For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதால் சந்திக்கும் சில ஆரோக்கிய குறைபாடுகள்!!!

By Ashok CR
|

மேகி நூடுல்ஸ் என்பது அனைத்து வயதினராலும் விரும்பப்படும் மலிவான மற்றும் விருப்பமான உணவாகும்! இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்பாகவும் இதை சொல்லலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! நேரம் கிடைக்காத அளவு கடினமாக உழைப்பதால் சமையலறையில் நுழைவதற்கு கூட நேரம் கிடைக்காதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது ஒரு முக்கிய உணவாக கருதப்பட்டு உலகளாவிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே போல் நூடுல்ஸ் அட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள் இன்னமும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளது.

கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

பிரதான உணவுகளை தவிர வேறு எந்த உணவையும் உண்ணாமல் கட்டுப்பாட்டுடன் மக்கள் வாழ்ந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு எதற்கும் நேரம் கிடைக்காததால், ஆரோக்கியமற்ற சுத்தமில்லாத உணவுகளை உண்ண பழகிக் கொண்டார்கள். இதன் காரணமாக பல விதமான புது புது நோய்களும் வரத் தொடங்கி விட்டது. தற்போதைய சூழலில், உடனடி நூடுல்ஸை 'புற்றுநோய் நூடுல்ஸ்' எனவும் குறிக்கலாம். "சுவையுடன் கூடிய ஆரோக்கியம்" என்ற சொல் இனியும் ஒத்துப்போவதாக இல்லை. இதற்கு சாட்சியாக பல நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது.

அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!!!

2 நிமிட மேகி நூடுல்ஸ் என்பது உங்கள் வயிற்றுக்கும் உட்புற உறுப்புகளுக்கும் பெரிய புதிராக அமையும். அதனால் இந்த உணவினைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு காரணம், இந்த உணவை அதிகமாக உட்கொண்டவர்கள் பலர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அதனால் இப்படிப்பட்ட நூடுல்ஸால் ஏற்பட போகும் குறைபாடுகளைப் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜங்க் உணவு

ஜங்க் உணவு

இன்றைய வேகமான உலகத்தில், எதற்குமே நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் பல நபர்கள் ஜங்க் உணவுகளை நாடி செல்கின்றனர். நேரமின்மையும், அளவுக்கு அதிகமான வேலை பளுவும் சேர்ந்து மேகி நூடுல்ஸ் போன்ற உணவுகளை உண்ணும் நிலைக்கு நம்மை தள்ளி விட்டுள்ளது. ஆம், பிறகு என்ன அதை உட்கொள்வதற்கு 2 கப் வெந்நீர் இருந்தால் போதும் தானே. ஆனால் இவ்வளவு வேகமாக தயாராகும் உணவுக்கு கண்டிப்பாக ஜங்க் உணவு பட்டியலில் இடமுள்ளது. உடல் ஆரோக்கிய வல்லுனர்களால் ஜங்க் உணவு வகையில் சேர்க்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மைதா சேர்க்கப்பட்டுள்ளது; அதாவது மிஞ்சிய மைதா உமியில் இருந்து தயார் செய்யப்படுவதால் இதில் கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இது சுலபமாக செரிமானமாகும் உணவல்ல. அதனால் ஜங்க் உணவான இது நம் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

செரிமான அமைப்பில் பிரச்சனைகள்

செரிமான அமைப்பில் பிரச்சனைகள்

பெரும்பாலும் மேகியை நம்பி வாழ்பவர்களுக்கு செரிமான அமைப்பில் பல பிரச்சனைகள் ஏற்படும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் வயிற்று வலி, ஈரல் மற்றும் கணைய பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியமான உங்களின் இந்த வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக சோதனைகளை சந்திப்பதற்கான எச்சரிக்கை மணி தான் இது. அதன் சுவைக்கு உங்களுக்கு ஊதியம் கிடைக்காமலா இருக்கும்? ஆம், இந்த ஜங்க் உணவால் முதலில் பிரதானமாக பாதிக்கப்பட போவது உங்கள் செரிமான அமைப்பே. இது உங்கள் செரிமான அமைப்பில் புயலை கிளப்பி, செரிமானமின்மை மற்றும் இரைப்பைக் குடல் அழற்சி நோய் போன்றவைகள் ஏற்படலாம். வெளியில் பார்க்க கவர்ச்சிகரமாக தெரிந்தாலும் கூட உண்மை உங்கள் வயிற்றுக்குள் மறைந்திருக்கிறது.

