Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கைகளில் வரும் மூட்டு வலியை குணப்படுத்தும் 6 இயற்கை வழிகள்!!!
கைகள் மற்றும் புஜங்களில் வலியை ஏற்படுத்தும் மூட்டு வலிக்கு ஆர்த்ரிடிஸ் என்று மருத்துவ பெயர் உள்ளது. ஒரு எலும்பு மற்றொரு எலும்புடன் உராயும் போது ஏற்படும் வலிக்கு ஆர்த்ரிடிஸ் என்று பெயரிட்டுள்ளார்கள்.
ஆர்த்ரிடிஸ் குறைவாகவோ அல்லது தாங்க முடியாத வலியுடனோ இருக்கலாம். இந்த பிரச்னை நெடு நேரத்திற்கு நீடித்திருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இந்நோயை குணப்படுத்த வீட்டிலேயே செய்யக் சில நிவாரணங்களும் உள்ளன. இதன் மூலம் கடுமையான மூட்டு வலியை சற்றே குறைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.
இதுப்போன்று வேறு: எப்போதும் அலட்சியப்படுத்தக் கூடாத உடல் வலிகள்!!!
இப்பொழுது கைகள் மற்றும் விரல்களில் வரும் மூட்டு வலிகளை குறைக்கும் சில வழிமுறைகளைப் பற்றி உங்களுக்கு தெரியப்படுத்தவிருக்கிறோம்.

அதீத எடை
அதீத எடை தான் தசை மற்றும் மூட்டு வலிகளுக்கு ஆதாரமாக உள்ளது. எடையின் காரணமாக தசைகளிள் இழுவை மற்றும் நீட்சி அதிகளவு ஏற்பட்டு, வலியைக் கூட்டுகின்றன. எனவே, எடையை சற்றேனும் குறைத்தால் புஜங்கள் மற்றும் கை மூட்டுகளில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க முடியும். நீங்கள் எடையை குறைக்க முயற்சிக்கும் போது, அதிகமான அழுத்தத்தை மூட்டுகளில் கொடுக்காமல் இருக்க வேண்டியதும் அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் போதுமான எடையைக் குறைக்க பயன்படுத்த வேண்டிய திட்டங்களாகும்.

உடனடி பயிற்சிகள்
கைகளில் வரும் ஆர்த்ரிடிஸ் வலிகளை உடனடியாக குறைக்க என்றே சில பிரத்யோகமான பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகள் பொதுவாகவே உடலை நீட்டி வளைக்கும் பயிற்சிகளாக இருப்பதால் வலியையும், தசைகள் இறுக்கமடைவதையும் குறைக்கின்றன. முணிக்கட்டை நீட்டியும், வட்ட வடிவில் சுழற்றவும் செய்யலாம், கைகளை நீட்டவும், முழங்கைகளை மடக்கியும் சில பயிற்சிகளை செய்யலாம். இந்த உடனடி பயிற்சிகள் மிகவும் எளிமையானவையாகவும், வேறு எவருடைய துணையும் இல்லாமலும் செய்யக் கூடிய பயிற்சிகளாகும்.

வலியை குறைக்கும் கிரீம்கள் மற்றும் ஜெல்
ஆர்த்ரிடிஸ் வலி கைகளில் வருவதைக் குறைப்பதில் மென்தாலை அடிப்படையாக கொண்ட கிரீம்கள் சிறந்த பலனை அளிக்கின்றன. உங்களுக்கு ஏற்ற கிரீமை எடுத்துக் கொண்டு, கைகளில் எப்பொழுதெல்லாம் வலி வருகிறதோ அப்பொழுதெல்லாம் தடவிக் கொள்ளுங்கள். இந்த கிரீம் உடனடி நிவாரணம் அளிக்கக் கூடியதாகும். சந்தைகளில் சாதாரணமாக கிடைத்து வரும் இந்த கிரீம்களை உடலின் வெளிப்புறத்தில் மட்டுமே தடவ வேண்டும். இவற்றை பயன்படுத்துவதால் கைகள் மற்றும் விரல்களின் மூட்டு வலிகளுக்கு சிறிதளவு நிவாரணம் கிடைக்கும்.

மசாஜ்
மினரல் ஆயில் மசாஜ் செய்யும் போது உங்களுடைய விரல்கள் மற்றும் கைகளின் ஆர்த்ரிடிஸ் வலி குறையும். ஆயில் மசாஜ் செய்வதால் வலியுடன் சேர்த்து எரிச்சலும் குறையும். தொடர்ந்து மசாஜ் செய்வதால் வலியை பெருமளவு குறைத்திட முடியும். பனை எண்ணைய், ஆலிவ் எண்ணைய் மற்றும் தேங்காய் எண்ணைய் ஆகியவற்றை இதற்காக பயன்படுத்தாலம். எண்ணையை சூடாக்கி வைத்து மசாஜ் செய்தாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும். சிறந்த வாசனைப் பொருட்களை உள்ளடக்கியுள்ள எண்ணைய்கள் மூட்டு வலியைக் குறைக்கும் இயற்கையான நிவாரணிகளாக உள்ளன.

இஞ்சி ஜுஸ்
இஞ்சிக்கு எரிச்சலை தடுக்கும் குணங்கள் உள்ளன. தினமும் இஞ்சி ஜுஸ் குடித்து வருவது ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைக்கும். இந்த ஜுஸ் மூட்டு வலி மற்றும் சதைகளின் வலியைக் குறைக்கும் தன்மை வாய்ந்ததாகும். இதில் ஆன்டிசெப்டிக் குணங்களும் உள்ளன. இஞ்சி ஜுஸை வீட்டிலேயே செய்து கைகள் மற்றும் விரல்களின் ஆர்த்ரிடிஸ் வலிகளை குறைத்து நிவாரணம் பெறுங்கள்.

வெந்நீர் வைத்தியம்
உடனடி நிவாரணம் பெற விரும்பினால் வெந்நீர் குளியலோ அல்லது ஒரு ஹாட் பேக்கையோ கைகளில் ஏந்திக் கொள்ளுங்கள். நீராவியின் வெப்பம் அல்லது ஹாட் பேக்கில் உள்ள தண்ணீரின் வெப்பம் ஆர்த்ரிடிஸ் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கக் கூடியதாக உள்ளது. இது வீட்டிலிருந்தே நிவாரணம் தரக் கூடிய ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகும். இந்த வழிமுறையை தொடர்ந்து பயன்படுத்துவதால் எந்த விதமான தீய விளைவுகளும் ஏற்படுவதில்லை.



Click it and Unblock the Notifications











