Latest Updates
-
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும் 15 வழிகள்!!!
உடல் வலிமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்க தசைகள் மிக முக்கியம். அனைத்து ஆண்களுக்கும் தசைகளை மேம்படுத்த வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். சினிமா, சீரியல் போன்ற அனைத்து பொழுதுபோக்குகளிலும் தசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்டப்படுகின்றது. இதற்கென பல பயிற்சி கூடங்கள் பரவலாக இருக்கின்றன.
பயிற்சி கூடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியாகவே உடற்பயிற்சி செய்பவர்களும் உண்டு. அவ்வாறு செய்பவர்கள் அதற்கென இருக்கும் நிபுணர்களின் ஆலோசனைப் படி செய்வது மிக மிக அவசியம். அதற்காக நிலைகளை அதன் இலக்கணப்படி செய்தால் தான் பலன் அடைய முடியும்.
காலை பொழுதுகளில் இவற்றை செய்வது மிக மிக நல்லது. இதை செய்யும் போது, அதிகப்படியான சக்திகள் வெளியேறுவதால் உடலுக்கு வலிமை சேர்ப்பது மிக மிக முக்கியம். அதற்காக சத்துக்களும், புரதமும் நிறைந்த உணவை உட்கொள்ளுதல் மிக முக்கியம். தசைகளை அதிகப்படுத்தும் போது உடல் மற்றும் கண்ணையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இப்போது இங்கு எளிமையான முறையில் தசைகள் பெறுவதற்கான வழிகளை காண்போம்.

கலோரி உட்கொள்ளல்
தசைகளை பலப்படுத்த தீவிர எடை பயிற்சி தேவை. அதற்கான சக்தியை கலோரி தருகின்றது. இதை அதிகம் உட்கொண்டாலும், எடை மிகவும் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு தேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகரை ஆலோசித்து கலோரி உணவை எடுத்து கொள்ள வேண்டும்.

கலவை உடற்பயிற்சி
ஒன்றுக்கு மேற்பட்ட உடற்பயிற்சியை செய்வது தான் கலவை பயிற்சி. கலவை பயிற்சிகள் தசை உருவாக்கத்திற்கு உதவுகின்றது. இந்த பயிற்சிகள் எடைகள் மற்றும் கேபிள்கள் கொண்டு செய்யப்படுகின்றது.

காலையில் பயிற்சி செய்யவும்
தசைகளின் பயிற்சிக்கு அதிகாலை பொழுதே சிறந்த நேரமாகும். வெறும் வயிற்றுடன் காலையில் பயிற்சி செய்தால், தசைகளுக்கு தேவையான பலத்தை அளிக்க முடியும்.

செரிமானத்திற்கு உதவுபம் உணவுகள்
தசைகளை பலம் அடைய செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால், உணவு பழக்கத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதனுடன் சத்துள்ள உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும்.

உடல் வறட்சி அடையாமல் பார்த்து கொள்ளுங்கள்
தசைகளை பலப்படுத்த நாள் முழுவதும் அதிக நீர் அருந்த வேண்டும். அப்பொழுது தான் நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் செயல்பட முடியும். வேலைகளின் இடைவெளிகளில் பத்திலிருந்து இருபது நிமிடத்திற்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டும்.

ஸ்குவாட்ஸ்
இது பாடி பில்டிங் செய்வதற்கான ஒரு வித பயிற்சி. இதை தொடர்ந்து செய்வதால் உடலுக்கு வலிமை சேர்த்து, தசைகளை சேகரித்து ஆரோக்கியமான, கட்டுக்கோப்பான உடலை பெற முடியும்.

டெட் லிப்ட்ஸ்
இவை ஒருவித தசைகள் பெற உதவும் பயிற்சி. இதனை வெயிட் லிப்டிங் செய்வது போன்று தொடர்ந்து செய்து வந்தால், அதிக பலன் அடைய முடியும்.

புரதம்
உடல் பலத்தை அதிகரிக்க வெயிட் பயிற்சி செய்கின்றீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் எடுத்து கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். பயிற்சி செய்யும் போது, அதிக சக்தி வெளியேறும் ஆகையால் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக பலம் பெறும் புரதம் உதவுகின்றது.

சரியான நிலை
தசைகளை பலப்படுத்த வெயிட் பயிற்சி கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பயிற்சி செய்யும் போது, அதற்கான கோட்பாடுகளுடன் செய்வது மிக மிக அவசியம்.

பயிற்சிக்கு பின் உணவு எடுத்து கொள்ளுதல்
பயிற்சிக்கு பின் சத்தான உணவை எடுத்து கொள்ள வேண்டும். நண்டு மற்றும் புரத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவை இன்சுலினை அதிகப்படுத்தி தசைகள் வளர்வதற்கு உதவுகின்றது.

தூக்கம்
பயிற்சி செய்வதால் உடலில் உள்ள சக்திகள் அதிக அளவில் வெளியேறுவதால் நல்ல உணவு, நீர் இவற்றுடன் நல்ல தூக்கமும் அவசியம். நன்றாக தூங்கினால் தான் உடலுக்கு தேவையான சக்தியை பெற முடியும். தசைகளும் பலமாக இருக்கும்.

தசைகளுக்கான உணவு
மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அவை தசைகள் பலம் பெற தேவை. அது போன்று முட்டையும் மற்ற புரதச்சத்து அடங்கிய உணவுகளும் இரும்பு போன்ற பலத்தை தரும். அதனுடன் வியக்க வைக்கும் தசைகள் பெறவும் உதவும்.

ஆரோக்கியமான கொழுப்பை ஒதுக்காதீர்கள்
கொழுப்பு கெடுதி என்று அதை அப்படியே ஒதிக்கி விடாதீர்கள். ஆரோக்கியமான கொழுப்பு மிக மிக தேவை. உடல் வலிமையை அவை அதிகரிக்கும்.

கார்டியோ
கார்டியோ மிக மிக அவசியம். இவற்றை தினமும் செய்வதால் மிக அதிகமாக தசைகள் தோன்றாமல் பார்த்து கொள்ள முடியும். அளவுடன் இருந்தால் பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும்.

பாடி பில்டிங் அதிக நேரம் எடுத்து கொள்ளும்
பாடி பில்டிங் செய்யும் போது நேரம் போகின்றது என்று கவலை கொள்ளக் கூடாது. இதற்கு அதிக நேரம் தான் ஆகும். பொறுமையாகவும், நிதானமாகவும், அடிப்படை செயல் கூறுகளுடனும் இவற்றை செய்ய வேண்டும். அதற்கு அதிக நேரம் ஒதுக்கினால் தான் சிறப்பாக செய்ய முடியும்.



Click it and Unblock the Notifications