For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லைப் நல்லா இருக்க லைப் ஸ்டைலை மாற்றுங்க!

By Mayura Akilan
|
Take Steps To Save Your Heart
உடல் உறுப்புகளில் இதயத்தின் பங்கு முக்கியமானது இந்த இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான வழிமுறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுபவர்களுக்கு இதயநோய் எளிதாக வரும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். மாதத்திற்கு 100 கிலோ மீட்டர் தூரம் நடப்பவர்களுக்கு இதயநோய் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.

இதய நோய் என்பது மட்டுமல்ல, இதய வால்வுகள் தசை நார்கள் கூட பாதிக்கலாம். நாமெல்லாம் நினைப்பது போல மாரடைப்பு ஒன்றும் புதிய யுகத்தின் புதிய வரவல்ல, கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டு முன்னாலேயே திருமூலர் மாரடைப்பை பற்றி பாடியுள்ளார்.

வயிறு' முன்னே சென்றால், ஆரோக்கியம், பின்னே செல்லும் என்று ஒரு பழமொழி உண்டு. எனவே வாயைக்கட்டினால், நோயைக் கட்டலாம்' என்பது சித்தர்வாக்கு. எனவே உண்டியை சுருக்கி', ஆயுள் ரேகையை நீட்டலாம்.

சாத்வீகமான குணங்கள்

நாம் என்ன உண்ணுகிறோமோ அது நமது உடல் நலம், மனநலம் இரண்டையும் தீர்மானிக்கிறது. பழங்கால காய்கறிகள் போன்றவை நமது உடலைப் பேணுவதுடன் அமைதியான சாத்வீகமான குணங்களை வளர்க்கும்.

இதய நோய்க்கான அஸ்திவாரம் சிறு வயதிலேயே உணரப்படுகிறது. எப்போது குழந்தை தாய் பால் குடிக்க ஆரம்பிக்கிறதோ அன்றே இதயத்தின் ரத்த நாளங்களில் கொழுப்பு படர ஆரம்பித்துவிடுகிறது. ஆரம்பித்து விடுகிறது. எனவே கண்டதையெல்லாம் சாப்பிட்டு எடையை ஏற்றிக் கொண்டால் சிறு வயதிலேயே ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் எல்லாம் கியூ' வரிசையில் வந்து, மாரடைப்புக்கு அஸ்திவாரம் போட்டுவிடும்.

இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தை முதலே பெற்றோர்களும், பிட்ஸா, மசாலா பண்டங்களை உண்ணக்கொடுத்து குழந்தைகளின் மனம் மற்றும் உடல் நலத்தை கெடுத்துவிடுகின்றனர். அதிக கொழுப்பு உண்ண உணவுகள் ரத்தக் குழாய்களில் படியும் படி செய்து இளம் வயதிலேயே இதய நோய் ஏற்பட வழி வகுக்கிறது.

தொலைகாட்சியும் காரணம்

டி.வியும், கம்ப்யூட்டரும் இன்றைக்கு பெரும்பாலானவர்களின் பொழுது போக்காக உள்ளது. மணிக்கணக்கில் உட்கார்ந்து இருப்பதுதான் உடலுக்கு சரியாக உழைப்பில்லாமல் போய்விடுகிறது. இவற்றிலிருந்து வரும் கதிர் வீச்சு மற்றும் எலக்ட்ரோ ரேடியேஷன் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகிறது.

அதிகரிக்கும் இதயத்துடிப்பு

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க வேண்டும் என எப்போதும் பரபரப்பாக இருப்பவர்களுக்கு இருதய துடிப்பு அதிகரிக்கிறது இதனால் இதயத்தின் ஒர்க் லோடு அதிகரித்து இதயத்தை பாதிக்கும். இப்படிப்பட்டவர்கள் பொதுவாக கேரி ஒர்க் அண்ட் புல்லி' என்ற வாழ்க்கை முறையை கை கொள்ளுவதுடன், உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பர் இவர்களை டைப் ஏ' பர்சனாலிட்டி என்று கூறுவர். இவர்கள் போலின்றி டைப் பி' மனிதர்கள் அமைதி, நிதானம் ஆகியவற்றின் உருவமாக இருப்பார்கள். இவர்களுக்கு இதய நலம் நன்கு பாதுகாக்கப்படுகிறது. டைப் ஏ' மனிதர்கள் தியானம் செய்து தங்கள் குணநலன்களை மாற்றிக் கொள்ளலாம்.

