஷ்டமில்லை. மனமிருந்தால் மார்க்கம் உண்டு தானே! அதேபோல் நம் உடல் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஆகையால் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலே போதும், சந்தோஷத்திற்கு ஒன்றும் குறைவிருக்காது.
அவசியம் படிக்க வேண்டியவை: காலையில் வேகமாக எழும் நபராக மாற வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
நாள் முழுக்க சந்தோஷமாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது? இதோ அதற்கான சில ஈஸியான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டயட்
காலை சாப்பாட்டில் அதிக புரோட்டின் சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள், மாலையில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவைப் பெரும்பாலும் தவிர்த்து விடுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முட்டையில் உள்ள புரோட்டினும், அதன் மஞ்சள் கருவில் இருக்கும் வைட்டமின் பி12-ம் நம் மனநிலையை சந்தோஷமாக வைக்க உதவுகின்றன.

உடற்பயிற்சி
நடை பயிற்சி அல்லது மெல்லோட்டம் போன்ற எளிதான உடற்பயிற்சி நாள் முழுக்க நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும்.

சூரிய வெப்பத்துக்கு பை பை
சூரிய வெப்பத்திலிருந்து நம் உடம்பைப் பாதுகாத்துக் கொள்ள நிறைய க்ரீம்கள் இப்போது கிடைக்கின்றன. சில க்ரீம்கள் குளிர்காலத்திற்கும் நல்லது.

நிறைய நீர் குடிக்கவும்
வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி... தாகமாக இருக்கும் போதோ, பசி எடுக்கும் போதோ தண்ணீரையே நிறையக் குடியுங்கள். அது பசியையும் கட்டுப்படுத்தும்.

சூயிங் கம் மெல்லவும்
மன அழுத்தம் அதிகம் இருந்தால் சூயிங் கம் ஒன்றை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் உடல் சோர்வும் குறைந்து சந்தோஷமான மனநிலைக்குத் திரும்பலாம்.

முதுகு, கழுத்து வலியைக் குறைக்கவும்
இப்போதெல்லாம் முதுகு வலியில் அவதிப்படுபவர்கள் அதிகம். காரில் உட்காரும் போது, ஒரு டவலை நன்றாகச் சுருட்டி மடக்கி முதுகுக்குக் கீழ் பகுதியில் வைத்து அமரவும். வீட்டிலோ ஆஃபீஸிலோ கூட இதை ட்ரை பண்ணலாம்.

சரியான நேரத்தில் சாப்பிடவும்
இரவு உணவில் ஏ, டி, ஈ, கே வைட்டமின்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, வைட்டமின் டி அளவை அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள்.

பாத மசாஜ் செய்யவும்
இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு 15 நிமிடத்திற்கு உங்கள் பாதங்களை நனையுங்கள். வலி ஏதும் இருந்தால் பறந்தோடி விடும். அதற்குப் பின் பாதத்தில் நல்ல க்ரீமையும் தடவிக் கொள்ளுங்கள்.

வேகமா எழவும்
காலையில் வேகமாக எழுந்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து சுறுசுறுப்புடன் இருந்தாலே, அந்த நாள் முழுதும் சந்தோஷமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications