Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைப்பதற்கான ஆற்றல்மிக்க 6 வழிகள்!
மாதவிடாயின் போது ஏற்படும் வலி பெண்களிடையே சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒரு பிரச்சனையாகும். அதனால் இதனை சரிசெய்ய ஏராளமான மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இந்த மருந்துகள் பெண்களின் உடல்நலம் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பக்க விளைவுகளுடன் கூடியவையாகும்.
இந்த பிரச்சனையை நிவர்த்திக்கக்கூடிய, பக்கவிளைவுகளற்ற இயற்கையான வழிமுறைகளைப் பற்றி இக்கட்டுரையில் நாம் கூறவிருக்கிறோம். இந்த வழிமுறைகள் மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பதோடல்லாமல், அச்சமயத்தில் உண்டாகக்கூடிய இதர பல பிரச்சனைகளையும் நிவர்த்திக்கக்கூடியவையாகும்.
மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்...?
இவ்வழிமுறைகள் மாதவிடாய் பிரச்சனைகளுக்கான மருந்தை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள உங்களுக்கு உதவக்கூடியவையாகும். இம்மருந்துகளில் உபயோகிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய, விலை அதிகமல்லாத பொருட்கள் என்பது இவற்றின் கூடுதல் நன்மையாகும்.

இஞ்சி
ஒரு டம்ளர் தண்ணீரில் 29 கிராம் இஞ்சியை கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு பாதியாக குறைந்த பின், அதனை வடிகட்டவும். இவ்வாறு வடிகட்டிய தண்ணீரை தினமும் இருவேளை பருகவும். இந்த நிவாரண வழிமுறையை மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தொடங்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து இந்த வழிமுறையை பின்பற்றினால், கட்டாயம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். மாதவிடாயின் போது, வழக்கத்தை விட அதிகமான அளவிலான இஞ்சியை சேர்த்து தயாரித்த டீயை மாதவிடாயினால் அவஸ்தைப்படும் பெண்ணுக்கு கொடுக்கலாம். இது மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க உதவும்.

கடுகு
கடுகை தண்ணீரில் கொதிக்க விடவும். இவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு பருத்தித் துணியை நனைத்து, லேசாக பிழிந்த பின், அதனை மாதவிடாயினால் அவதிப்படும் பெண்ணின் வயிற்றின் மீது வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் அப்பெண்ணுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த வழிமுறை மாதவிடாய் காலங்களின் போது ஏற்படக்கூடிய வலியை நிறுத்துவதற்கு பெரிதும் உதவும்.

ஓமம்
ஓமத்தை பொடி செய்து, அதில் அரை டேபிள் ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் இருவேளை (காலை மற்றும் மாலை வேளைகளில்) பருகி வரலாம். மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

வெந்தயம்
மாதவிடாயின் போது வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்தண்ணீரை தினமும் இரு வேளை அருந்தலாம். இது உங்களுக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

கருஞ்சீரகம்
அரை டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க விடவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப்பாக குறையும் வரை தொடர்ந்து கொதிக்க விடவும். பின் இத்தண்ணீரை வடிகட்டி தினமும் ஒருவேளை பருகி வரவும். இவ்வாறு செய்வது மாதவிலக்கின் போது ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க பெரிதும் உதவும்.

பெருங்காயம்
நெய்யில் பெருங்காயத்தை வறுக்கவும். அதனை அரை டம்ளர் பாலில், இரண்டு டேபிள் ஸ்பூன் தேனுடன் சேர்த்து கலக்கவும். சுமார் ஒரு மாதம் வரையில் தினமும் மூன்று வேளை இவ்வாறு பருகி வரவும்.



Click it and Unblock the Notifications