குறைந்த அளவிலான வைட்டமின்கள்

குறைந்த அளவிலான வைட்டமின்கள்

மேகி நூடுல்ஸின் பாக்கெட் உங்களை இந்த உலகத்தையே மறக்க வைத்துவிடும். மேலும் வெகு விரைவிலேயே தயாரிக்கப்படும் இந்த உணவில் மட்டும் தான் உலகத்திலேயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை இன்னும் பலருக்கு தெரிவதில்லை. உடனடி நூடுல்ஸ்களில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் மற்றும் உடல் ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒரு முறை உண்ணும் மேகி நூடில்ஸில், தேவையான புரதம் மற்றும் வைட்டமின்கள் கிடைக்காமல் குறைபாடு ஏற்படும். இதனால் இந்த உணவு நீண்ட நாள் பயனை கண்டிப்பாக அளிக்காது. இந்த உணவில் கால்சியம் மற்றும் கனிமங்கள் வளமையாக உள்ளது என கூறப்படுவதெல்லாம் உண்மையல்ல. இருப்பினும் நூடுல்ஸின் அட்டையில் இதெல்லாம் இருக்கிறது என கூறப்படுகிறது.

அதிக அளவிலான சோடியம்

அதிக அளவிலான சோடியம்

அதிக இரத்த கொதிப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு சோடியம் என்பது உயிர் கொல்லியாக விளங்குகிறது. நமக்கு பிடித்தமான நூடுல்ஸில் சோடியம் என்பது ஒரு புதையல் அளவிற்கு இருக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இடர்பாடு அதிகம். மேகி நூடுல்ஸில் அதிக அளவிலான சோடியம் உள்ளதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இது ஆபத்தாய் விளங்கும். மேலும் மோனோசோடியம் க்ளுடோமெட் தடயங்களும் இதில் அதிகமாக உள்ளது. இதுவும் நமக்கு ஆபத்தாய் அமையும். மேகியை தினமும் உட்கொண்டு வந்தால், சின்ன குழந்தைகள் பல வகை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இரத்த கொதிப்புக்கும், இதய நோய்களுக்கும் கூடுதல் அளவிலான சோடியமும் காரணமாகும்.

உடல் பருமன்

உடல் பருமன்

அளவுக்கு அதிகமாக மேகியை உட்கொண்டால் கொலஸ்ட்ரால் மற்றும் இதய பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் இதய குழாய்களிலும், தமனிகளிலும் அடைப்பு ஏற்படலாம். இன்றைய கால கட்டத்தில் உடல் பருமனாக இருக்கும் நபர்கள் அதிகரித்துக் கொண்டே போனாலும், தினசரி அடிப்படையில் மேகி நூடுல்ஸை உட்கொண்டு வருபவர்களின் உடல் எடை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

உடல் வறட்சி

உடல் வறட்சி

மேகி நூடுல்ஸை தினசரி அடிப்படையில் உட்கொள்பவர்கள் பலரும் உடல் வறட்சி பிரச்சனைகளை கூறி வருகின்றனர். மேகி நூடுல்ஸை உட்கொள்ளும் வயதானவர்களும், மடிக்கணினியை வைத்து வேலைப்பார்ப்பவர்களும் சில உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பிசுபிசுவென இருக்கும் நூடுல்ஸ் உங்களுட்புற உடல் உறுப்புகளோடு ஒட்டிக் கொள்ளும். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் அளவுக்கு அதிகமான நீர் வெளியேற்றம் போன்ற பல உபாதைகள் ஏற்படும்.

