Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தூக்கத்தில் பற்களை கொறிக்கும் பழக்கம் உள்ளதா?
தூக்கத்தில் பற்களைக் கடிப்பது குறட்டை விடுவது போலத் தான்; ஆழ்ந்து உறங்கும் போது தான் இது நடக்கிறது. தூக்கத்தில் பற்களைக் கடிக்கிறோம் என்பது இந்தப் பழக்கம் உள்ளவர்களுக்கே தெரியாது. இதில் 'கடி'யாகி பக்கத்தில் படுத்திருப்பவர்கள் சொன்னால் தான் உண்டு.
குறட்டையை நிறுத்துவது போல இதைக் 'குணப்படுத்த'வும் சில வழிமுறைகள் உள்ளன. சிலருக்கு இது தானாகவே நின்று போகவும் வாய்ப்புள்ளது. இப்போது இது குறித்த சில தகவல்களைப் பார்ப்போமா?

குழந்தைகளுக்கு...
குழந்தைகளுக்கு இருமுறை தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம் வரும். ஒன்று, அவர்கள் மிகவும் சிறு குழந்தைகளாக இருக்கும் போது. மற்றொன்று, அவர்களுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது. ஆனால் இது நிரந்தரம் கிடையாது. அவ்வப்போது லேசாகத் தலைவலி வரும், தாடைகள் வலிக்கும், சிலருக்கு தெத்துப் பல் வரும்.
இன்னும் சில குழந்தைகள் வளர்ந்த பிறகும், இந்தப் பழக்கம் தொத்திக் கொண்டிருக்கும். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. ஆனால், அலர்ஜி மற்றும் தவறான பல்வரிசை உள்ளிட்ட காரணங்களை சிலர் கூறுவார்கள்.

அறிகுறிகள்
நறநறவென்று பற்களை அரைப்பது, கடுகடுவென்று கடிப்பது உள்ளிட்ட பல அறிகுறிகள் மூலம் இந்தப் பழக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இரவு தூங்கும் போது பற்களைக் கடித்தால், மறுநாள் காலை உங்களுக்குத் தலைவலியும், தாடை வலியும் நிச்சயம் ஏற்படும்

காரணங்கள்
இந்தப் பழக்கத்திற்கு மருத்துவரீதியாக 'ப்ரூக்சிஸம்' என்று பெயர். மன அழுத்தம் தான் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் சீரற்ற பல்வரிசை மற்றும் உடைந்த பற்களும் காரணங்களாகக் கூறப்படுகிறது.

தீர்வு
இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க பற்கவசத்தை மாட்டிக் கொள்ளலாம். சில பல் டாக்டர்கள் பற்களை முழுவதுமாக மாற்றி, செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொள்ள அறிவுறுத்துவார்கள். குறிப்பாக பற்களை முறையாகப் பராமரிக்கவும் வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை
மன அழுத்தத்தைக் குறைக்க, யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இப்பழக்கத்தை சரி செய்யலாம். மேலும் காபி, ஆல்கஹால் மற்றும் சூயிங் கம் மெல்லும் பழக்கத்தைத் தவிர்ப்பதும் நல்லது.



Click it and Unblock the Notifications