நூத்துக்கு நூறு

நூறு கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் ஒரு 100 பேர் கூட 100 வருடம் வாழ்வதில்லை. நூறு வருடம் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக் கூடாது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். 100 வயது வாழ முதல்படி, உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு, குறைந்த பட்சம் 8 மணி நேர உறக்கம் ஆகும். இது தவிர 100' மிகி கீழே சர்க்கரை 100 மி.கிக்கு குறைவாக எல்.டி.எல். கொலஸ்டிரால் என்ற செறிவு கொழுப்பு, 100 மி.மீட்டருக்கு குறைவாக ரத்தக் கொதிப்பு இருக்க வேண்டும். வாரத்திற்கு 100 நிமிடம் நடக்க வேண்டும், மாதத்திற்கு 100 கி.மீ. நடக்க வேண்டும். வாரத்திற்கு 100 நிமிடம் தியானம் செய்து மன அமைதி பெறலாம்.

20 – 20 பார்முலா

அசையாமல் பல மணி நேரம் உட்கார்வது காலில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் உறைய வாய்ப்பு தருகிறது. அவர்கள் பிறகு நடக்கும் போது இந்த ரத்தக் கட்டிகள் இதயத்திற்கு பம்ப் செய்யப்பட்டு மாரடைப்பினை விட கொடிய நோயான பல்மனோ கொலஸ்ட்ரால்' என்ற நோயை ஏற்படுத்தி, நொடியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் இதனைத் தவிர்க்க அவர்கள் 20 -20-20 என்ற பார்முலாவை கடை பிடிக்க வேண்டும். 20 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து 20 அடி நடக்க வேண்டும் கண்களில் கண்ணீர் வற்றாமல் இருக்க, விழித்திரையை பாதுகாக்க 20 முறை தூரத்தில் கிட்டத்தில் பார்வையை செலுத்த வேண்டும். 20 முறை வேண்டும் எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும். அப்போது இதயம் பாதுகாக்கப்படும்.

இன்று மது, போதை என இளைஞர்கள் சுற்றுவதால் 30 வயதிற்குள் மாறிவரும் கலாச்சாரத்தால் பெற்றோர்கள் இறக்கும் முன்பே 20-30 வயது இளைஞர்கள் இறந்து போவது இனியொன்றும் பெரிய அதிசயமாக இருக்காது. வருமுன் காப்பதே சிறப்பு என்பதை நாம் உணர்த்த வேண்டும். இல்லையெனில் லப்டப் என்ற இதய சங்கீதம் ரம்' தம்' என மாறி மனிதனின் வாழ்க்கை அபஸ்வரமாக மாறி விடும்.

வாழ்வில் மிகவும் மனதை மயக்கும் விஷயங்கள் அறிவை மயக்கி அழிவிற்கு அச்சாரம் போட்டு விடும். உண்மையான நன்மையான வானவில்' வண்ணமயமான பழங்கள் காய்கறிகள், ஆகியவையாகும், கண்ட கண்ட உணவுகளை ஒதுக்கி கனிகள் உண்டால் அதிலுள்ள புரோட்டின் உடலில் வயோதிகத்தை தடுத்து இருதய நோய் மற்றும் புற்று நோயிலிருந்து காப்பாற்றும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

மலச்சிக்கலை இல்லாமல் இருக்க பழவகை நார்ச்சத்துள்ள உணவுகள் தினம் 10 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள கழிவுப்பொருட்கள் மலம் மற்றும் சிறுநீரில் பிரிந்து செல்லும். ரத்தத்தில் கொழுப்பு குறையும்.

லைப்ஸ்டைல்' என்றால் ஸ்டைலாக உடை உடுத்துவது அல்ல. சரியான வாழ்க்கை முறை என்று அர்த்தம். ஆகையால் ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டால் நம்பிக்கையை கைவிடாமல் வாழ்க்கை முறையை சீராக மாற்றி அமைத்தால் நிச்சயமாக நாம் நோயிலிருந்து மீண்டு வந்து மீண்டும் ஆரோக்கியமாக வாழலாம்.

English summary

Take Steps To Save Your Heart | லைப் நல்லா இருக்க லைப் ஸ்டைலை மாற்றுங்க!

Heart disease can often be prevented, or at least postponed for many years, by making the right lifestyle choices. Now that the new year is here, it's a good time to take stock, and make the decision to save your heart while there's still time.
Story first published: Tuesday, May 1, 2012, 9:41 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more