பேக் செய்யப்படுவதற்கு முன்பே பதனம் செய்தல்

பேக் செய்யப்படுவதற்கு முன்பே பதனம் செய்தல்

மேகி நூடுல்ஸில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது என பலரும் கூறுகின்றனர். பேக் செய்யப்படுவதற்கு முன்பு மேகி நூடுல்ஸ் சூடுபடுத்தப்படுகிறது என கூறப்படுகிறது. இதனால் நூடில்ஸில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. மேலும் நம் விருப்ப உணவான உடனடி நூடுல்ஸில் கார்போஹைட்ரேட்ஸ் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பேக் செய்யப்படுவதற்கு முன்பாக செய்யப்படும் இந்த பதனிடப்படுதல், ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கைகளை குறைத்துவிடும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள உணவாக இது மாறுகிறது. ஆகவே மேகி கூறும் பல செய்திகளும் சாத்தியங்களும் உண்மையல்ல.

ஆட்டா நூடுல்ஸ்

ஆட்டா நூடுல்ஸ்

முழு கோதுமையால் நன்றாக தயாரிக்கப்பட்டுள்ள ஆட்டா நூடுல்ஸ் நல்ல உணவாக தெரியலாம். ஆனால் அதில் அளவுக்கு அதிகமான காய்கறி ஊட்டச்சத்துக்கள் என கூறப்படுவதெல்லாம் உண்மையல்ல. அதில் காணப்படும் உலர்ந்த பட்டாணி மற்றும் சில கேரட்கள் எவ்விதத்திலும் நமக்கு நன்மையை அளிக்காது. இவையெல்லாம் அவர்களின் பொருட்களை விற்பதற்கு மக்களை ஏமாற்றும் ஒரு வேலையாகும். புதிய ஆட்டா நூடுல்ஸ் அதன் ஊட்டச்சத்துக்களுக்காக சற்று முக்கியமான உணவாக மாறிவிட்டது. ஆனால் உண்மைக்கு புறம்பாக பல அடி ஆழத்தில் பொய் மறைந்திருக்கிறது.

சைவமா? இல்லையா?

சைவமா? இல்லையா?

மேகி நூடுல்ஸ் என்பது சைவமா இல்லையா என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாக உள்ளது. பலர் மேகியை குறை சொல்கின்றனர். பன்றி இறைச்சியை அதில் பயன்படுத்தியுள்ளதாக பலரும் சந்தேகிக்கின்றனர். சைவ உணவை உண்ணும் அனைத்து மேகி பிரியர்களே, அதனை உண்ணுவதற்கு முன்பாக யோசியுங்கள். இந்த வெறியர்களும், மார்க்கெட்டிங் நபர்களும், இதனை எப்போதும் முன்னிலை படுத்தியே விளம்பரப்படுத்துவார்கள். ஆகவே சிந்தித்து நல்ல முடிவை எடுப்பது நம் கடமையாகும்.

அதிக கலோரிகள்

அதிக கலோரிகள்

ஒரு பாக்கெட் மேகியில் தோராயமாக 400 கலோரிகள் இருப்பதாக அறியப்படுகிறது. இதில் அதிக கலோரிகள் இருக்கிறது என்பதற்கு இது போதாதா? அதனால் இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஆரோக்கியமற்ற உணவாகும். அதனை பற்றிய பல ஆபத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டாலும் கூட இன்னமும் பலர் அதனை பிரியப்பட்டு உட்கொண்டு வருகின்றனர். அதிக கலோரிகள் என்பது மோசமான பிரச்சனை என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Disadvantages of Eating Maggie Noodles

2 minutes Maggie Noodles can be explicit and intriguing to your stomach and its internal systems. Thus it is important to avoid the malediction of this food as many cases have been witnessed of sufferings due to excessive Maggie intake. Let us investigate the key disadvantages this reckonable and auric noodle provides us with.
Desktop Bottom Promotion