Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
கோடையில் ஏற்படும் உடல் வறட்சியை தடுக்க சில டிப்ஸ்...
வெயில் காலம் ஆரம்பித்த நிலையில், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படவும் ஆரம்பிக்கும். அவற்றில் முக்கியமான ஒன்று தான் உடல் வறட்சி. பொதுவாக வெயிலில் அதிக நேரம் சுற்றினால் தான் உடலில் வறட்சி ஏற்படும். ஆனால், தற்போது அடிக்கும் வெயிலைப் பார்த்தாலே உடலில் வறட்சி ஏற்படுவது போல் உள்ளது. உடலில் 75% நீர் உள்ளது. அத்தகைய உடலில் வறட்சி ஏற்பட ஆரம்பித்தால், எவ்வளவு தண்ணீர் குடிக்கின்றோமோ, அதே அளவில் நீரானது உடலில் இருந்து விரைவில் வெளியேறும்.
இத்தகைய உடல் வறட்சி ஏற்பட்டிருப்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறியலாம். அவை தலைவலி, வறட்சியான சருமம், வெப்பத்தில் இருப்பது போல் உணர்வது, மஞ்சள் நிற சிறுநீர் வெளியேறுதல், வறட்சியான இருமல், எப்போதும் தாகமாக இருப்பது, பசியின்மை மற்றும் மயக்கம் போன்றவை. இந்த மாதிரியான பிரச்சனைகள் உடலில் தெரிந்தால், அப்போது பயப்படாமல், ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால், அவற்றை சீக்கிரம் குணப்படுத்தலாம்.
அத்தகைய செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், விரைவில் உடல் வறட்சியை போக்கிவிடலாம்.

போதுமான தண்ணீர் குடிப்பது
எப்போதும் முடிந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் எங்கு வெளியே சென்றாலும், ஒரு பாட்டில் தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடித்தால், உடலில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சரியான ஸ்நாக்ஸ்
ஸ்நாக்ஸ் சாப்பிட நினைக்கும் போது பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சியை தவிர்க்கலாம். ஏனெனில் காய்கறிகள் மற்றும் பழங்களில் நீர்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும். எனவே இதனை சாப்பிட்டாலும், உடல் வறட்சியை தடுக்கலாம்.

சத்தான பானங்கள்
தண்ணீர் மட்டும் உடல் வறட்சியை போக்க உதவுவதில்லை. பல பானங்களும் உடல் வறட்சியை போக்க பயன்படுகின்றன. அதிலும் இளநீர், எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி, பதநீர் போன்றவை உடல் வெப்பத்தை
தணிக்கவும், உடல் வறட்சியை போக்கவும் உதவியாக உள்ளன. எனவே இவற்றை அவ்வப்போது சாப்பிட்டால், வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும்
ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்காமல், அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணமே வறட்சியான இருமல் வரும் போது தான் ஞாபகம் வரும். எனவே அவ்வாறு தண்ணீர் குடிப்பதை மறப்பவர்கள், ஒரு மணிநேரத்திற்கு அலாரம் வைத்து தண்ணீர் குடிக்கவும்.

காப்ஃபைன் பானங்களை தவிர்க்கவும்
காப்ஃபைன் அதிகம் உள்ள பானங்களை அறவை தவிர்க்க வேண்டும். அதிலும் காபி, கோலா மற்றும்
இது போன்ற மற்ற பானங்களில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. ஆகவே இவற்றை அதிகம் குடிப்பதை
தவிர்க்கவும். ஏனெனில் உடலில் வறட்சியை ஏற்படுத்துவதில் காப்ஃபைனும் ஒன்று. எனவே
காபிக்கு பதிலாக கரும்பு சாற்றை குடிப்பது நல்ல பலனைத் தரும்.

ஆல்கஹாலை தவிர்க்கவும்
ஆல்கஹாலும் உடலில வறட்சியை ஏற்படுத்தும். குறிப்பாக பீர் மற்றும் ஒயின் அதிகமாக வறட்சியை
உண்டாக்கும். எனவே கோடையில் அதிகமாக இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை
உடலில் உள்ள நீரை மட்டும் உறிஞ்சி வெளியேற்றி, உடல் வறட்சியை உண்டாக்கிவிடும்.

வெளியே செல்வதை தவிர்க்கவும்
மற்ற காலங்களில் வெளியே சுற்றுவது போல், கோடையில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவில் வேலைகளை விரைவில் முடித்து விட்டு, வீட்டிலேயே இருப்பது நல்லது. மேலும்
அலுவலகத்திற்கு காலையில் கடுமையான சூரியக் கதிர்கள் வருமுன் சீக்கிரம் சென்று விட்டு,
மாலையில் அதேப் போல் சூரியக் கதிர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு செல்வது உடலில் வறட்சி
ஏற்படாமல் தடுக்கும்.

வெளிர் நிற ஆடைகளை உடுத்தவும்
ஆடைகளை உடுத்தும் போது அடர்ந்த நிறமுள்ள ஆடைகளை உடுத்துவதை தவிர்த்து, வெளிர் நிற ஆடைகளை உடுத்துவது சிறந்தது. குறிப்பாக வெள்ளை நிற ஆடைகள் கோடையில் உடுத்துவதற்கு ஏற்றது. மேலும் காட்டன் ஆடைகளை உடுத்தினால், உடல் வெப்பம் அதிகரிக்காமல் தடுப்பதோடு, வறட்சியையும் தடுக்கும். ஏனெனில் அடர்ந்த நிறமுள்ள ஆடைகள், சூரியக்கதிர்களை ஈர்க்கக்கூடியவை. ஆனால் வெளிர் நிற ஆடைகள், சூரியக்கதிர்கள் ஊடுருவுவதை தடுக்கும்.

சரியான பாதுகாப்பு
வெளியே செல்லும் போது, வெளிர் நிற ஆடைகளை அணிந்து, குடைகளை எடுத்துக் கொண்டோ அல்லது
தலைக்கு தொப்பி, கண்களுக்கு கூலிங் கிளாஸ் போன்றவற்றை அணிந்து சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.



Click it and Unblock the Notifications
