Latest Updates
-
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்
கல்லீரல் பாதிப்பிற்கான அறிகுறிகள்!!!
கூம்பு வடிவில், செந்நிறம் கலந்த பழுப்பு நிறத்தில், வயிற்றுக் குழியின் மேற் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான மனித உறுப்பு தான் ஈரல். நம் உடலில் 500-க்கும் மேற்பட்ட செயற்பாடுகளை செய்து வருகிறது ஈரல்.
ஈரல் என்ற இந்த முக்கியமான உறுப்பை அக்கறையுடன் கவனிக்க வேண்டும். மஞ்சள் காமாலை, அதிக கொலஸ்ட்ரால், ஈரால் வீக்கம் மற்றும் ஈரல் செயலிழப்பு போன்ற காரணங்களாலும் ஈரல் பாதிக்கப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்தல் மற்றும் அளவுக்கு அதிகமான பித்த நீர் சுரத்தல் போன்ற காரணங்களால் தான் இந்த வியாதிகள் ஏற்படுகிறது. நோயாளியை பரிசோதித்த பின்னர், அது ஈரல் சம்பந்தப்பட்ட வியாதிகளா அல்லது ஈரல் செயளிழப்பா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். ஈரல் பாதிப்புக்குள்ளாகும் போது சில அறிகுறிகளை காட்டும்.
இந்த கட்டுரையில், நாம் தவிர்க்க கூடாத ஈரல் பாதிப்பிற்கான சில அறிகுறிகளை பற்றி பார்க்க போகிறோம். ஈரலின் செயற்பாட்டில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை இந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டும். அதனால் அவைகளை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. கல்லீரல் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனே ஒரு மருத்துவரை அணுகுங்கள்.

மஞ்சள் நிற உடல்
கண்கள், சருமம் மற்றும் நகங்கள், மஞ்சள் நிற சாயலை பெற்றால், அது ஈரல் பாதிப்பிற்கான முக்கிய அறிகுறியாகும். சிறுநீரின் நிறம் தொடர்ச்சியாக மஞ்சள் நிறத்தில் இருந்தால், இதுவும் ஒரு முக்கிய அறிகுறியே. பித்த நீரின் உற்பத்தி அதிகமாக இருப்பதாலேயே இந்த நிற மாற்றம் ஏற்படுகிறது. அழற்சி, ஈரல் அணுக்களில் முறை பிறழ்தல்நாற்றும் பித்த நாளத்தில் பிரச்சனை போன்ற காரணங்களால் பித்த நீரின் உற்பத்து அதிகரிக்கும். உங்கள் உடல், கண்கள் அல்லது சிர்னீரின் நிறம் மஞ்சள் நிறத்தில் மாறும் போது உடனே மருத்துவரை அணுகுங்கள்.

குமட்டல்
தொடர்ச்சியான குமட்டல் உணர்வு மற்றும் வாந்தி ஏற்பட்டால், ஈரல் பாதிப்பிற்கான மற்றொரு அறிகுறி அது. ஈரல் பாதிப்பு அல்லது ஈரல் செயலிழப்பால், பித்த நீர் உறபத்தி அதிகரிக்கும் போது குமட்டல் உணர்வுகள் ஏற்படும். அப்படி நடக்கும் போது குமட்டலும் வாந்தியும் அதிக்கடி ஏற்படும். சில நேரம், அறிய சந்தர்ப்பத்தில், வாந்தி எடுக்கும் போது இரத்தமும் வெளியேறும். மீண்டும் மீண்டும் நோய்வாய் படும் போது, உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். ஈரல் பாதிப்பு என்பது முக்கியமான விஷயம். அதனால் அதனை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீங்கிய வயிறு
வீங்கிய வயிறு என்பது நாம் கண்டிப்பாக தவிர்க்க கூடாத ஈரல் சீர்குலைவிற்கான அறிகுறியாகும். ஈரலின் செயற்பாட்டில் தடை ஏற்படுவதால் வயிறு வீக்கமடையும். இந்நேரத்தில் உங்கள் வயிறு இறுகி, பொருமல் ஏற்படும். ஈரலில் அதிமுக்கிய பாதிப்பு ஏற்படும் போது தான் இந்த அறிகுறி தென்படும். ஏற்கனவே இது ஆபத்தான கட்டம் என்பதால் இதையும் லேசாக எடுத்துக் கொள்ள கூடாது.

தூக்கம்
ஈரல் செயலிழப்பு அல்லது பிறழ் தொழிறல்பாடு, நோயாளிகளுக்கு தூக்கத்தை வரவழைக்கும். அதனால் எப்போதுமே கிறக்கத்துடன் இருப்பார்கள்; ஒழுக்காக செயல்பட கூட முடியாமல் போகும். மேற்கூறிய அறிகுறிகளுடன் இந்த அறிகுறியும் சேரும் போது, அது தீவிரமான ஈரல் பாதிப்பு என்பதை உணர்த்த கூடியதாக இருக்கும். அதனால் ஈரல் பாதிப்பிற்கான இந்த அறிகுறிகளை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஈரல் பாதிப்படைந்த நோயாளி எப்போது பார்த்தாலும் தூங்கி கொண்டே இருப்பார்.

மனநிலை பாதிப்பு
மிகவும் மோசமான நிலையில் ஈரல் பாதிக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் அறிகுறி தான் இது. ஈரல் சீர்குலைவால் மூளையின் செயல்பாடுகள் பாதிப்படைய தொடங்கும். மூளை உடனே மறுவினை செய்யாமல், எப்போதுமே குழப்பமான மன நிலையில் இருப்பார்கள் நோயாளிகள். ஈரல் பாதிப்பின் அதிமுக்கிய அறிகுறி இது. இப்படி பட்ட நேரத்தில் நோயாளிக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அவசியமானது. இதனை தவிர்த்தால், நோயாளியின் நிலைமை கவலைக்கிடமாக மாறி விடும்.

கோமா
ஈரல் பாதிப்பின் கடைசி மற்றும் மோசமான அறிகுறியாக கருதப்படுவது கோமா. மேற்கூறிய அனைத்து அறிகுறிகளையும் தவிர்த்து வந்தால், நோயாளி உடனடியாக கோமா நிலைக்கு சென்று விடுவார்.



Click it and Unblock the Notifications
